பண மதிப்பிழப்பின்போது ‘அங்கே எல்லையிலே...’ என ராகமாய் பாட்டுப் பாடிய அதே கோஷ்டி, கேரள வெள்ளத்தின்போது, ‘சபரிமலைக்குள் பெண்களை அனுமதிச்ச சுப்ரீம் கோர்ட்னாலதான் இப்படி’ என முடிச்சுப்போடுகிறது. அவர்களின் விஞ்ஞான அறிவைக் கண்டு கால் நகமெல்லாம் சிலிர்க்க... சரி மேற்கொண்டு கொஞ்சம் தோண்டுவோம் என அகழ்வாராய்ந்ததில் கிடைத்தன பல உண்மைகள். ஒவ்வொரு இயற்கை பேரிடருக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது.

வர்தா புயல் வந்து தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டியது நினைவில் இருக்கலாம். வர்தா, உண்மையில் ஒரு பெரும் ஆபத்திற்கான முன்னெச்செரிக்கை அறிவிப்பே. ‘நானென்ன பிரமாதம், பின்னால பெருசா வருது பாரு’ என அது சொல்லிச் சென்ற இரண்டாவது வாரம், எஸ்.வி.சேகரின் அசுர காமெடியில் அவரின் மகன் ஆஸ்கர் லெவலுக்கு நடித்த ‘மணல்கயிறு 2 படம் ரிலீஸானது’. வார்னிங்கிற்கு தேங்க் யூ வர்தா!

பொதுவாக, சனிக்கிழமை விரதமிருந்து எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. அது சகல உயிரினங்களுக்கும் நடக்க வேண்டும் என்ற விதியின்படியே கடந்த ஆண்டு சென்னை எண்ணூரில், டன்டன்னாக எண்ணெய் கொட்டியது. இதன்மூலம் ஆயில்பாத் எடுத்த மீன்கள், முன்னோர்களுக்கும் சேர்த்துப் புண்ணியம் தேடிக்கொண்டன.

பருவமழையின்போது அரபிக்கடல் அதீதமாகக் கொந்தளிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? முன்னொரு காலத்தில் பாஞ்சியா என்ற ஒற்றைக் கண்டமாக உலகம் இருந்தது. பின்னர், ஏழாகப் பிரிந்தது. தன்னில் இருந்து பிரிந்து சென்ற ஆப்ரிக்கக் கண்டத்தை மீண்டும் சென்றடையவே இந்தியப் பகுதி கடல்கள் அலைகளாகத் துள்ளுகின்றன.

உலகில் அதிகளவு புயல் தாக்கும் இடங்களில் அமெரிக்காவும் ஒன்று. உலக மேப்பை படுக்கைவசமாக விரித்தால், அமெரிக்கா இருப்பது வடமேற்கில். அதாவது, வாஸ்துவின்படி வாயு மூலை. அதனால்தான், புயல் அடிக்கடி சீஃப் கெஸ்ட்டாக வந்துபோகிறது. எனவே, ராட்சஷ புல்டோசர்களை வைத்து அமெரிக்காவை கீழ்நோக்கி தள்ளிவைத்தால், அங்கே சென்று தங்கும் இந்திய வம்சாவளியினர் நிம்மதியாக இருப்பர்.

குளோபல் வார்மிங் என்னும் உலகத்தை அச்சுறுத்தும் முக்கியப் பிரச்னைக்குக் காரணம், வானில் ஊர்வலம் போகும் ஏரோப்ளேன்கள் கக்கும் புகையினால்தான் எனத் தெரிய வந்துள்ளது. அதுவும் அடிக்கடி வெளிநாடு செல்பவர்களால் குளோபல் வார்மிங் அநியாயத்துக்கு அதிகரிக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. (இது, யாரையும் குறிப்பிடும் காரணமல்ல. எனக்கு ரிலையபிள் சோர்ஸிடமிருந்து வாட்ஸப்பில் வந்த தகவல்தான்!)