Published:Updated:

தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!

தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!
பிரீமியம் ஸ்டோரி
தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!

பேட்டி - வின்டேஜ் பைக் கலெக்டர்

தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!

பேட்டி - வின்டேஜ் பைக் கலெக்டர்

Published:Updated:
தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!
பிரீமியம் ஸ்டோரி
தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!

பிரியாணியை விட பழைய சாதத்துக்கு எப்போதுமே ஒரு மவுசு உண்டு. 50 லட்ச ரூபாய் ஹார்லியைவிட 50 வருஷத்துக்கு முந்தைய ஜாவா பைக் பார்த்தால்தான் ஓடிப் போய் செல்ஃபி எடுக்கத் தோன்றுகிறது. அண்ணா நகர் சுமந்த்திடம் எக்கச்சக்க செல்ஃபி எடுக்கலாம். அட ஆமாங்க! 82 வின்டேஜ் பைக்குகளை தன் கராஜில் நிறுத்தி வைத்திருக்கிறார் சுமந்த். 

தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!

‘‘1984-ல் ஒரு நார்ட்டன் 650 சிங்கிள் சிலிண்டர் பைக் சைடு காரோடு சேர்த்து வாங்கினேன். அதை வெச்சிக்க என்கிட்ட இடம் இல்லை. அதனால வித்துட்டேன். 26 வருஷம் கழிச்சு 2000-த்துல ஏற்காடுல அந்த பைக்கை ஒருத்தர்கிட்ட பார்த்தேன். பேரம் பேசாம அப்படியே திரும்ப வாங்கி ரீஸ்டோர் பண்ணுனேன். நான் வாங்கிய முதல் பைக்கும், நான் சேகரிச்ச முதல் பைக்கும் அதுதான். அதுக்குப் பிறகு, இந்த வின்டேஜ் பைக்ஸ் மேல எக்கசக்க காதல். இந்த 18 வருஷத்துல என்கிட்ட 82  வின்டேஜ் பைக்ஸ் சேர்ந்துடுச்சு. எல்லாத்தையும் நீங்க அவ்ளோ ஈஸியா பார்க்க முடியாது!” என்றவரை மெக்கானிக் அழைக்க.... கூடவே போனோம்.

1950-ம் வருஷ டிரையம்ப் டைகர் T100 பிரித்து வைக்கப்பட்டிருந்தது. முதல் முறை 100 கி.மீ வேகம் தொட்ட பிரிட்டிஷ் பைக் இது என்பதாலேயே, இதற்கு `T100’ என பெயர் வைத்தார்களாம். அருகிலேயே டைகர் 1050 ஸ்போர்ட் நின்றிருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பே டைகர் ஸ்போர்ட்டின் விற்பனையை நிறுத்திவிட்டார்கள் என்பது நினைவுக்கு வர, சுற்றிப் பார்த்தோம். உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 1892 பிர்மிங்காம் சைக்கிள் முதல் எம்.வி அகுஸ்டா AGO வரை பார்க்க கிடைக்காத பல பைக்குகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள் நின்றிருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!

‘‘என்கிட்ட இருக்குறதுலயே பழைய பைக் 1926 பிஎஸ்ஏ. இந்த பைக்கை 3,000 ரூபாய்க்கு வாங்கி முழுசா ஒரிஜினல் பாகங்களை வெச்சு ரெஸ்டோர் பண்ணேன். இந்த பைக்கை பழையபடி கண்டிஷனுக்கு கொண்டுவர ஒன்பது வருஷம் ஆச்சு’’ என்றார் சுமந்த். 1910-ம் ஆண்டுதான் முதன்முறையாக பிஎஸ்ஏ நிறுவனம் பைக் தயாரிப்பில் இறங்கினார்கள். அதனால் 1920 பைக் எல்லாம் காணக்கிடைக்காத பொக்கிஷம்தான்.  இதன் மதிப்பு இப்போது 30 லட்சம் ரூபாய் வரை போகும். வெளிநாடுகளில் விற்பனை செய்தால், அரை கோடியைத் தாண்டும்.

``நீங்க இதுவரைக்கும் ஒரு பைக்கைக்கூட விற்றதே இல்லையா?’’ என சுமந்திடம் கேட்டேன். ‘‘ஒரு பைக் மட்டும் வித்திருக்கேன். அதுவும் கேப்டன் தோனி கேட்டதால் மட்டும்தான் கொடுத்தேன். வேற யார் கேட்டிருந்தாலும் கொடுத்திருக்க மாட்டேன்” என்று கேப்டன் கூலுக்கு பைக் கொடுத்த கதையை கூலாகச் சொன்னார். தன்னிடம் இருந்த 1940 நார்ட்டன் பைக்கைப் பற்றித் தெரிந்துகொண்டு அந்த பைக் வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறார் தோனி. 

தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!

``தோனி ஒரு பெரிய பைக் கலெக்டர். வேற ஒருத்தர் மூலமா பேசி பைக்கைக் கேட்டார். நான் தரவே இல்லை. கடைசியா அவரே போன் பண்ணிட்டார். அப்புறம்தான் கொடுத்தேன். இப்போ அது அவரோட ரெகுலர் பைக்கா இருக்கிறதுல எனக்குச் சந்தோஷம்தான்!” என சிரித்தார் சுமந்த்.

‘’திடீர்னு வின்டேஜ் பைக்ஸ் மேல ஏன் இவ்ளோ காதல்... இதுக்குப் பின்னாடி எதாவது ஒரு கதையிருக்குமே?’’ என்றேன். ``ஒரு கதையா இருந்தா சொல்லாம். ஒவ்வொரு பைக்குக்கும் ஒரு கதையிருக்கு. சேலம் போயிருந்தப்போ கோழிப்பண்ணையில் ஒரு பைக் கெடந்துச்சு. கோழிக்குத் தீனிபோடுற ஸ்டாண்டாதான் அதை வெச்சிருந்தாங்க. அதை நான் வாங்கி ரெஸ்டோர் பண்ண கிட்டத்தட்ட 10 வருஷம் மேல ஆச்சு. ஹிஸ்டரி டிவிக்காரங்க `25 லட்சம் தர்றேன்’னு அந்த பைக்கை விலை பேசினாங்க.  நான் கொடுக்கல. இதுக்காக நான் ஒவ்வொருத்தர் பின்னாடியும் அலைஞ்சது, வருஷக்கணக்கா அதுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் தேடினது, ஒவ்வொரு பைக்கைப் பற்றியும் தெரிஞ்சிக்கிற ஆர்வம் இதுக்கெல்லாம் விலை கொடுக்க முடியுமா என்ன?” - எமோஷனலாகக் கேட்டார் சுமந்த்.

மேட்ச்லெஸ், ஏஜேஎஸ், இந்தியன், பிஎஸ்ஏ, உலகப்போருக்கு முந்தைய என்ஃபீல்டு, ஜாவா, பாபி பைக்குகளைத் தனித்தனியாகப் பார்த்திருக்கிறோம். ஆனால், எல்லா பைக்குகளையும் ஒன்றாகப் பார்ப்பது என்பது ஒரு வரம். நமக்கு அது கிடைத்தது. Velocette LE பைக்கை முதல் முறை இங்குதான் பார்த்தோம். 1948-ல் வந்த ட்வின் சிலிண்டர், ஷாஃப்ட் டிரைவ் பைக் இது. இந்த பைக்கை ரெஸ்டோர் செய்ய 13 ஆண்டுகள் ஆனதாம். இந்த பைக்கிற்குப் பாகங்கள் கிடைப்பதும் மெக்கானிக்குகள் கிடைப்பதும் அவ்வளவு சிரமம். `` நான் வாங்கும் ஒவ்வொரு பைக்கைப் பற்றியும் முக்கால்வாசி விவரங்கள் எனக்குத் தெரியும். பாகங்களை ebay-யில் வாங்கலாம். ஆனா, அது சரியான பார்ட்ஸ்தானானு தேர்ந்தெடுத்து வாங்குறதுதான் பெரிய சவால்” என்றவர், திடீரென கமல்ஹாசன் பக்கம் பேச்சைத் திருப்பினார்.

தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!

``கமல்ஹாசன் பயங்கர பைக் பிரியர். அவர்கிட்ட ஒரு மேட்ச்லெஸ் ஸ்கிராம்ப்ளர்  பைக் இருக்கு. அந்த பைக்கை அவர் 20 வருஷமா யூஸ் பண்ணவேயில்லை. அந்த பைக்கை அவருக்காக ரெஸ்டோர் பண்ணித்தரச் சொல்லிக் கேட்டுட்டே இருந்தார். என்னோட பைக்கா இருந்தா எவ்வளவு நேரம் எடுத்தாலும் பரவாயில்லைனு செஞ்சுடுவேன். ஆனா, அது அவரோட பைக். சொன்ன நேரத்துல  செஞ்சு கொடுக்க முடியலைன்னா பிரச்னை ஆகிடுமேன்னு மறுத்திட்டேன். ஆனா, ஏன் மறுத்தோம்னு இன்னைக்கு வரைக்கும் ஃபீல் பண்றேன்!’’ என்கிறார் சுமந்த்.

`என்ன செய்தார்கள் என்பதைவிட, இன்னும் செய்ய என்ன இருக்கிறது என்பதை யோசி!’  என்று ஒரு பழமொழி இருக்கிறது. சுமந்தின் கலெக்‌ஷன்களில் விட்டுப் போனவை என்ன என்ற கேள்வியோடு அலுவலகத்துக்கு திரும்பினோம்.

ரஞ்சித் ரூஸோ படங்கள்: சிவதாஸ் வசந்தன்

தோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி!

பழசானாலும் எல்லாமே இப்போ புதுசு!

வி
ன்டேஜ் கார்களையும் வின்டேஜ் கார் காதலர்களையும் ஒவ்வோர் ஆண்டும் `மெட்ராஸ் ஹெரிடேஜ் கிளப்’ நடத்தும் வின்டேஜ் ராலியில்தான் பார்க்க முடியும். பளபளப்பான நீல நிற ஆஸ்டின் கூப்பர் காரைக் கடந்தபோது, ``இந்த கூப்பர் கார் செஞ்சப்போ, ஆஸ்டன்-மோரிஸ் ரெண்டு இங்கிலாந்து கம்பெனியும் ஒண்ணாத்தான் இருந்துச்சு. அப்புறம் பரம எதிரி ஆகிடுச்சு. `இட்டாலியன் ஜாப்’ படத்துல இதே மாதிரி மூணு கார் வரும். வெள்ளை, சிவப்பு, நீலம் -சேஸிங் சீன்ல வெள்ளை கார் செம டக்கரா இருக்கும்” என ஒரு தாத்தா ஹிஸ்டரி டீச்சர் கணக்காக அங்கிருந்த இளசுகளுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

பழுப்பு நிறத்தில் படகு போன்று ஒரு கார். பக்கத்தில் சென்று பார்த்தோம், ``இங்க வாடா... ஆஸ்டன் மார்ட்டின் விண்டு டனல்ல டெஸ்ட் பண்ணி ஏரோடைனமிக்கா செஞ்ச முதல் கார் இதுதான்” என ஒருவர் தன் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ``டிபி-னா டேவிட் பிரவுன்தானே. யார் இவன்? முதல் ஜேம்ஸ் பாண்டு ஹீரோவா?” என கமென்ட் அடித்துக் கலாய்க்க, பக்கத்தில் இருந்த நடுவயதுக்காரர் ``ஜீ, அவர் ஒரு பிசினஸ்மேன். ஆஸ்டன் மார்ட்டின் கம்பெனியை அவர் வாங்கினப்போ, நம்ம பேரு கார்ல இருக்கட்டுமேனு அதுல டிபி-னு அடிச்சார் அவ்ளோதான்” என்று கருத்தாகப் பேசினார். ஒவ்வொரு கார் பற்றியும் இப்படி ஒவ்வொரு விதமான கமென்ட்கள் கேட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism