Published:Updated:

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?
பிரீமியம் ஸ்டோரி
சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஹூண்டாய் எக்ஸென்ட் டீசல்

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஹூண்டாய் எக்ஸென்ட் டீசல்

Published:Updated:
சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?
பிரீமியம் ஸ்டோரி
சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

டூர் என்றாலே ஊட்டி, கொடைக்கானல்தான். ஆனால், பிரபலமான மலைப்பிரதேசங்களில் எவரும் கால் வைக்காத சில இடங்கள் இருக்கின்றன. ஊட்டி, கொடைக்கானலில் அப்படி நிறைய இடங்கள் உண்டு. ``ஊட்டிக்குப் போலாம். ஆனா போட்டிங், தொட்டபெட்டா, ஹார்ஸ் ரைடிங் இதெல்லாம் பார்த்துப் பார்த்து போரடிச்சிடுச்சு. வித்தியாசமா வேற எதுனா இடம் இருக்கா?’’ என்று வாய்ஸ் ஸ்நாப்பில் நச்சரித்தனர், சென்னை IBM-ல் பணிபுரியும்  காயத்ரி - நிஷாந்த் காதல் தம்பதியர்.

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

ஓர் அதிகாலையில் சென்னையிலிருந்து கோத்தகிரிக்குப் பறந்தது எக்ஸென்ட்.

* `காலையில கிளம்பினா சீக்கிரம் போயிடலாம்’ என மனக்கணக்குப் போட்டால், வண்டலூர் அதற்குப் பெரிய ஆப்பு வைத்துவிடும். அதனால் காலை 7 மணிக்குள் வண்டலூரைக் கடந்துவிட வேண்டும்.

* கோடைக்காலங்களில் செல்லும்போது, காய்ந்து கிடக்கும் காவிரி ஆற்றில் கிரிக்கெட் மட்டையுடன் இளசுகளைப் பார்த்தே பழக்கமாகியிருந்தது. ஆனால்,  ஆகஸ்ட் 7 அன்று காவேரி மருத்துவமனையில் குவிந்ததைவிடக் காவிரி ஆற்றில் இப்போது கூட்டம் கும்முகிறது. கரைபுரண்டு ஓடிய காவிரிக்கு முன் நிறைய பேர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

* சேலம் பைபாஸுக்கு வலதுபுறம் திரும்பினால், ஆத்தூரில் `முட்டல்’ என்றோர் அருவி உண்டு. ஒகேனக்கல், திற்பரப்பு போன்ற இடங்களைக் கற்பனை செய்துகொண்டு போனால், ஸாரி! ஆனாலும், கோவணத் துணிபோல வெள்ளையாக யாருக்கும் வலிக்காமல் விழும் முட்டல் அருவியில் குளிப்பதும் தனி சுகமாகத்தான் இருக்கும். இங்கே படகுச் சவாரியும் உண்டு. உள்ளூர்க்காரர்களுக்கு மினி டூரிஸ்ட் ஸ்பாட் இது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

* சங்ககிரி செல்லும் வழி முழுக்க பைபாஸில் ‘மண்பாண்டச் சமையல்’ என்ற பெயர்ப் பலகைகளைப் பார்க்கலாம். இடதுபுறம், `கிராமத்து மண்பாண்டச் சமையல்’ எனும் உணவகத்தில், நாட்டுக்கோழி உணவு ரொம்பப் பிரசித்தம். ‘நல்லவேளை, காலையில் பொங்கலை அடைச்சு மெமரி ஃபில் பண்ணலை. கமான் கன்ட்ரி சிக்கன்!” என்று வெறித்தனமாக வேட்டையில் இறங்கினார் நிஷாந்த்.

* காம்பேக்ட் செடான் கார் என்றாலும், நெடுஞ்சாலையில் ரொம்பவும் அலைபாயவில்லை எக்ஸென்ட். 120 கி.மீ-ல் சில ஃபோர்டு, ஃபோக்ஸ்வாகன்களே பின்னுக்குப் போயின.

* செல்லும் வழியில் ஈரோடு வழியே கொடிவேரி அணையில் சின்னதாக ஒரு போட்டோஷூட். வெள்ளம் வந்தாலும் வந்தது, இப்போது தமிழ்நாடு அணைகளும் தண்ணீர் தேசமாய் மாறியிருந்தன.

* சூடான மீன் வறுவலை முடித்துவிட்டு, மேட்டுப் பாளையத்துக்குப் பறந்தது எக்ஸென்ட். அதிலிருந்து இரண்டு பாதைகள். நேராகப் போனால் குன்னூர்-ஊட்டி. வலதுபுறம் திரும்பினால் கோத்தகிரி-ஊட்டி. கோத்தகிரி சாலை, செம என்டர்டெயின்மென்ட். ஏகப்பட்ட செல்ஃபி பாயின்ட்களில், தன் குல்ஃபியுடன் செல்ஃபி எடுத்துத் தள்ளினார் நிஷாந்த். 

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

* மொத்தம் 17 ஹேர்பின் பெண்டுகள். லேசாக மழை தூறிக் கொண்டிருந்ததால், சாலை செமயாக வழுக்கித் தள்ளியது. மழைக் காலங்களில் மலைச் சாலைகளில் பைக் ரைடிங்கைத் தவிர்ப்பதுதான் நல்லது. சில கார்களே வழுக்கிக்கொண்டு போவதைப் பார்க்க முடிந்தது.

* இருட்டியபோது கோத்தகிரி வந்திருந்தோம். நேராகப் போனால், கொட நாடு. இடதுபுறம் கோத்தகிரி. கோத்தகிரியில், ஊட்டி அளவுக்குத் தங்கும் இடங்கள் இல்லை என்பதை நினைவு கொள்க.

* ஆண்ட்ராய்டு போன் 13 டிகிரி என்றது. விறைக்கும் குளிரில் தங்கிவிட்டு, மறுநாள் காலை கேத்தரின் அருவிக்குக் கிளம்பினோம். கோத்தகிரியிலிருந்து 14 கி.மீ அரவேணு செல்லும் பாதை வழியாக வலதுபுறம் திரும்ப வேண்டும். பெரிதாக வழிகாட்டிப் பலகைகள் இல்லை. விசாரித்துதான் போக வேண்டியிருந்தது. ஆனால், சுற்றிலும் பச்சைப் பசேலென டீ எஸ்டேட்டுகள், வயல்வெளிகள், மழைத்தூறல் என பாதை போதை ஏற்றியது. புள்ள குட்டிகளுடன் புல் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமைகள் கூட்டம் அந்தச் சூழலுக்கு வேறு ஒரு கலர் கொடுத்தது.

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

* பார்க்கிங்கெல்லாம் இல்லை. ரோடு முடியும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு, புல்வெளிக்கு நடுவே... வீடுகளுக்கு நடுவே... பூக்களுக்கு நடுவே என சுகமான ட்ரெக்கிங் போனோம். ``பார்த்துப் போங்க. கரடிங்கள்லாம் வரும்’’ என்று கிலி கிளப்பினார்கள் ஊர்வாசிகள்.

* மழை நேரங்களில் கேத்தரின் அருவிக்கு டிராவல் செய்வது புத்திசாலித்தனமான விஷயமல்ல. திடும் என இறங்கும் பள்ளங்கள், மண்சரிவுகள் இவற்றிலெல்லாம் கவனம் தேவை. அருவியை நேரில் பார்த்ததும், ஏதோ ஒரு ஜென்நிலைக்குச் சென்றது மனம். சும்மாவே 15 டிகிரி கிளைமேட். அருவி நீரைச் சொல்லவா வேண்டும்? மைனஸுக்கு நெருக்கமாய் இருக்கும்போல! அத்தனை ஜிலீர்!

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

* `காக்பர்ன்’ என்கிற பிரிட்டிஷ் அதிகாரியின் மனைவி பெயர்தான் கேத்தரின். இவர்தான் கோத்தகிரியில் காபி விளைச்சலுக்கு ஆதாரமாம். இவரின் நினைவாகத்தான் இந்த அருவிக்கு `கேத்தரின் அருவி’ என்று பெயர் வந்ததாகச் சொன்னார்கள். 

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

* `அக்கம்பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்’ என்று பாடிய த்ரிஷாவுக்கு, இந்த கேத்தரின் அருவியைச் சமர்ப்பிக்கலாம். அருவிச் சலசலப்பு, இளையராஜாவுக்குச் சவால் விட்டுக் கொண்டிருந்தது. ஓடுகிற அருவி நீரில் குளியலை முடித்து விட்டு பார்க்கிங் இடதுபுறம் போனால், ஒரு கோபுரம். அதன் உச்சியிலிருந்து... கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான அடி பள்ளத் தாக்குக்கு நடுவே தடிமனான வெள்ளிக்கம்பியாய் 250 அடி உயரத்திலிருந்து விழுந்து கொண்டிருந்தது கேத்தரின் அருவி. ஆம்! நீலகிரியின் இரண்டாவது பெரிய அருவியாம் இந்த கேத்தரின் அருவி. 

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

* இருக்கையைவிட்டு எழுந்து சென்ற பிறகும் அமர்ந்திருக்கும் காதலியின் அழகைப்போல, ஊருக்கு வந்த பிறகும் மனதில் சப்பணமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறது கேத்தரின் அருவி.

`விஸ்வரூபம்’ கமல் மாதிரி சரசரவென ஆக்‌ஷனில் இறங்கினோம். கோத்தகிரி பக்கத்தில் கேத்தரின் அருவி மற்றும் சுண்டட்டி அருவி பற்றிக் கிடைத்த தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. இதில் கொடநாடு போகும் வழியில் உள்ள சுண்டட்டி அருவிக்குப் போக வேண்டுமென்றால், வனத்துறையினரின் அனுமதி அவசியம். மேலும், இது பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட் அல்ல என்பதால், வனத்துறையினரே இதை விரும்பவில்லை. அதனால், கேத்தரின் அருவிக்கு ஸ்கெட்ச் போட்டோம்.

கேத்தரின் அருவியும் பிரபலமாகவில்லைதான். ஆனால், சனி-ஞாயிறுகளில் கோவை, ஊட்டி, கோத்தகிரிவாசிகள் வார இறுதி நாட்களில் இங்குதான் ‘ஃப்ரீடம் பாத்’ எடுக்கிறார்களாம். “கிட்டத்தட்ட 1.5 கி.மீ ட்ரெக்கிங் போய்த்தான் கேத்தரின் அருவியில் நனைய முடியும்’’ என்றார்கள். எல்லாவற்றையும் முறையாக பிளான் பண்ணிக் கிளம்பினோம். எக்ஸென்ட் டீசல் காரில் சென்னையிலிருந்து கோத்தகிரி போய், இரவு தங்கிவிட்டு கேத்தரின் அருவியில் காலோ, தலையோ நனைப்பதுதான் திட்டம்.

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

க்ஸென்ட்டில் இரண்டாவது ஜெனரேஷன் வந்துவிட்டது. நாம் போனது ஃபர்ஸ்ட் ஜெனரேஷன். ஹூண்டாயைப் பொறுத்த வரை வசதிகளுக்குப் பஞ்சமே இல்லை. பட்டன் ஸ்டார்ட்டில் ஆரம்பித்து, கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏ.சி வென்ட், பவர் விண்டோ, ஸ்டீரியோ என எல்லாமே உண்டு. இந்த மிட் சைஸ் செக்மென்ட்டில் டிசையர், எக்ஸென்ட், அமேஸ் என எல்லாமே ராஜாதான். எக்ஸென்ட்டும் அப்படித்தான். இதன் டீசல் இன்ஜின், கிராண்ட் i10-ல் இருக்கும் அதே 1.1 இன்ஜின்தான் என்பதால், பர்ஃபாமென்ஸ் விரும்பிகளின் தேர்வாக இது இருக்காது. காரணம், இதன் 3 சிலிண்டர் இன்ஜின். ஆனால், இதே 3 சிலிண்டர் இன்ஜின்தான் இதன் மைலேஜுக்குப் பெரிதும் உதவும். கிட்டத்தட்ட 45 லிட்டர் டீசலில் 1,190 கி.மீ பயணிக்க முடிவது இந்த 3 சிலிண்டரால்தான். ``மைலேஜ்தானே எங்களை மாதிரி மிடில் க்ளாஸுக்கு முக்கியம்!’’ என்கிறார்கள் காயத்ரி - நிஷாந்த்.

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

நோட் பண்ணுங்க!

கோ
த்தகிரிக்கு வருபவர்கள், சீஸன் நேரத்தில் வந்தால் ரூம் புக்கிங் முன்கூட்டியே செய்வது அவசியம். ஊட்டிபோல் இங்கே மிகக் குறைந்த வாடகைக்கு ரூம்கள் கிடைப்பது கடினம். மழை நேரத்தில் கேத்தரின் அருவிக்குப் போவது நல்லதல்ல! கேத்தரின் அருவியைச் சுற்றிலும் உடைந்த பாட்டில்கள் கிடக்கின்றன; கவனம். கோத்தகிரியில் ஹோம் மேடு சாக்லேட்கள் என்று, பழைய ஸ்டாக்கைத் தள்ளிவிடுவதும் நடக்கும். எனவே, தெரிந்தவர்களை வைத்து சாக்லேட்கள் வாங்குவது நல்லது. கோத்தகிரிக்குச் செல்லும்போது நிச்சயம் க்ளோவ்ஸ், ஜெர்க்கின் அவசியம்.

என்ன பார்க்கலாம் கோத்தகிரியிலிருந்து..>

* உயிலட்டி அருவி (8 கி.மீ)

பிரபலமாகாத சுற்றுலாத் தலம். காட்டுக்கு நடுவே தனித்திருக்கும் அருவி. அடர்மழைக் காலங்களில் உயிலட்டி அருவிக்குச் செல்வதில் கவனம் தேவை.

* கொடநாடு வியூ பாயின்ட் (15.5 கி.மீ)

அருமையான வியூ பாயின்ட். கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், பச்சைப்பசேலென மனதைக் கொய்யும் வியூ கிடைக்கும்.

* ஜான் சல்லீவன் நினைவகம் (5.2 கி.மீ)

1817-ம் ஆண்டில் கோவை கலெக்டராக இருந்து ஜான் சல்லீவன்தான் ஊட்டியின் பெருமையை வெளி உலகிற்கு முதலில் சொன்னவர் . கண்ணேரிமுக்கு எனும் இடத்தில் உள்ள இவரின் நினைவகம், ஊட்டியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும்.

* லேம்ப்ஸ் பாறை (21 கி.மீ)

தூங்கும் பெண்ணைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்தப் பாறையின் உச்சியிலிருந்து பார்த்தால், பருந்துப் பார்வையில் கோவையை ரசிக்க முடியும்.

* டால்பின் நோஸ் (29 km)

குன்னூரில் இருக்கும் இதுவும் ஒரு வியூ பாயின்ட்தான். இங்கிருந்து பார்த்தால் பிரமாண்டமான கேத்தரின் அருவி ஒரு நூல் போல காட்சியளிக்கும்.

* பைக்காரா அருவி (50 கி.மீ)

இந்த அருவிதான் ஊட்டியின் மெயின் அட்ராக்‌ஷன். இதில் குளிக்கவெல்லாம் வேண்டாம்; பார்த்தாலே பரவசம் தரும்.

* கல்லட்டி அருவி (41 கி.மீ)

ஊட்டியில் உள்ள கல்லட்டி அருவிக்குப் பக்கத்தில் ஏகப்பட்ட பறவைகளையும் பார்க்கலாம்.

* மசினகுடி (56 கி.மீ)

ட்ரெக்கிங் பிரியர்களுக்குத் தீனிபோடும் ஸ்பாட். யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடு என எல்லா காட்டு விலங்குகளின் தரிசனமும் கேரன்ட்டி.

* அவலாஞ்சி (55.8 கி.மீ)

அமைதி விரும்பிகளுக்கான இடம். சுவிட்சர்லாந்து தீவைப்போல் பிரமாண்டமான அழகைக்கொண்டிருக்கும் அவலாஞ்சியில் எமரால்டு ஏரிக்குப் போயிட்டு வாங்க!

தமிழ் படங்கள்: கே.அருண்

சென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா?

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism