Published:Updated:

கேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்!

கேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
கேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்!

டி.எல்.அருணாச்சலம், இயக்குநர், பாரத் ரீ இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்

கேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்!

டி.எல்.அருணாச்சலம், இயக்குநர், பாரத் ரீ இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
கேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
கேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்!

ன்னி கிருஷ்ணன் ரொம்ப நாளாகப் பார்த்துப் பார்த்து வீடு நிறைய வாங்கிச் சேர்த்த பொருள்கள் - 46 இன்ச் எல்.இ.டி. டி.வி, ஃபிரிட்ஜ், அனைத்து வீட்டு உபயோகப் பொருள்கள் எல்லாமே ஒரு மணி நேரத்தில் ஒன்றுமில்லாமல் போகச் செய்தது கேரளாவைப் புரட்டிப் போட்ட வெள்ளம். இது பெருமழையால் வந்ததா அல்லது அணைகளில் இருந்து திடீரென்று தண்ணீர் திறக்கப்பட்டதால் வந்ததா என்பது வேறு விஷயம். வீடும், பொருள்களும் நிரந்தரமான சேதம் அடைந்ததுதான் நிதர்சனம்.

இந்தச் சேதத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், அதனால் ஏற்பட்ட பணநஷ்டத்தை நாம் தவிர்த்திருக்கலாம். எப்படி? காப்பீடு செய்வதனால்!

கேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்!

இயற்கைச் சீற்றம், பெரு வெள்ளம், நிலச்சரிவு என பற்பல சோதனைகளைச் சந்தித்து வந்துள்ளது கேரளா. 100 வருடங் களாக காணாத மழை பெய்த காரணத்தால் அனைத்து அணை களும் நிரம்பி, நீர் திறக்கப்பட்டு, 12 மாவட்டங்களையும் புரட்டிப் போட்டிருக்கிறது வெள்ளம்.

இத்தகைய நிகழ்வுகளினால் ஏற்படக்கூடிய பொருள் சேதங்களுக்கான இழப்பை யார் ஈடு செய்வது?

அரசாங்கம் ஏதோ கொஞ்சம் மானியம் அல்லது சிறிதளவு உதவி செய்யும். உலகம் முழுவதும் இந்தச் சூழ்நிலைகளுக்காகவே காப்பீடு என்ற சேவையை அல்லது வசதியை மக்கள் பயன்படுத்து கிறார்கள்.
இயற்கைப் பேரழிவு நிகழ்வு களால் உயிர்ச்சேதம் மட்டுமின்றி, வாகனங்கள், அசையும் மற்றும் அசையாச் சொத்துகளும் பாதிப்பு அடையும். தனி நபரானால்  வீடு மற்றும் இரு சக்கர வாகனங்கள் கார், வீட்டிலுள்ள பொருள்கள் சேதமடையவும், கடைகள் அல்லது தொழிற்சாலைகளில் சரக்கு, இயந்திரங்கள் ஆகியவை பாதிப்படையவும் கூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்!

மற்ற ஆசிய நாடுகளைப்போல, இந்தியாவிலும் வீடு மற்றும் வீட்டுப் பொருள்களுக்காகக் காப்பீடு செய்வது அவ்வளவாகக் கடைப் பிடிக்கப்படுவதில்லை. வாகனங் களுக்காவது சட்ட விதிகள் இருப்ப தால், இன்ஷூரன்ஸ் எடுப்பது வழக்கமாக உள்ளது. மற்றபடி, வீட்டுக்கோ, வீட்டிலிலுள்ள பொருள்களுக்கோ யாருமே இன்ஷூரன்ஸ் எடுப்பதில்லை.

எல்லோருமே இதுபோன்ற யாருமே எதிர்பாராமல் ஏற்படும்   நிகழ்வுகள் நடந்து, அதனால் நஷ்டம் அடையும் போதுதான் இன்ஷூரன்ஸ் பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்கள். ஏனென்றால், என்றைக்கோ நடக்கும் நிகழ்வுக்கு எதற்கு வருடா வருடம் பாலிசி எடுக்க வேண்டும் என்ற அக்கறை யின்மைதான். இத்தகைய காப்பீடு எடுப்பதற்கான செலவு மிகக் குறைவு என்பது ஆச்சர்யம் தரும் உண்மை.

வீட்டுக்கோ, வீட்டில் உள்ள பொருள்களுக்கோ எந்த வகையான காப்பீடு எடுக்கலாம்? 

* தீ விபத்து மற்றும் இதர சேதங்கள்

இந்தியாவில் இந்த பாலிசியை எடுக்கும்போது வீடு மற்றும் பொருள்களுக்குப் பற்பல வகையான நிகழ்வுகளை நாம் கவர் செய்யலாம். தீ, மின்னல், வெடித்தல், நிலச்சரிவு, பூகம்பம், புயல், வெள்ளம், கலகம், வேலை நிறுத்தினால் நேரும் சேதம் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு களிலிருந்து நம்மைக் காக்க இந்த பாலிசி நிச்சயம் உதவும். 

* வீடு புகுந்து கொள்ளை

 நமது பொருள்களை, அதாவது  அசையும் பொருள்கள், நகை, உடைமைகள் இவற்றை எவரேனும் பூட்டையோ, கதவையோ, ஜன்னலையோ, சாளரங்களையோ, கூரையையோ உடைத்து, உள்ளே நுழைந்து கொள்ளையடித்துச் சென்று விட்டால் அந்தப் பொருள்களின் மதிப்பை நாம் காப்பீடாகப் பெறலாம்.

* இயந்திரங்கள் பழுது

இவை தவிர, டிவி, ஃபிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோ வேவ் முதலியன இயந்திரக் கோளாறால் பழுதாகிவிட்டால் அதற்கும் இழப்பீட்டைப் பெற முடியும்.

இந்தக் காப்பீட்டை ‘ஹோம் ஓனர் பேக்கேஜ் இன்ஷூரன்ஸ்’ எனத் தனியாகவும், தீ மற்றும் இதரக் காப்பீட்டு டன் சேர்ந்தும் எடுக்கலாம். இந்தியா விலுள்ள 33 காப்பீட்டு நிறுவனங்களில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் காப்பீட்டை வழங்க அனுமதி பெற்றவையாக இருக்கும் என்பதால், இந்த இன்ஷூரன்ஸை எடுக்க யாரும் அலைய வேண்டியதில்லை. 

கேரள வெள்ளம்... தமிழகம் கற்க வேண்டிய பாடம்!

வீட்டுக்கு மதிப்பு எப்போது கட்டிய வீடாக இருந்தாலும், இன்றைய விலைவாசியில் அதேமாதிரி மூலப் பொருள்களில் மீண்டும் கட்டுவதற்கு எவ்வளவு ஆகுமோ, அந்த மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, 2000-ம் ஆண்டு செங்கல் சிமென்ட் சுவர், கான்க்ரீட் கூரைத்தளம், செராமிக் டிலே போட்ட தரை என்று நாம் கட்டிய வீட்டுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.1,200 செலவழித்திருப் போம். ஆயிரம் சதுர அடி வீட்டுக்கு ரூ.12 லட்சம் நமது செலவு. இப்போது 2018-ல் அதே தரத்தில் வீடு கட்ட வேண்டுமானால், ஒரு சதுர அடிக்கு ரூ.2000 ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது நாம் பாலிசி எடுக்க வேண்டிய மதிப்பு ரூ.20 லட்சம். இதற்கு ஆங்கிலத்தில் ‘ரீ இன்ஸ்டேட்மென்ட் வால்யூ’ என்று பெயர். பழைய வீட்டுக்குக் காப்பீடு புதிய வீடு கட்டுவதற்கு ஆகும் அளவுக்குக் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

இத்தகைய இன்ஷூரன்ஸ் திட்டங்களால் நாம் கண்ணியத்துடன் எவரிடமும் கையேந்தாமல் காப்பீட்டு இழப்புத் தொகையைப் பெற்று இழந்த பொருள்களுக்குப் பதிலாகப் புதிய பொருள்களையும், சேதமடைந்த வீட்டைப் புதுப்பிக்கவோ, மீண்டும் கட்டவோ எளிதாக இயலும். இதற்கு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதுடன், அதை முறையாகவும், தவறு இல்லாமலும், சரியான மதிப்புக்கும் எடுக்கவேண்டும் என்ற கவனமும் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.

எனவே, அடுத்தமுறை வரவிருக்கும் சென்னை வெள்ளம், வார்தா புயல், கேரளா பிரளயம் என்று இயற்கையின் கோரத் தாண்டவத்துக்குக் காத்திருக்காமல், ஒவ்வொரு ரூபாயாக நாம் சேமித்துச் செலவழித்துக் கட்டிய வீட்டுக்கும், வாங்கிய பொருள்களுக்கும் சீக்கிரம் காப்பீடு எடுத்துக் கொள்வோம். கஷ்டம் வருவதற்குமுன்பே அது வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கையை எடுப்பதுதானே புத்திசாலித்தனம்!

கேரள வெள்ளம்... எவ்வளவு இழப்பீடு?

கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.10,500 கோடி கடன் வேண்டும் என்று கேட்டிருக்கிறார் அந்த மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2,600 கோடி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.   மத்திய அரசாங்கம் ரூ.600 கோடி அளவுக்கு உடனடி யாக நிதி உதவியை அளித்துள்ளது. இது தவிர, வெள்ளத்தின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கத் தேவையான பொருள்களை வாங்கும்போது அதற்கான வரியையும் நீக்கியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் அரபு நாடுகளில் அதிக அளவில் இருக்கின்றனர். அவர்கள் இதுவரை ரூ.700 கோடி அளவுக்கு நிதி உதவி செய்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism