Published:Updated:

மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!

மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!
பிரீமியம் ஸ்டோரி
மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்

மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்

Published:Updated:
மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!
பிரீமியம் ஸ்டோரி
மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!

க்டிவா எனும் ஒரே 110சிசி ஸ்கூட்டரை வைத்து இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் சப்பணமிட்டு உட்கார முடிந்த ஹோண்டாவால், 125சிசி ஸ்கூட்டர் சந்தையைப் பிடிக்க முடியவில்லை. காரணம், சுஸூகி ஆக்ஸஸ் சென்டர் ஸ்டாண்டு போட்டு 125சிசி செக்மென்ட்டில் இடம் பிடித்துள்ளது. ஏற்கெனவே Boss ஆக இருக்கும் இந்த செக்மென்ட்டில் ஒரு பரீட்சையாக ‘பர்க்மேன் ஸ்ட்ரீட்’ எனும் மேக்ஸி ஸ்கூட்டரைக் களமிறக்கியுள்ளது சுஸூகி. இந்தியாவில் உள்ள 125சிசி ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்களுக்கு மத்தியில் பர்க்மேன் நிலைத்து நிற்குமா? 

மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!

மேக்ஸி ஸ்டைல்!

சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்டை, யாராக இருந்தாலும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். காரணம், இதன் மேக்ஸி ஸ்கூட்டர் டிசைன். `மேக்ஸி ஸ்கூட்டர்’ என்ற பெயருக்கேற்ப மேக்ஸிமம் சைஸில் இருக்கிறது பர்க்மேன். பெரிய முன்பக்க ஏப்ரான் மற்றும் வைஸர், பர்க்மேனின் டிசைனைத் தனித்துக்காட்டுகின்றன. LED ஹெட்லைட்டையும் இண்டிகேட்டர்களையும் அதில் அழகாகச் செருகிய டிசைனர்களுக்கு வாழ்த்துகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!

படிக்கட்டுபோல உயரும் சீட்டு, பெரிய மஃப்ளர், செதுக்கி வைத்திருக்கும் ரியர் பேனல்கள், நீளமான கிராப் ரெயில் மற்றும் LED டெயில் லைட் ஸ்கூட்டரின் முன்பக்க டிசைனோடு கச்சிதமாகப் பொருந்துகிறது. டயர் மட்டும் இன்னும் பெரிதாக இருந்திருந்தால், ஸ்டைலில் முழுத்திருப்தி இருந்திருக்கும்.

பர்க்மேனின் வசதிகளை LED ஹெட்லைட்டில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். காரணம், பர்க்மேனின் ஹெட்லைட் டூவீலர் செக்மென்ட்டின் பெஸ்ட் ஹெட்லைட் பட்டியலில் இணைந்துவிட்டது. ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலுடன் வரும் முதல் சுஸூகி ஸ்கூட்டர் இதுதான். என்டார்க்போல அதிக வசதிகள் இல்லையென்றாலும், தேவையான எல்லாவற்றையும் காட்டுகிறது பர்க்மேனின் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல். ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், இரண்டு ட்ரிப்மீட்டர், நேரம் மற்றும் பெட்ரோல் அளவு எல்லாவற்றையும் பார்த்த நொடியிலேயே தெளிவாகப் படிக்க முடிகிறது. 

மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!

மேக்ஸி ஸ்கூட்டர் என்பதால், ஸ்டோரேஜ் ஸ்பேஸும் மேக்ஸிமம்தான். ஹேண்டில் பாருக்குக் கீழே சார்ஜிங் போர்ட்டுடன் மூடக்கூடிய பெரிய க்ளோவ் பாக்ஸும், மல்ட்டி ஃபங்ஷன் கீ-ஸ்லாட் பக்கத்தில் ஒரு பெரிய கம்பார்ட்மென்ட்டும் உள்ளன. 2 லிட்டர் வாட்டர் பாட்டில் வைக்கும் அளவு பெரியது. ஆக்ஸஸில் இருப்பதுபோலவே 21.5 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் உள்ளது. ஆனால், ப்ரீமியம் புல் ஃபேஸ் ஹெல்மெட்டை வைக்க முடியவில்லை. அலுமினியம் ஃபுட் பெக் ப்ரீமியம் லெவல். சுஸூகியின் தரத்தை ஆக்ஸஸிலேயே பார்த்துவிட்டோம். அதே அட்டகாசமான தரம் பர்க்மேனிலும் தொடர்கிறது. லுக்கில் டயர் சிறியதாகத் தெரிந்தாலும், ஓட்டுதல் தன்மை ஓகேதான்!

சாலையில் சாதிக்கிறதா பர்க்மேன்?

பர்க்மேன் ஸ்ட்ரீட்டில் ஏறி உட்கார்ந்ததுமே இது மற்ற ஸ்கூட்டர்கள்போல அல்ல என்பதை உணர முடியும். அகலமான ஹேண்டில்பார், உயரமான விண்ட் ஸ்க்ரீன் மற்றும் பெரிய ஃபுட்போர்டு இது ஒரு ப்ரீமியம் ஸ்கூட்டர் என்பதற்குச் சாட்சி. நிமிர்ந்து உட்கார்ந்து சொகுசாக ஓட்டும்விதமான ரைடிங் பொசிஷனும், சொகுசாக காலை நீட்டி உட்கார ஏப்ரானில் கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் ஃபுட் ரெஸ்ட்டும் அதிக தூரம் ஸ்கூட்டரை ஓட்டினாலும் களைப்பு தெரியாமல் பார்த்துக்கொள்கிறது. நீளமான சீட், ரைடருக்குக் கிடைக்கும் சொகுசை பில்லியனுக்கும் பகிர்கிறது.

மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!

``பர்க்மேன் ஸ்ட்ரீட்டில் இருப்பது ஆக்ஸஸில் இருக்கும் அதே 124சிசி இன்ஜின்தான். அதிகபட்சமாக 8.7bhp பவரையும் 1.02kgm டார்க்கையும் தருகிறது. ஆக்ஸிலரேஷனிலும் உற்சாகம் குறையவே இல்லை. வலுவான மிட்-ரேஞ்ச் இருப்பதால் சிட்டியின் நெரிசலான சாலையில் ஓவர்டேக்குகள் சுலபமாக உள்ளன. இன்ஜின் ரிஃபைன்மென்ட் திருப்தி. அதிக வேகத்தில் போகும்போது மட்டும் இன்ஜின் சத்தம் கரடுமுரடாக இருக்கிறது. 5.6 லிட்டர் பெட்ரோல் டேங்க், ஸ்கூட்டருக்குப் போதுமான அளவு. ஆனால், பெட்ரொல் போடுவதற்கு, சீட்டைத் திறந்துதான் ஆக வேண்டும். “லிட்டருக்கு 53 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும்’’ என சுஸூகி நிறுவனத்தினர் கூறியுள்ளார்கள்.

பார்க்கப் பெருசாக இருந்தாலும், டிராஃபிக்கில் வளைந்து நெளிந்து போவதற்கு ஆக்ஸஸ்போலவே சுலபமாக இருக்கிறது பர்க்மேன். சுஸூகியின் இன்ஜினீயரிங் டீமுக்கு சில வாவ்களைக் கொடுக்கவேண்டும். காரணம், ஆக்ஸஸைவிட பர்க்மேன் வெறும் 7 கிலோதான் அதிகம். சிபிஎஸ் உடன் முன்பக்க டிஸ்க் மற்றும் பின்பக்க டிரம் பிரேக் குறைந்த நேரத்திலேயே ஸ்பீடைக் குறைக்க உதவுகிறது. டெலிஸ்கேப்பிக் ஃபோர்க்கும், மோனோஷாக் சஸ்பென்ஷனும் அதிர்வுகளை கேட் போட்டு அடைத்து விடுகின்றன. ஆக்ஸஸைவிட ஹேண்டில் பாரின் உயரம் குறைவாக உள்ளதால், உயரமான ரைடர்கள் யு-டர்ன் எடுக்கும்போது ஹேண்டில்பார் காலில் இடிக்கும்.

ரஞ்சித் ரூஸோ படங்கள்: க.பாலாஜி

மேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்!

ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்கள் வலம் வரும் இந்தியச் சாலைகளுக்குப் பரிச்சயமில்லாத மேக்ஸி ஸ்கூட்டரைக் கொண்டுவந்திருக்கும் சுஸூகியின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு லைக்ஸ். சொகுசு, இடவசதி, ஹேண்ட்லிங், சிறப்பம்சங்கள் என எல்லாவற்றிலும் முழுமையான ஒரு ஸ்கூட்டராக இருக்கிறது பர்க்மேன். இதன் சென்னை ஆன்ரோடு விலை 80,569 ரூபாய். செக்மென்ட் லீடரான ஆக்ஸஸைவிட 8,000 ரூபாய் விலை அதிகம். இந்த அதிக விலைக்கு பர்க்மேன் தரும் வித்தியாசமான ஸ்டைல், சிறப்பான LED ஹெட்லைட், ப்ரீமியம் லுக்... ஸ்போர்ட் ஸ்கூட்டர்களுக்கு மத்தியில் சாலையில் எல்லோரும் உங்களைக் கண் வைப்பது உறுதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism