
கிருஷ்ண ஜயந்தியைக் கொண்டாடும் தருணத்தில், கிருஷ்ணரே எங்கள் வீடு தேடி வந்ததுபோல், அழகான கண்ணன் அட்டைப் படத்தில்!
- த.சத்தியநாராயணன் அயன்புரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கண்ணன் வருவான், கிருஷ்ண பட்சணங்கள், வரங்கள் தருவாள் வரலட்சுமி... என இந்த இதழ் முழுக்க விழாவைபவத் தகவல்கள் அருமை.
- மயிலை கோபி, அசோக் நகர்.
ஸ்ரீமத் பழநி ஸ்வாமிகளின் சரிதம் உருகவைத்தது. `திருவருள் செல்வர்கள்' பகுதியில் வரும், நாங்கள் அறிந்திராத புனிதர்களின் கதை ஒவ்வொன்றும் வியக்கவைக்கிறது.
- ந.சிவநாராயணன், ராஜபாளையம்
`மகா பெரியவா' தொடர் ஆன்ம நிம்மதியை அளிக்கும் அருள் பொக்கிஷமாக விளங்கி வருகிறது. மகாபெரியவரின் வித்தியாப்பியாச மகத்துவம் சிலிர்க்கவைத்தது.
- சித.மகாலட்சுமி, திருப்பரங்குன்றம்