Published:Updated:

அப்யூசிவ் ரிலேஷன்ஷிப்பிலிருந்து சிலர் விலகத் தயங்குவது ஏன்?!

அப்யூசிவ் ரிலேஷன்ஷிப்பிலிருந்து சிலர் விலகத் தயங்குவது ஏன்?!
அப்யூசிவ் ரிலேஷன்ஷிப்பிலிருந்து சிலர் விலகத் தயங்குவது ஏன்?!

2017-இல், இந்நாள் அல்லது முன்னாள் காதலர்களால் கொல்லப்பட்டவர்கள் 30,000 பெண்கள். இதன்படி, உயிருக்குயிராக நம்பப்படும் நபர்களின் கைகளாலேயே ஒவ்வொரு நாளும் உலகில் 137 பெண்கள் உயிரிழக்கிறார்கள்.

அப்யூசிவ் ரிலேஷன்ஷிப்பிலிருந்து சிலர் விலகத் தயங்குவது ஏன்?!

பண்பாடே அதுதான். சமீப நாள்களாக இப்படியான அப்யூசிவ் உறவுகளில் சிக்கி வெளிவர முடியாமல் தவிக்கும் நண்பர்களிடம் வைத்த கேள்வியும், அவர்கள் நமக்குத் தரும் எல்லா பதில்களுமே ஏறத்தாழ ஒன்றுதான். ``எதற்காக விலகி விடக்கூடாது” என்னும் கேள்விகள், அவர்களிடம் ஏற்படுத்தும் பயத்தையும், துயரத்தையும் பார்த்ததுதான், அவர்களின் இந்தப் பதில்களைப் பதிவு செய்வதற்கான காரணம்.

பண்பாடாக மாற்றப்பட்டிருக்கும் வன்முறை:

குடும்பத்துக்குள் நிகழும் வன்முறைகளை, ‘எல்லா வீட்டுக்கும் ஒரு வாசல்’ எனும் போக்கில் சாதாரணமானதாக, கிட்டத்தட்ட ஒரு பண்பாடாக எல்லா மதங்களும் மாற்றிவைத்திருக்கின்றன. பேச்சுவார்த்தைகள் நடக்காத, மற்றவர்களின் துயரங்களுக்கு காது கொடுக்காமல் இருக்கும் சமூகமும் அதைத்தான் விரும்புகிறது. `அடிச்சுக்குவாங்க, சேர்ந்துக்குவாங்க’ என்று எல்லாவிதமான உறவுகளையும் போலவே பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் செய்துவிடுவதால், சமயத்தில் நாம் கொடுமைக்குள்ளாக்கும் உறவில் இருக்கிறோமா, இல்லையா என, ‘அவரே கன்பீஸ் ஆயிட்டாரு’ ரேஞ்சுக்கு யோசிக்க வைத்துவிடுகிறோம். வேறு யாருமல்ல. நாம்தான்.  

உணர்வுரீதியான வன்முறை:

இந்த தோழிக்கு புன்னகைப்பதற்காகவே செய்யப்பட்ட முகம். கடந்த மூன்று மாதங்களாக புன்னகைப்பதை மறந்துவிட்டிருந்தார். எதையெதையோ பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய வார்த்தைகள் எல்லாமும் தன் மீதான நேசத்தை இழந்ததாகவே இருந்தது. அவர்களின் காதல் உறவில் எந்த பிரச்னையும் இல்லை என்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். `என்னை அடிப்பதே இல்லை!’ என அவரைக் காப்பாற்றிக்கொண்டே இருந்தார். உடல் ரீதியான வன்முறையைச் செய்யாமல் இருந்தாலே அது நல்ல வாழ்க்கைதான் என்னும் நிலையில் அவர் இருந்தார். உணர்வு ரீதியாக அழுது அழுது, கருணைத் தந்திரங்களை வைத்தே அவரை அடிமைப்படுத்தியிருந்த அந்த ‘நல்ல’ ரிலேஷன்ஷிப்பிலிருந்து மீண்டு வர இன்னும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார். 

ஆயுதமாகும் கருணை:

ஒவ்வொரு முறையும் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி முடித்ததும் மண்டிபோட்டு மன்னிப்புக் கேட்டு அன்றைய நாளுக்கு தப்பிவிடும் கூட்டமொன்று இருந்துகொண்டே இருக்கிறது. இந்த மன்னிப்பு கேட்கும் தந்திரத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர்களிடமிருந்து, ’தப்பிச்சு எப்டியாவது ஓடிவிடு உயிரே’.

விலகும் உரிமைக்கு அளிக்கப்படும் தண்டனை:

காதல் உறவிலிருந்து விலகுவது இப்போது கடினமானது மட்டுமல்ல, உயிருக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா, சோனியா, வேளச்சேரி இந்துஜா, தற்போது நெல்லை மெர்சியின் மரணம் வரை, காதலிக்க மறுத்ததாலும், காதலிலிருந்து விலகியதாலும் ஆசிட் ஊற்றப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் வாழ்வு முடிக்கப்பட்ட சமீபத்திய உதாரணங்கள். பெண்கள் கொல்லப்படுவது குறித்து `Global Study on Homicide’ நடத்திய சர்வதேச ஆய்வு இப்படிச் சொல்கிறது. 2017-ல், இந்நாள் அல்லது முன்னாள் காதலர்களால் கொல்லப்பட்டவர்கள் 30,000 பெண்கள். இதன்படி, உயிருக்கு உயிராக நம்பப்படும் நபர்களின் கைகளாலேயே ஒவ்வொரு நாளும் உலகில் 137 பெண்கள் உயிரிழக்கிறார்கள்.

சொந்த பந்தங்கள், சமூக வலைதளங்கள் என இன்னும் பலதரப்பும் Perfect Relationship-ல் இருக்க வலியுறுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், `நடிக்கவாவது செய்யலாம்’ என்று சிலர் எடுக்கும் முடிவுகளைப் பற்றி அச்சம் தெரிவிக்கிறார்கள் மனநல மருத்துவர்களும், ஆலோசகர்களும். சுற்றி இருக்கும் அனைவரும் என்ன நினைப்பார்கள் என்னும் பயத்திலும், எந்த நேரத்திலும் நம்மைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டிருப்பார்கள் என்ற பிரமையிலும் வாழ்வதாகச் சொல்கிறார்கள்.

வாழ்க்கை என்பது பகிர்வு!

அடுத்த கட்டுரைக்கு