விநாயகர் சதுர்த்தியை, பிள்ளையாருக்குப் பிடித்த பலகாரங்களுடன் கொண்டாடுவோமா? இதோ... கரூர் சரஸ்வதி அசோகன் வழங்கும் பிள்ளையார் ரெசிப்பிகள் உங்களுக்காக!

ட்ரை ஃபுருட்ஸ் மோதகம்

மேல் மாவு தயாரிக்க:

பச்சரிசி மாவு - 200 கிராம்
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
(கொதிக்கவைத்துக் கொள்ளவும்)
நெய் - ஒரு டீஸ்பூன்

பூரணம் தயாரிக்க:

வெல்லம் - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - 50 கிராம்
கசகசா - 5 கிராம்
பாதாம் - 5
பிஸ்தா - 5
முந்திரி - 5
வால்நட் - 5
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்

செய்முறை : மேல் மாவு தயாரிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒரு பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து, கொழுக்கட்டை பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், கசகசாவை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து சற்று கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் தேங்காய்த்துருவல், பொடித்துவைத்துள்ள ஃடிரைஃப்ரூட்ஸ் கலவை ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால் கொழுக்கட்டைக்கான பூரணம் தயார். இனி, பிசைந்து வைத்துள்ள கொழுக்கட்டை மாவினை அச்சில் வைத்து அதன் மீது பூரணத்தை வைத்து, ஸ்டஃப் செய்து மூடி, கொழுக்கட்டைகளாக பிடித்துக்கொள்ளவும். பிறகு அச்சிலிருந்து மாவினை எடுத்து இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவிட்டு இறக்கினால், ட்ரை ஃப்ருட்ஸ் மோதகம் தயார்.

அவல் கொழுக்கட்டை

மேல் மாவு தயாரிக்க:

பச்சரிசி மாவு - 100 கிராம்
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - ஒரு டீஸ்பூன்

பூரணம் தயாரிக்க:

சிவப்பு அவல் - 200 கிராம்
நெய் - 4 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - 100 கிராம்
முந்திரி - 5 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை : மேல் மாவு தயாரிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒரு பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து, கொழுக்கட்டை பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அவலைச் சேர்த்து 2 நிமிடம் வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, வறுத்து வைத்துள்ள அவலில் ஊற்றி அவலை 15 நிமிடம் ஊறவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும், ஊறவைத்துள்ள அவலைத் தண்ணீர் வடித்துச் சேர்க்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல், முந்திரி, ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து கிளறி இறக்கினால் கொழுக்கட்டைக்கான பூரணம் தயார். இந்தப் பூரணத்தை, ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள மேல் மாவினுள் வைத்து ஸ்ட்ஃப் செய்யவும். பிறகு கொழுக்கட்டை அச்சில் வைத்து மூடி எடுத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

முளைக்கட்டிய பயறு கொழுக்கட்டை

தேவையானவை:

பாசிப்பயறு - 100 கிராம்
தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன்
வெல்லம் - 150 கிராம்
பச்சரிசி மாவு - 100 கிராம்
எள் - ஒரு டேபிள் டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
பச்சரிசி மாவு - 100 கிராம்
நெய் - 3 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு (கொதிக்கவைத்துக் கொள்ளவும்)

செய்முறை :அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் எள், முளைக்கட்டிய பயறு, தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி வெல்லம் , ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். சூடாக இருக்கும்போதே இக்கலவையைக் கொழுக்கட்டை மாவுடன் சேர்த்து நெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி கை பொறுக்கும் சூட்டில் கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். பிறகு, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

சிவப்பரிசிக் கொழுக்கட்டை

தேவையானவை:

சிவப்பு பச்சரிசி - 200 கிராம்
நெய் - 4 டீஸ்பூன்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை : சிவப்பரிசியை ஐந்து மணிநேரம் ஊறவைத்து பிறகு தண்ணீர் வடித்து, தோசை மாவு பதத்துக்கு மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும், அரைத்து வைத்துள்ள மாவினைச் சேர்த்து அது கெட்டிப்படும் வரை கிளறி இறக்கி ஆறவிடவும். பின்னர், கடலைப்பருப்பைக் குக்கரில் சேர்த்து வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் தேங்காய்த்துருவல், கடலைப் பருப்பு, வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் பூரணம் தயார். இப்போது ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள கொழுக்கட்டை மாவில் இந்தப் பூரணத்தை ஸ்டஃப் செய்து கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். பிறகு ஆவியில் வேகவைத்து இறக்கினால் சிவப்பரிசிக் கொழுக்கட்டை தயார்.

நீர் உருண்டை

தேவையானவை:

பச்சரிசி மாவு - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை- சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்த்துருவல் - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு (கொதிக்க வைத்துக்கொள்ளவும்)

செய்முறை : வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்தும் கடுகு சேர்த்து தாளித்து உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.

சூடாக இருக்குபோதே வேறொரு பாத்திரத்துக்கு மாற்றவும். அத்துடன் பச்சரிசி மாவு, உப்பு, நல்லெண்ணெய் சிறிது, தேவையான அளவு தண்ணீர் கலந்து கைப்பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடிக்கவும். பிறகு, ஆவியில் வேகவிட்டு எடுத்தால் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்ய `நீர் உருண்டை' தயார்.

பாசிப்பருப்பு மோதகம்

தேவையானவை:

பாசிப்பருப்பு - 25 கிராம்
பச்சரிசி மாவு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய்த்துருவல் - 3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
(கொதிக்கவைத்துக் கொள்ளவும் )

செய்முறை : பாசிப்பருப்பை ஆவியில் ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கவும். அடுப்பில் வாணலியை வைத்துப் பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கரையவிடவும். பிறகு, வடிகட்டிக்கொள்ளவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், வெல்லம், வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பச்சரிசி மாவு, உப்பு, நெய், தண்ணீர் விட்டு கொழுக்கட்டை பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். இனி மாவின் நடுவே பூரணத்தை வைத்து அச்சில் வைத்து மூடி எடுக்கவும். பிறகு, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

மேல் மாவு தயாரிப்பு

குறிப்பு: வீட்டிலேயே பச்சரிசி மாவு தயாரிப்பதாக இருந்தால், அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து நிழலில் உலரவிட்டு பிறகு ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவினை சுத்தமான வெள்ளை நிறத் துணியில் தட்டி இரண்டு நாள்கள் நிழலில் காயவிடவும். பிறகு, மாவை வாணலியில் சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

தொகுப்பு: சு. சூர்யா கோமதி
படங்கள்: என்.ராஜமுருகன்