Published:Updated:

ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் - கார்

ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் - கார்

Published:Updated:
ஆக்சஸரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்சஸரீஸ்
ஆக்சஸரீஸ்

வொய்டு ஆங்கிள் ரியர் கான்வெக்ஸ் லென்ஸ்

பயன்: பிளைண்ட் ஸ்பாட் ஏற்படாது.

சிலருக்குக் கண்ணாடி பார்க்கும் பழக்கமே இருக்காது - அதாவது, கார் ஓட்டும்போது! யூ டர்ன் அடிக்கும்போது, ஓவர்டேக் செய்யும்போது, ரிவர்ஸ் எடுக்கும்போது, டாப் ஸ்பீடில் பறக்கும்போது... எப்போதுமே ரியர்வியூ மிரர், சைடு மிரரில் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியும் சிலர், க்ரீச் போட்டுவிடுவார்கள். காரணம், ரியர்வியூ மிரரில் ஏற்படும் பிளைண்ட் ஸ்பாட். இதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு கான்வெக்ஸ் லென்ஸ் உண்டு. சிறிதாக இருக்கும் குவி லென்ஸ் இது. `ஆப்ஜெக்ட்ஸ் இன் தி மிர்ரரை’ மிக அருகில் காட்டுவதுதான் இதன் வேலை. சாலையில் இருக்கும் சிறிய கல்கூட இதில் தெரியும் என்பதால், தன்னம்பிக்கையோடு காரைத் திருப்பலாம்; ஓவர்டேக் செய்யலாம். ஹைஸ்பீடில் போகும்போது, சில நேரம் மிக அருகில் இருக்கும் வாகனங்கள் ரியர்வியூ மிரரில், சைடு மிரரில் தெரிய வாய்ப்பில்லை. அந்தக் குறையை இது போக்கும். பெரும்பாலும், ஆஃப்ரோடு வாகனங்களில் இந்த வகை லென்ஸ்களின் பயன்பாடு அதிகம். வட்டவடிவமாக இருக்கும் இதை விங் மிரரிலேயே ஃபிட் செய்துகொள்ளலாம் என்பது இதன் ஸ்பெஷல். 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை ஆஃப்டர் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

ஆக்சஸரீஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோலார் பவர் கூல் வென்டிலேஷன் ஃபேன்

பயன்: சூடான காற்றை வெளியே தள்ளி, குளிர்க்காற்றைத் தக்கவைக்கும்.

வெயில் நேரத்தில் காரை பார்க் பண்ணுவது மிகப்பெரிய தொல்லை. அக்னி வெயிலில் 5 நிமிஷம்தான் நின்றிருக்கும். காருக்குள்ளே எரிமலைக்குழம்பு வெடித்ததுபோல் அவ்வளவு சூடு இருக்கும். விண்டோவைத் திறந்துவிட்டு, புளோயரை ஆன் பண்ணிவிட்டு ஏ.சி போடுவது இதற்குச் சரியான தீர்வுதான் என்றாலும், மீண்டும் பார்க் செய்யும்போது மறுபடியும் அதே சூட்டுப் பிரச்னை. சோலார் பவர் கூல் வென்டிலேஷன் காற்றாடி, இதற்கான தீர்வு. வெயிலில் காரை பார்க் செய்யும்போது, இதை ஆன் செய்துவிட்டால் போதும். உள்ளே சூடான காற்றைத் தங்கவிடாமல், காரை எப்போதுமே ஃப்ரெஷ்ஷாகவும் ஜில்லென்றும் வைத்திருப்பதே இதன் வேலை. சிறிய சைஸில் இருக்கும் இந்த ஃபேனை காருக்குள்ளே ஃபிட் செய்துவிட வேண்டும். ஆல் இஸ் கூல்!

ஆக்சஸரீஸ்

கார் சீட் மசாஜர்

பயன்: ப்ரீமியம் லுக் + உடல் வலியைப் போக்கும்.

டி, ஜாகுவார் போன்ற விலை அதிகமான பிரீமியம் கார்களில் மசாஜ் சீட் வசதி உண்டு. சொகுசைத் தாண்டி, இதில் கிடைக்கும் அதிர்வுகளால் உடலுக்கு மசாஜ் கிடைத்து, குளிர்காலங்களில் கதகதப்புத்தன்மை ஏற்பட்டு, வெயில் நேரத்தில் வியர்க்கவிடாமல் வைத்து... என மல்ட்டி ஃபங்ஷன் வேலைபார்க்கும் இந்த மசாஜ் சீட்கள், இப்போது ஆஃப்டர் மார்க்கெட்டிலும் கிடைக்கின்றன. நம் கார் சீட் அளவுக்கு ஏற்ப இந்த மசாஜ் சீட்களை வாங்கிப் பொருத்திக்கொண்டு சொகுசாக கார் ஓட்டலாம். என்ன... விலைதான் கொஞ்சம் அதிகம்.

தமிழ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism