Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/Kozhiyaar

கைப்பேசி இருந்தும் ஜன்னல் வழியே ஒருவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், பேட்டரி குறைவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்!

twitter.com/iamkarki


எந்த ஃபங்ஷனா இருந்தாலும் காதுல போன் வச்சிட்டு, முகத்தை டென்ஷனா வச்சிட்டு, வேகமா நடந்தா போதும்... நல்லா வேலை செய்றான்னு முடிவு பண்ணிடறாங்க...

வலைபாயுதே

twitter.com/HAJAMYDEENNKS

மனித உடலுக்கு திடீர்க் காய்ச்சல் வருவதுபோல முக்கொம்பு அணை திடீரென உடைந்துள்ளது. - எடப்பாடி பழனிச்சாமி. #இந்த எடுத்துக்காட்டுக்கு அந்த அணை உடைஞ்சதே பரவாயில்ல!

twitter.com/mohanramko

கொஞ்சம் மழை பெய்தாலும் ரோட்ல தண்ணி நிக்குது, ஆனா எவ்வளவு மழை பெய்தாலும் ஏரியில் மட்டும் நிக்க மாட்டேங்குது...

twitter.com/Timon_6826

சீமான் : தம்பிகளா, நாங்கலாம் அந்தக் காலத்துல பாகிஸ்தான் பார்டர்ல சிங்களர்களை எதிர்த்துப் போரிட்டமா அந்த நேரத்துல ஜப்பான் பிரதமர் டிரம்ப்தான் எங்களுக்கு ஆமைக் கறி வழங்கினார், அதைச் சாப்பிட்ட உடனே புத்துணர்ச்சி பெற்று ஒரே குண்டுல 100 ரஷ்யாகாரன் சுட்டோம்டா தம்பிகளா

தும்பிகள்: ஓ அப்படியாண்ணா...?

twitter.com/rahimgazali

நான் பிஜேபிக்கு அடிமையில்லை. எதிர்க்கவேண்டிய நேரத்தில் பிஜேபியை எதிர்ப்பேன் - எடப்பாடி. எப்ப எதிர்ப்பீங்க? மத்தியில் பிஜேபி ஆட்சி மாறினால் எதிர்ப்பேன்.

twitter.com/Thaadikkaran

சில்லறை இருக்கா என்ற கேள்விக்கு இல்லையென்ற பதிலுக்கு முன் பாக்கெட்டைத் தொட்டுப் பார்ப்பதுபோல பாவனை செய்வது அனிச்சை செயலாகிவிட்டது..!

twitter.com/smhrkalifa


தந்தையின் சட்டைப்பை என்னும் ஏ.டி.எம்-க்கு நம் தாயாரே பாஸ்வேர்டாக இருப்பார்கள்.

twitter.com/Kozhiyaar

ஒருவர் போன் பேசி முடிச்சிட்டு வந்த உடனே ‘யாரு போன்ல?’னு கேட்கிறத எல்லோரும் நிறுத்தினாதான் நாடு வல்லரசாகும்யா!

வலைபாயுதே

twitter.com/BoopatyMurugesh

பூசாரி : அர்ச்சனை பண்ண பேர், நட்சத்திரம் சொல்லுங்கோ...

மீ : அது இருக்கட்டும் சாமி சிலை ஒரிஜினலா, டூப்ளிகேட்டான்னு சொல்லுங்கோ...

twitter.com/amuduarattai

வாட்ஸ அப் செய்தியைக்கூட நம்புகிறார்கள். ஆனால், சீமான் சொன்னால்தான், சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள்.

twitter.com/chithradevi_91

வங்கிகளில் நாம் போக வேண்டிய கவுன்டரைக் கண்டுபிடிக்கிறதைவிட பெரிய கஷ்டம் அந்த கவுன்டர்ல இருக்க வேண்டியவர் எங்க போனார்னு கண்டுபிடிக்கிறது...

வலைபாயுதே

twitter.com/Thaadikkaran

பத்து நிமிஷம் பாஸ்டா வெச்சு தூங்குனாதான் சீக்கிரம் எந்திருப்போம்னு அலாரம் வச்சுக்கிட்டு, அலாரம் அடிச்சதும் இன்னும் பத்து நிமிஷம் இருக்குன்னு மீண்டும் தூங்குற தூக்கம் இருக்கே டிவைன்..!

twitter.com/ajay_aswa

முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா - ஆர்.பி. உதயகுமார்.

நீதிபதி ஆறுமுகசாமிக்கு இந்தச் செய்தி தெரியாதுபோல, பாவம் எல்லோரையும் கூப்பிட்டு விசாரிச்சுக்கிட்டு கெடக்காரு.

twitter.com/Stabbercell2

காசு கம்மியா இருந்தா மிஷின கட்டிப்புடிச்சு கொஞ்ச நேரம் அழுதுட்டு வருவானுங்க போல... #எவ்ளோ நேரம்டா!

வலைபாயுதே

twitter.com/g4gunaa

உண்டியல் காசை எடுத்து கேரள மக்களுக்குத் தரலாமான்னு எம்புள்ளையைக் கேக்கலாம்தான். மொதல்ல அதிலேர்ந்து நீ எடுக்கறதை நிப்பாட்றா’ன்னு மானக்கேடா கேப்பா... வாணாம்.

twitter.com/indhiratweetz

‘லவ் யூ’ங்குறது அப்பாவோட தோள்ல சாய்ந்துக்குறது மாதிரி.

‘மிஸ் யூ’ங்குறது அம்மாவோட மடியில தலை வச்சுப் படுத்துக்குற மாதிரி.

twitter.com/rahimgazali

அழகிரி இட்லிக்கடை போடத்தான் லாயக்கு - சு.சாமி #இப்பப்பாருங்க துரை தயாநிதிக்கு கோபம் வந்து சு.சாமி ஒரு ஓசி இட்லின்னு சொல்லுவாரு.

சைபர் ஸ்பைடர்