திருமணமான புதிதில் எனக்கும், என் மனைவிக்கும் மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தேன். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டதால், அந்த பாலிசியில் அவர்களையும் சேர்த்துக் காப்பீட்டுத் தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தலாமா அல்லது அவர்களுக்கு மட்டும் தனியாக இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

சந்திரசேகர், மெயில் மூலமாக

வி.குருநாதன், தலைமை செயல் அதிகாரி, டி.வி.எஸ் இன்ஷூரன்ஸ்

‘‘நீங்கள் ஏற்கெனவே எடுத்துள்ள ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் குழந்தைகளையும் (Dependent children) சேர்த்துக்கொள்ளலாம். இதற்காக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்குக் கொஞ்சம் கூடுதல் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். அடுத்ததாக, பாலிசியைப் புதுப்பிக்கும்போது கூடுதல் காப்பீட்டுத் தொகையை அந்த பாலிசியின் விதிமுறைகளுக் கேற்ப பிரீமியத்துடன் கூடுதலாகச் சேர்க்கலாம். இந்தச் சேர்க்கை, அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிபந்தனைக்கு உட்பட்டது. உங்கள் வயது 45-க்கு அதிகமென்றால் மருத்துவப் பரிசோதனை செய்யக்கூடும். அந்தப் பரிசோதனைக்கான நிபந்தனைகள் ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் மாறக்கூடும்.”

கல்லூரியில் படிக்கும் எனது மகன் மாநில அளவிலான டென்னிஸ் விளையாட்டு வீரர். பயிற்சிக்காகவும், வெளிநாடுகளுக்கு விளையாடச் செல்வதற்காகவும் எனக்கு நிறையப் பணம் செலவாகிறது. இதற்கு வங்கிக் கடன் கிடைக்குமா அல்லது ஏதேனும் நிறுவனத்திடம் ஸ்பான்சர்ஷிப் வாங்க வேண்டுமா?

சிவராமன், மெயில் மூலமாக

கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி, சங்கரன்கோவில்

“வெளிநாடுகளில் விளையாட்டுத் தொடர்பான படிப்பினைப் படிக்கச் சென்றால் மட்டுமே வங்கிக் கடன் கிடைக்கும். வெளிநாடுகளில் விளையாடச் செல்வதற்காக ஆகும் செலவுகளைச் சமாளிக்க வங்கிகள் கடன் தருவதில்லை.

நீங்கள் சொன்னதுபோல, விளையாட்டினை ஊக்குவிக்கும் நிறுவனங்களிடமிருந்து நீங்கள் ஸ்பான்சர்ஷிப்பைப் பெறலாம். ‘கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி’ என்ற வகையில் சில நிறுவனங்கள் உங்களுக்கு நிதியுதவி செய்யலாம்.’’

என்னால் தற்போது மாதம் 4,000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய இயலும். 25 வயதுடைய நான் ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கிறேன். இன்னும் பத்தாண்டு காலத்தில் அதிக வருமானம் ஈட்ட ஆலோசனை வழங்கவும்.

சங்கரன், திருநெல்வேலி

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

‘‘இளம் வயதினரான நீங்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தயாராக இருப்பது பாராட்டுக்குரியது. பத்தாண்டு காலத்திற்கு சந்தையின் ஏற்றதாழ்வுகளைப் பொருட்படுத்தாமல் மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டு டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதம் 2,000 ரூபாய் வீதம் மொத்தம் 4,000 ரூபாயை முதலீடு செய்யலாம். ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் மிரே அஸெட் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ஆகிய இரண்டில் நீங்கள் முதலீடு செய்ய பரிசீலிக்கலாம்.’’

மூன்று ஆண்டுகள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தவர்கள் மட்டும்தான் வாகன விபத்துக் காப்பீட்டில் இழப்பீடு பெறமுடியும் என வாட்ஸ்அப்பில் பரவுகிறதே, உண்மையா?

மைதிலி ராஜேஷ், சென்னை

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

‘‘இந்தச் செய்தியானது வதந்திதான். வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வதற்கும், வாகன விபத்துக் காப்பீட்டுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதற்காக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாமலிருப்பது தவறு. வரிக் கணக்கினை ஆண்டுதோறும் தாக்கல் செய்து விடுவதே நமக்கு நல்லது.’’

வீட்டுமனைக்கான நிலமொன்று எங்களின் பூர்வீகக் கிராமத்தில் இருந்தது. அதனை விற்றதில் 28 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதனை சகோதரர்கள் மூன்றுபேர் பிரித்துக்கொண்டோம். நான் சொந்தமாக பிசினஸ் செய்துவருகிறேன். எனக்குக் கிடைத்த ரூ.9 லட்சம் ரூபாயை வருமான வரியில் காட்ட வேண்டுமா, இதற்கு எவ்வளவு வரி விதிக்கப்படும்?

ராதாகிருஷ்ணன், மெயில் மூலமாக

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

‘‘வீட்டுமனையை விற்றுக் கிடைத்த பங்குத் தொகை ரூ.9 லட்சம் ரூபாய்க்கு நீண்டகால மூலதன ஆதாய வரியாக 20 சதவிகிதத்தை வருமான வரியாகக் கட்ட வேண்டும். உங்களுக்குச் சொந்தமாக வீடோ, வீட்டுமனையோ எந்தவொரு சொத்தும் இல்லாதபட்சத்தில், இந்த ரூ.9 லட்சத்தைப் பயன்படுத்தி வீட்டுமனை வாங்கி வீடு கட்டினாலோ அல்லது வீடாகவே வாங்கினாலோ அதற்கு வருமான வரி கிடையாது. இந்த விதிமுறை உங்களுடைய சகோதரர்களுக்கும் பொருந்தும்.’’

சாஃப்ட்வேர் இன்ஜினீயரான என் வயது 26. சொந்த வீடு கட்டுவதற்கான முதன்மைத் தொகையாக ரூ.30 லட்சத்தை அடுத்த பத்தாண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் சேர்க்க விரும்புகிறேன். இதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், இதற்கான ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.

குணசேகர், மெயில் மூலமாக

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

‘‘உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன் என்னவென்று தெரியவில்லை. மல்டிகேப் ஃபண்டுகளில் 50%, மிட்கேப் ஃபண்டுகளில் 30% மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் 20% என்ற அளவீட்டில் பிரித்து முதலீடு செய்யவும்.

ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.4,000, மிரே அஸெட் இந்தியா ஈக்விட்டி ஃபண்டில் ரூ.4,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்டில் ரூ.2,000, எல்&டி மிட்கேப் ஃபண்டில் ரூ.2,000, மற்றும் டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.3,000 என மொத்தம் 15,000 ரூபாயை மாதாமாதம் முதலீடுசெய்து, 10% வருமானம் கிடைக்குமென எதிர்பார்த்தாலே பத்தாண்டுகளில் தோராயமாக ரூ.30 லட்சத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புள்ளது.’’

நான் கிராஃபிக் டிசைனராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். அதுபோக வெளியில் தனிப்பட்ட சில வேலைகள் எடுத்தும் செய்கிறேன். அதற்குச் சம்பளத்தைக் கையிலேயே பணமாகத் தருகிறார்கள். அதனை முறையாக எனது வருமானத்தில் காட்டு வதற்கு நான் என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?

முத்துராஜ், மெயில் மூலமாக

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘கிராஃபிக் டிசைனராகப் பணியாற்றிக் கிடைக்கும் மாத வருமானம் சம்பளமாகக் கணக்கிடப்படும். தனிப்பட்ட வேலைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை வியாபார வருமானம் என்றுதான் கணக்கிடுவார்கள்.
இந்த வியாபார வருமானத்தின் வரவு செலவு களைக் கணக்கிட்டு இறுதியாகக் கிடைக்கும் நிகர லாபத்தைச் சம்பளத்துடன் இணைத்து வருமான வரிக் கணக்கு தாக்கலின்போது கணக்குக் காட்டி, அதற்குண்டான வரியைச் செலுத்த வேண்டும்.

வியாபார வருமானத்தைக் காசோலை மூலமாகவோ, ஆன்லைன் பணப்பரிமாற்றமாகவோ பெற முயற்சி செய்தால், வருமான வரித் தாக்கல் செய்வதில் சிக்கல்கள் குறைய வாய்ப்புள்ளது.’’

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.