Published:Updated:

உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!

உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!

உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!

உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!

உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!

Published:Updated:
உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!

“இது என் குழந்தை” என்று ஓடோடி வந்து, உச்சி முகர்ந்து உரிமை கொண்டாட யாரும் முன்வரவில்லை என்றால், அந்தக் குழந்தை அநாதையாகிவிடும். இதே கதிதான் நாம் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்திருக்கும் பணத்துக்கும். 15.11.2017 அன்றைய நிலவரப்படி, 1,56,539 கோடி ரூபாய் கேட்பாரற்றுக் கிடப்பதாகத் தெரிவிக்கிறது தகவல்.

உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!

  * எதில் எதில்...?

வங்கிகளைப் பொறுத்தவரை, சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட், கரன்ட் அக்கவுன்ட் டெபாசிட், டிராஃப்ட், வங்கிக் காசோலை மற்றும் செக்யூரிட்டி டெபாசிட்டுகள். அஞ்சலகத்துக்கே உரிய இந்திர விகாஸ் பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம், மூத்தக் குடிமக்கள், சேமிப்புக் கணக்கு, மாதாந்திர வருவாய்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு டெபாசிட் இனங்களில் கேட்பாரற்றுக் கிடைக்கும் பணம் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பலதரப்பட்ட பிராவிடண்ட் ஃபண்ட், குடும்பப் பாதுகாப்புத் திட்ட நிதிகள், இன்கம் டாக்ஸ் ரீஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் சார்ந்த இனங்கள் கேட்பாரற்றுக் கிடக்கும் தொகையில் அடங்கும்.

உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!

   * என்ன காரணம்?

அலட்சியம், மறதி, ஆவணம் தொலைத்தல், முகவரியில் மாற்றம் போன்றவை காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், கோடிக்கணக்கான பணம் கேட்பாரற்றுப் போக அடிப்படைக் காரணம் ஒன்று உண்டு. ‘ஆண்களிடம் வருமானத்தையும் பெண்களிடம் வயதையும் விசாரிப்பது கூடாது’ என்ற பழமைவாதம் மாறிப்போய், இருபாலரிடமும் இந்த இரு தகவல்களையும் கட்டாயம் கேட்டுப் பெற வேண்டிய காலகட்டம் இது.

ஆனால், வருமானம் ஏறுமுகமாக உள்ள பலர், தனது சேமிப்பு, முதலீடு, இன்ஷூரன்ஸ் போன்ற நிதி சார்ந்த தகவல்களைத் தமது மனைவி - மக்கள் உள்ளிட்ட குடும்பத்தாரிடமே பகிர்ந்து கொள்வ தில்லை. தனது நிதிநிலை தகவல்களைத் தெரிவிக் காமல், குடும்பத்தாரிடம் மறைத்து வைத்திருப்ப வர்கள், குறைந்தபட்சம் அவற்றை ஒரு பதிவேட்டில் பதிந்து, தனது பாதுகாப்பிலேயே வைத்திருந்தால்கூட மரணம் அல்லது காணாமல் போனபின் குடும்பத்தார் அதைக் கண்டெடுத்து அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

   * வாரிசு நியமனம்

எல்லா மனிதர்களுக்கும் மரணம் நிச்சயிக்கப் பட்ட நிகழ்வு. எப்போது அது வரும் என்பதுதான் எதிர்பாராத நிகழ்வு. வாங்கிய கடனை வாழ் நாளிலேயே கொடுத்துத் தீர்த்துவிடுவது எப்படி அவசியமோ, அந்த அளவுக்கு அவசியம் நாம் செய்த சேமிப்பை, முதலீட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகும். நம் வாழ்நாளில் திரும்பப் பெற முடியாத இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட பணத்தை வாரிசுகள் பெற்றுக்கொள்ள மிகவும் அவசியம் முறையான வாரிசு நியமனம். வாரிசு நியமனத்தில் கவனிக்கவேண்டிய அம்சம் என்ன என்று பார்ப்போம்.

   * சார்ந்து வாழ்வோரும், வாரிசுதாரரும்

ஒருவர் உயிரோடு இருக்கும் காலம் வரை தனது சம்பளம், பென்ஷன், இன்ஷூரன்ஸ் மற்றும் இதர சேமிப்புகள் மூலம் கிடைக்கும் பணத்தில் தமது குடும்பத்தாரைப் பராமரிக்கிறார்.இதேபோல், பெரியப்பா, சித்தப்பா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகளுக்கும்கூட தமது பணத்தைச் செலவு செய்யலாம். உணவு, உடை, இருப்பிட வசதி செய்து தரலாம். மனைவி, மக்கள் தவிர, இதர உறவுகள் சார்ந்து வாழ்வோர் எனப்படுவர். அவர்கள் குடும்பத்தினரல்ல. இவ்வாறு குடும்பம் என்ற வரையறைக்குள் வராத உறவுகளுக்கும் ஒருவர் தனது பணத்தைச் செலவு செய்ய சட்டப்பூர்வமான அனுமதி உண்டு என்பதற்கு வருமான வரிச் சட்டமே போதுமான சான்று.

வருமான வரிச்சட்டம் பிரிவு 80 DD-ஆனது, மனைவி, மக்கள் மட்டுமன்றி, ஒருவரது தாய்- தந்தை, சகோதர சகோதரிகளுக்கும்கூட, மேற்கண்ட உறவுமுறையினர் மாற்றுத் திறனாளி யாக இருந்தால், தம் சொந்தப் பணத்தில் ரூ.1.25 லட்சம் பராமரிப்புச் செலவு செய்ய அனுமதிக்கிறது. அதற்கு வரிச் சலுகையையும் வழங்குகிறது.

இதற்கு இணையான மற்றொரு வருமான வரி பிரிவான 80 DDB-யின் படி, ஒருவர் தன்னைச் சார்ந்து வாழும் உறவினருக்கு ரூ.1 லட்சம் அளவுக்கு மருத்துவச் செலவு செய்ய அனுமதித்து, அதற்கான வரிச் சலுகையும் வழங்குகிறது.

இதைவிட இன்னும் ஒருபடி முன்னேறி, ஒருவர் தான் பாதுகாவலராக உள்ள குழந்தைக்குக் கூட பண வரம்பின்றி கல்விக்கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தும் வட்டிக்கு வரிச் சலுகை தருகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளால் சார்ந்திருப்போர் எவரும் வாரிசுதாரர் ஆகிவிட முடியாது.

உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!

   * நியமனதாரரும், வாரிசுதாரரும்

மணமாகாத ஓர் ஊழியர், தனது ஜி.பி.எஃப் பணத்துக்கு யாரை வேண்டுமானாலும் நியமனதாரராக எழுதிவைக்கலாம். ஆனால், அவருக்கு மணமாகிவிட்டால் அந்த நியமனப் படிவம் ரத்தாகிவிடும். தனது மனைவி, மக்களைத் தான் அவர், தனது மரணத்துக்குப்பின், தனது நிதித்தொகுப்பை பெற நியமனம் செய்யலாம்.

சுருக்கமாகச் சொல்வதெனில், சார்ந்திருப்போர், வாரிசுதாரராக முடியாது. ஆனால், வாரிசுதாரர் சார்ந்து வாழ்பவராக இருக்கலாம். இதேபோல், நியமனதாரர், வாரிசுதாரராக முடியாது. ஆனால், வாரிசுதாரரே நியமனதாரராக இருப்பார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதனைப் புரிந்துகொண்டால் தேங்கிக் கிடக்கும் பணத்தைப் பெறுவதில் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

   * வேறுபடும் நியமன முறை

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:  இதற்கான நியமனதாரர் 18 வயது நிரம்பாத மைனராகவும் இருக்கலாம். கூடவே கார்டியன் நியமனம் பற்றிக் குறிப்பிட வேண்டும். எத்தனை முறை வேண்டு மானாலும் நியமனதாரரை மாற்றிக்கொண்டே இருக்கலாம்.

சுகன்யா சம்ருதி திட்டம்: குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்.

அஞ்சலக மாதாந்திர வருவாய்த் திட்டம்: குடும்ப உறுப்பினரில் ஒருவர்.

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் :  திட்டத்தில் சேர்ந்த பிறகு தனியே வாரிசு நியமனம் எழுதித் தரலாம்.

   * வங்கிக் கணக்குகள்

* ஒருவர் நியமனதாரராக இருக்கலாம்.  பல்வேறு கணக்குகள் இருப்பின் ஒவ்வொன்றுக்கும் ஒரு நியமனதாரர் இருக்கலாம். ஒருவரே அனைத்துக் கணக்குகளுக்கும் நியமனதாரராக இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஒவ்வொரு கணக்குக்கும், வேறு வேறு நபரை நியமிக்கலாம்.

* பென்ஷன் போன்ற நிலுவைத் தொகைகள் பெற தனி நியமனம் அவசியம். வங்கிக் கணக்குக்கான நியமனமும் தனியாக இருக்க வேண்டும்.

* வங்கிக் கணக்குகளைப் பொறுத்த வரை நியமனதாரர் வாரிசுதாரராக இருக்க வேண்டும் என்பதில்லை.

* வங்கிக் கணக்கு வைத்துள்ளவர் இறந்துவிட்டால், Succession certificate போன்ற எவ்வித ஆவண ஆதாரமுமின்றி நியமனதாரர் தொகை பெறலாம்.

* ஃபிக்ஸட் டெபாசிட்டைத் திரும்பப் பெற நியமனதாரர் நம்பகமான ஒரு நபராக இருக்க வேண்டும். ரெக்கரிங் டெபாசிட்டுக்கும் ஒருவர் நியமன தாரராக இருக்கலாம்.

* இவற்றுக்கு நியமனம் செய்ய விரும்பாதவர், யாரையும் நியமனம் செய்ய விரும்பவில்லை என்று   எழுதித் தந்துவிடலாம்.

   * இன்ஷூரன்ஸ்

மனைவி / கணவர், பிள்ளைகள், உறவினர், நண்பர்கள், மாமா, அத்தை,  மருமகன் ஆகியோரில் ஒருவர் நியமனதாரராக இருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் நியமனதாரர்களாக அமையலாம்.

   * மியூச்சுவல் ஃபண்ட்

மனைவி / கணவர், குழந்தைகள், இதரக் குடும்ப உறுப்பினர்கள், நண்பர் அல்லது நம்பகமான நபர் நியமன      தாரராகலாம். அதிகபட்சம் மூன்று நியமனதாரர் இருக்கலாம். எவரையும் நியமனதாரராக நியமிக்க விரும்பா விட்டால், அவ்வாறு எழுதித் தந்து விடலாம்.

   * கிராஜூவிட்டி

மனைவி / கணவர், மணமானவர், மணமாகாதவர் என்ற பாகுபாடு இன்றி மகன், மகள் அனைவரும் நியமனம் செய்யப்படலாம். இன்னாருக்கு இவ்வளவு பங்கு என்கிற சதவிகித ரீதியிலோ, கால்பங்கு - அரைப்பங்கு என்ற ரீதியிலோ ஒவ்வொருவருக்கும் தரப்பட வேண்டிய பங்கைக் குறிப்பிட்டு நியமனம் செய்யலாம். நியமனப் படிவம் இல்லாத நிலையில், கணவர் / மனைவி (சட்டப்பூர்வமாகப் பிரித்து வைக்கப்பட்ட கணவர் / மனைவி உட்பட) மகன் (மறுதாரம் மூலம் பிறந்த மகன், தத்து எடுத்த மகன் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான மனைவிமூலம் பிறந்த மகன் உட்பட) மணமாகாத மகள் (மறுதாரத்தின் மகள், தத்தெடுத்த மகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான மனைவிமூலம் பிறந்த மகள் உள்பட) அனைவருக்கும் சமபங்கு என்பது தமிழக அரசு ஊழியருக்கான கிராஜூவிட்டி நடைமுறை ஆகும்.

உறங்கும் பணம்... மீட்டெடுக்க உதவும் வாரிசு நியமன விதிகள்!

  * ஜெனரல் பிராவிடண்ட் ஃபண்ட்

ஆண் சந்தாதாரர் எனில், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், மைனர் சகோதரர், மணமாகாத சகோதரிகள், இறந்துபோன மகனின் மனைவி - குழந்தைகள் மற்றும் பெற்றோர் இல்லாதவர்களுக்குத் தந்தை வழி தாத்தா - பாட்டியை நியமனதாரராக நியமிக்கலாம்.

மேற்கண்ட அதே நியதி பெண் சந்தாதாரர்களுக்கும் அதாவது, கணவர், பெற்றோர், குழந்தைகள், மைனர் சகோதர்கள், மணமாகாத சகோதரிகள், இறந்துபோன மகளின் மனைவி - குழந்தைகள் மற்றும் பெற்றோர் இல்லை எனில் தந்தை வழி தாத்தா பாட்டி, ஆகியோர் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட வேண்டும். குடும்ப உறுப்பினர் அல்லாதவர் நியமனதாரராக இருக்க முடியாது.

   * எம்ப்ளாய்ஸ் பிராவிடண்ட் ஃபண்ட்

ஒரு குடும்பத்தில் மூன்று பேரை நியமனம் செய்யலாம்.  திருமணத்துக்கு முந்தைய நியமனம் ரத்தாகிப்போகும். மைனர் ஒருவருக்குப் பாதுகாவலராக நியமிக்கக் குடும்ப உறுப்பினர் இல்லாதபோது, குடும்ப உறுப்பினர் அல்லாதவர் மைனருக்குப் பாதுகாவலராக இருக்கலாம்.

  * என்.பி.எஸ்

இதன்மூலம் கிடைக்கும் பணத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதைப் பிழையின்றி குறிப்பிட்டு, மூன்று பேரை நியமனதாரராக நியமிக்கலாம். இந்த மூன்று பேருக்கும் சதவிகித ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையானது 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்தால், அந்த நியமனம் மறுப்புக்கு உள்ளாகிவிடும்.

   * தமிழக அரசின் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்

முதல் சம்பளம் கொடுப்பதற்கு முன்பே நியமனப் படிவம் பெற வேண்டும் என்பது விதி. இருந்த போதிலும், நியமனப் படிவம் பெறும்முன் இறந்துவிட்டாலும், நிய மனதாரர்கள் இறந்துவிட்டாலும் எந்தக் காரணம் கொண்டும் திட்டத்தின் கீழ்வரும் ரூ.3 லட்சம் சட்டப்படியான வாரிசுக்கு (அவர் குடும்ப உறுப்பினராக இல்லா விட்டாலும்) தரப்பட்டுவிடும். அரசுக்குச் சேராது. அதுமட்டுமல்ல, நியமனதாரர் இறந்துபோனால், அவரது சட்டப்படியான வாரிசுக்கே சேரும்.

மேற்கண்ட விவரங்கள் படியான நியமனங்கள் தவிர, இன்னும் எத்தனையோ விதமான நியமன விதிகள் நடைமுறையில் உள்ளன. விதிகளைப் பின்பற்றி நியமனம் செய்துவிட்டால் கேட்பாரற்ற பணம் மேலும் வளர வாய்ப்பில்லை.

   
* கணக்கிட முடியாத கோடிகள்

வங்கி டெபாசிட், இன்ஷூரன்ஸ், இபி.எஃப், இன்கம்டாக்ஸ் ரீஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் கேட்பாரற்ற தொகையைப் பட்டியலிடவும், பட்டுவாடா செய்யவும் ரிசர்வ் வங்கி, இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், இ.பி.எஃப். ஓ போன்ற அமைப்புகள் செயலாற்றி வருகின்றன. இதைத் தவிர, பட்டியலிட முடியாத பல்வேறு இனங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் கோடிகள் பல.
 
உதாரணமாக, ஓர் ஒப்பந்தக்காரர், ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு வேலையைச் செய்ய ஒப்பந்தமாகும் போது காப்புத் தொகை (Earnest Money Deposit) ஒரு சதவிகிதம் செலுத்துவார். உத்தரவாதத் தொகை 2.5% பிடித்தம் செய்யப்படும். ஆக, ஒரு கோடிக்கு ரூ.3.5 லட்சம். எத்தனை கோடி வேலை; எத்தனை கோடி ஒப்பந்தங்கள் நாடெங்கும் நடக்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தாலே இதில் எவ்வளவு பணம் இருக்கும் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

தனது இந்தப் பரிவர்த்தனையைக்  குடும்பத்தார் அறியும்படி ஒரு பதிவேட்டில் பதிந்துவைத்தால் மரணம் போன்ற நிகழ்வுகளில் தொகை மீட்கப்படலாம். இல்லையென்றால், கேட்பாராற்றுக் கிடக்கும் தொகை இப்படி குவியத்தான் செய்யும். இதுதவிர, வணிக உரிமைக்கான செக்யூரிட்டி டெபாசிட்டுகள், ஏலம், குத்தகை முதலானவற்றுக்கான காப்புத் தொகைகள் என எத்தனையோ உண்டு.

 பணப் பரிவர்த்தனை பற்றிய பதிவுகள் குடும்பத்தாருக்குத் தெரியாதவரை அத்தனை பணமும் கேட்பாரற்றுத்தான் கிடக்கும். பணப் பதிவேடு என்பதை வீடுதோறும் பராமரிக்கப்படும் பட்சத்தில் கேட்பார் இல்லாத பணம் பெருமளவு குறையக்கூடும்.

- ப.முகைதீன் சேக்தாவூது

காணாமல் போய்விட்டால்..?

வங்கிகளைப் பொறுத்தவரை, காணாமல் போனவர்களின் டெபாசிட் தொகை பெற ஏழு ஆண்டுகள் ஆகும். தமிழக அரசு ஊழியர் ஒருவர் காணாமல் போனால், அவருடைய சம்பளம், விடுப்பு, சம்பளம் முதலானவை உடனே வழங்கப்படும். இதன்பின், காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து, காணாமல் போனவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற காவல்துறை அறிக்கை பெற்றபின் கிராஜூவிட்டி, குடும்ப பென்ஷன் வழங்கப்படும்.

இதற்கான ஈட்டுறுதிப் பத்திரத்தில் காணாமல் போனவர் திரும்பி வந்தால் வாங்கின பணம் சரிகட்டப்படும் என்ற உறுதிமொழி பெறப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism