Published:Updated:

அவசியம்... அவசரம்!

அவசியம்... அவசரம்!
பிரீமியம் ஸ்டோரி
அவசியம்... அவசரம்!

Health ஸ்பெஷல்!

அவசியம்... அவசரம்!

Health ஸ்பெஷல்!

Published:Updated:
அவசியம்... அவசரம்!
பிரீமியம் ஸ்டோரி
அவசியம்... அவசரம்!

ங்கள் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். அந்த முதலுதவிப் பெட்டியில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்று விளக்குகிறார் பொதுநல மருத்துவர் அருணாசலம். 

அவசியம்... அவசரம்!

கிருமி நாசினி (Antiseptic Liquid) 

இது காயங்களில் ஏற்படும் தொற்றுகளைத் தடுக்கும். காயம்பட்ட இடத்தில் மருந்து போடுவதற்கு முன்பு, இதைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதற்கு இது அவசியமான ஒன்று. வீடுகளில் அவ்வப்போது தண்ணீருடன் கிருமிநாசினியைக் கலந்து துடைத்தால் வீட்டுக்குள் கிருமிகள் அண்டாது.

கவனம் : முகம் மற்றும் கண்களில் படாதவாறு கிருமிநாசினியைப் பயன்படுத்த வேண்டும்.

பாராசிட்டமால்

காய்ச்சல், தலைவலி இருந்தால் எப்போதாவது பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். ஒருநாளுக்கு மேல் இந்தத் தொந்தரவுகள் இருந்தால் சுயமாக மாத்திரை சாப்பிடக்கூடாது. மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

அவசியம்... அவசரம்!

கவனம் : அவசரத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தெர்மா மீட்டர்

சராசரியான உடல் வெப்பநிலை  98.6 டிகிரி பாரன்ஹீட்  (37 செல்சியஸ்)  ஆகும். அதற்கும் அதிகமான வெப்பநிலை இருந்தால், தெர்மா மீட்டர் மூலம் அறிந்து கொண்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல முடியும். 

அவசியம்... அவசரம்!



மாரடைப்பைத் தடுக்கும் மாத்திரைகள்


ஆஸ்பிரின் (Aspirin) போன்றவை. மாரடைப்பு ஏற்படும் நேரங்களில் ரத்தம் உறைதல் ஏற்படுவதைத் தடுக்க உதவும் உயிர் காக்கும் மாத்திரைகள் இவை. மரபு வழியாக இதயநோய் இருப்பவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

களிம்புகள்

சில்வர் சல்ஃபாடயஸின் (Silver sulfadiazine) போன்ற களிம்புகளை வைத்திருக்க வேண்டும். சிறிய தீப்புண்கள் ஏற்பட்டால் இந்தக் களிம்புகளைப் புண்களின்மீது தடவலாம். பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படும்போது, களிம்புகள் தடவக் கூடாது. மிக விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

கவனம் : மருந்து அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

 மர ஸ்கேல்

கைகால்களில் பெரிய அளவில் அடிபடுவது, எலும்பு முறிவு ஏற்படுவது போன்ற நேரங்களில்  ஸ்கேலுடன் சேர்த்துக் கட்டு போடலாம். அதன்பிறகு மருத்துவமனை அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கலாம்.

கைக்குட்டை

அடிபட்ட இடத்தில் கட்டு போட கைக்குட்டை பெரிதும் உதவும். எனவே, எப்போதும் சற்று பெரிதான இரண்டு மூன்று கைக்குட்டைகளை முதலுதவிப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.

கவனம் : கைக்குட்டைகள் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

 காட்டன் துணி  (Medical Guaze pod)

புண்கள், காயங்களில் கட்டுப்போடவும், சிறிய வெட்டுக்காயங்களின்போது ஏற்படும் ரத்தக்கசிவைக் கட்டுப்படுத்தவும் ‘காட்டன் பாட்’ உதவும்.

கவனம் : கட்டுப்போட்ட இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

ஐஸ் பேக்  (Ice bag)


ஒத்தடம் கொடுக்கவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் ஐஸ் பேக் உதவும். வீக்கம், வலி குறைக்கவும்  ஐஸ் பேக் அவசியம்.

கவனம் : ஐஸ் பேக்கில் நீர்க் கசிவு இருக்கிறதா என்பதைக் கவனிக்கவும்.

குளூக்கோமீட்டர்

வீட்டிலேயே எளிமையாக ரத்த சர்க்கரையை அளவிடப் பயன்படும் கருவி இது. அதோடு, குளூக்கோஸ் கரைசல், குளூக்கான் ஊசி போன்றவற்றையும் வைத்திருப்பது முதலுதவிக்கு உதவும்.

கத்தரிக்கோல்


முதலுதவிப் பொருள்களை பிரத்யேகக் கத்தரிக்கோல்களைக் கொண்டே கத்தரிக்க வேண்டும். தேவைக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் கத்தரிக்கோல் வாங்கி வைத்துக்கொள்ளலாம். 

கவனம் : கத்தரியைச் சுத்தமாகவும், துருப்பிடிக்காமலும் வைத்துக்கொள்ள வேண்டும்.

கையுறை


மருந்துகளைக் கையாளும்போதும் முதலுதவி செய்யும்போதும், தரமான கையுறைகளை அணிந்துகொள்வது நல்லது. கையுறை அணிவதால் கையில் இருக்கும் அழுக்குகள் வழியாக மற்றவருக்குக் கிருமிகள் பரவாது.

கவனம்: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கையுறைகளைப் பயன்படுத்துவது நல்லது.

ஜி.லட்சுமணன்