Published:Updated:

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

Published:Updated:
“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”
“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“பத்து வருடங்களுக்கு முன்னாடி என் வாழ்க்கையில ஒரு கேரக்டரை சந்திச்சேன். நல்லா சரளமா இங்கிலிஷ் பேசுறான். ஆனா, அவன் பேச்சு, நடவடிக்கைகள்ல நிறைய வித்தியாசம் இருந்தது. ‘நான் பேசுறதைப் பார்த்து என்னைப் பைத்தியம்னு நினைச்சிடாதீங்க. நான் கொஞ்சம் கன்ட்ரோல் இல்லாம இருக்கேன் அவ்ளோதான்’னு அவனுக்கு அவனே பேசிக்கிட்டு இருந்தான். அதிகமா படிச்சுப் படிச்சு அதுக்கான வடிகாலே இல்லாம இந்தத் தலைமுறையினர் இருக்காங்க. பெத்தவங்களும் படி படினு டார்ச்சர் பண்ணி, ஸ்கூல் முடிச்சா டியூசன், அந்த கிளாஸ் இந்த கிளாஸ்னு குழந்தைகளுக்குள்ள கல்வியைத் திணிக்கிறாங்க. அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பையன் வாழ்க்கையை எப்படி அணுகுறான் என்பதை எமோஷனோடு ஹியூமர் கலந்து இயக்கியிருக்கும் படம்தான், இந்த ‘ஜீனியஸ்’!” - படத்தின் கதை உருவான கதையை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்கிறார், இயக்குநர் சுசீந்திரன். 

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“புதுமுகங்களை வெச்சே அடுத்தடுத்து படங்கள் பண்றீங்க. என்ன காரணம்?”

“நான் ரொம்பநாளா வேறமாதிரி ஒரு சினிமா பண்ணணும்னு பேராடிக்கிட்டே இருக்கேன். ஏதோ ஒரு தவறு காரணமா அந்த முயற்சிகளெல்லாம் சக்சஸ் ஆகாமலேயே இருந்தது. ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’னு எனக்கு வெற்றி கிடைச்சது. ஆனா, முழுமையான வெற்றியானு கேட்டா, இல்லை. ‘பாண்டியநாடு’, ‘நான் மகான் அல்ல’ மாதிரி பெரிய ஹிட் இல்லை. புதுமுகங்களை வெச்சு ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுக்க ஆசைப்படுறேன். அதுமட்டுல்லாம, புதுமுகங்கள் சினிமாவுல ஏதாவது சாதிக்கணும்னு ஒரு வெறியோட வருவாங்க. அது நமக்கு ரொம்பவே பயன்படும்.”

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“இளையராஜா, யுவன் ரெண்டுபேருடனும் வொர்க் பண்ணுன அனுபவம்?”

“ ‘அழகர்சாமியின் குதிரை’ மாதிரி ஒரு கதை கிடைச்சுதுன்னா கண்ணை மூடிக்கிட்டு ராஜா சார்கிட்ட போயிடுவேன். படம் பார்க்கும்போதே ரீ-ரெக்கார்டிங் நோட்ஸ் எடுத்திடுவார். அவர் மூளை அபாரமானது. அவருடன் யாரையும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. ஒரு இசையமைப்பாளரா பார்த்தோம்னா, யுவன் ஜீனியஸ். ராஜா சார் எக்ஸ்ட்ரீம் ஜீனியஸ்.”

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“ ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்துல எப்படி கமிட் ஆனிங்க, முதல்முறையா நடிச்ச அனுபவம் எப்படியிருக்கு?” 

“விக்ராந்த் மூலமா கிடைச்ச வாய்ப்பு இது. ஆனா, பிரபுதேவா சார்தான் என்னை முதல்முறையா நடிக்கக் கூப்பிட்டார். போக முடியலை. அதுக்கு அப்புறம் இந்தப் படத்துல கமிட் ஆனேன். இயக்குநர் ராம்பிரகாஷ்கிட்ட ‘நான் எப்படிங்க நடிக்கிறது?’னுதான் கேட்டேன். இருபத்தைந்து நாள்தான் ஷூட்டிங். நீங்க பண்ணுனா நல்லா இருக்கும்னு சொல்லி, கதையைச் சொன்னார். நல்லா இருந்தது, ஓகே சொல்லிட்டேன். உண்மையைச் சொன்னா, அந்த  இருபத்தைந்து நாள்களிலும் என்னை நல்லா ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன். கோயம்புத்தூர்ல என் தங்கச்சி வீடு இருக்கு. ஷூட்டிங் அங்கேதான் நடந்தது. அதனால, ரொம்பநாள் கழிச்சு தங்கச்சி வீட்டுல தங்கிட்டு அவங்களோட இருந்துட்டு வந்தேன். ஒரு இயக்குநரா இருந்துட்டு, நடிகரா ரன்னிங், சேஸிங்னு நடிச்சது சவாலாத்தான் இருந்தது.”

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“கபடி, கிரிக்கெட், கால்பந்து... தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் படங்கள் பண்றீங்க. விளையாட்டுமேல ரொம்ப ஆர்வமோ?” 

“கடைசியில இருக்கிற விளையாட்டு செய்திகள்ல இருந்து நியூஸ் பேப்பரைப் படிக்கிற ஆள் நான். தலைப்புச் செய்தியை முதல்ல படிடானு எங்க அப்பா என்னைத் திட்டாத நாள் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒரு பந்து விடாம பார்க்கிற கூட்டத்தைச் சேர்ந்தவன் நான்.  இங்கே விளையாட்டு தொடர்பான படங்களுக்கு ஸ்பேஸ் இருக்கு. இப்போ ரெண்டு படம் முடிச்சுட்டேன். அடுத்து பெண்கள் கபடியை வெச்சு ஒரு படம் பண்ணப்போறேன். சசிகுமார் அண்ணன் முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறார். அந்தப் படங்கள்ல என்னால முடிஞ்ச அரசியலையும் பேசிடுவேன்.”

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“ ‘ஜீவா’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘மாவீரன் கிட்டு’னு உங்க படங்கள்ல ஏதாவது ஒரு கருத்தோ அரசியலோ பேசப்படுதே..?”

“விவரம் தெரியாத வயசுல சினிமாவுக்குள்ள வந்துட்டேன். இதுக்கு முன்னாடி இருந்தவங்க நிறைய விஷயங்களைச் சொல்லிட்டுப் போயிருக்காங்க. ஏதோ நம்மளால முடிஞ்சதைப் பண்ணிட்டுப் போகணும்னு நினைக்கிறேன். என் படம்னாலே அதுல ஒரு கருத்து இருக்கும்னு மக்கள் நம்பி வரலாம்.”

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“ ‘வெண்ணிலா கபடிக்குழு 2’ படத்துல சூரி பரோட்டாக் கடையே வெச்சிருக்காராமே?”

“ஆமா... படத்துல அவர் பரோட்டாக் கடை ஓனர். இந்தப் படத்துக்கான எல்லா கிரெடிட்ஸும் என் சித்தப்பாவும், படத்தோட இயக்குநருமான செல்வ சேகரனுக்குத்தான் சேரணும். எனக்கு முன்னாடி சினிமாவுக்கு வந்து முப்பது வருடமா போராடிக்கிட்டு இருக்கார். அவர் மூலமாதான் நான் சினிமாவுக்கு வந்தேன். அவருக்காகத்தான் இந்தப் படமே!”

“நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!”

“ ‘பியார் பிரேமா காதல்’ படத்தைக் கலாசாரச் சீரழிவுனு சொன்னீங்களே... என்ன காரணம்?”

“13 வயசுப் பசங்களுக்குக் காதலை எப்படிக் கையாளத் தெரியும்... அதோட விபரீதம் தெரியாமலேயே சீக்கிரமா செக்ஸ் மாதிரியான விஷயங்களுக்குள்ள போயிடுறாங்க. அதை ஊக்கப்படுத்திடக் கூடாது என்பதுதான் என் கருத்து. என்னோட ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்துல கடைசியா நான் சொன்ன மெசேஜ் இல்லைனா, அந்தப் படமும் ஒரு கலாசாரச் சீரழிவுதான். அந்த முடிச்சு மட்டும் எனக்குக் கிடைக்கலைனா, நான் படமே பண்ணியிருக்க மாட்டேன்.”

உ.சுதர்சன் காந்தி