Published:Updated:

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?
பிரீமியம் ஸ்டோரி
பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

பெட்ரோல் போட்டி - டஸ்ட்டர் VS நெக்ஸான் VS எக்கோஸ்போர்ட்

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

பெட்ரோல் போட்டி - டஸ்ட்டர் VS நெக்ஸான் VS எக்கோஸ்போர்ட்

Published:Updated:
பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?
பிரீமியம் ஸ்டோரி
பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

ஹேட்ச்பேக்கோ, செடானோ, எஸ்யூவியோ - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்பது இப்போது ஸ்டேட்டஸ் சிம்பலாகிவிட்டது. கிளட்ச் இல்லாத கார்களையும், மேனுவல் கியர்பாக்ஸ்கொண்ட கார்களின் இன்டீரியரையும் ஒப்பிட்டுப்பாருங்கள். நிச்சயம் ப்ரீமியமாக இருப்பதுபோல் தோன்றும். நிஜமும் அதுதான். இதைத் தாண்டி, ரிலாக்ஸ்டான டிரைவிங்தான் ஆட்டோமேட்டிக்கின் ஸ்பெஷல். இந்த நிலையில் ஃபோர்டு, டாடா, ரெனோ என வெரைட்டியாக மூன்று காம்பேக்ட் எஸ்யூவிகள் கையில் கிடைத்தால் சும்மாவிட முடியுமா? உள்ளே எட்டிப்பார்த்தால்... அட, ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள். போன மாதம் கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு கலரில் நெக்ஸானையும் பிரெஸ்ஸாவையும் ஓட்டிப்பார்த்த எனக்கு, இப்போது மூன்று பெட்ரோல் கார்கள் கிடைத்தன. இந்தப் போட்டியில் மாருதி மட்டும்தான் மிஸ்ஸிங். காரணம், பிரெஸ்ஸாவில் பெட்ரோல் கிடையாது. `அவெஞ்ஜர்ஸ்’ பட ஹீரோக்கள் மாதிரி நெக்ஸான் - எக்கோஸ்போர்ட் - டஸ்ட்டர் மூன்றும் ஆளுக்கொரு ஏரியாவில் கெத்து காட்டின. 

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

டிசைன் எது சூப்பர்?

நெக்ஸான்:
ஏற்கெனவே சொன்னபடி, ஆரஞ்சு கலரில் ஒரு நெக்ஸான் சாலையில் பறக்கிறது என்றால், அது நெக்ஸான் XZA+ வேரியன்ட் (XMA-ம் உண்டு). அதாவது, AMT கியர்பாக்ஸ் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். டாடா மீது அபிமானம் இல்லாதவர்களைக்கூட இதன் கூபே வடிவ டிசைன் கவர்கிறது என்றால், அது உண்மைதான். லாங் ஷாட்டில் பார்த்தால் சிரிப்பதுபோலவே இருக்கும் இதன் கிரில், வித்தியாசமான டிசைன். 16 இன்ச் அலாய் வீல், கான்ட்ராஸ்ட் கலர் ரூஃப், ஃபாக் லேம்ப்ஸ் - எல்லாமே ஸ்டைல்தான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

எக்கோஸ்போர்ட்: அறுகோண கிரில்தான் ஃபோர்டின் பாரம்பர்யம்போல. ஆனால், எக்கோஸ்போர்ட்டுக்கு இதுதான் கொஞ்சம் பல்க்கியான தோற்றம் கொடுக்கிறது. நெக்ஸான் போலவே மற்ற இரண்டு கார்களிலுமே 16 இன்ச் அலாய் வீல். அந்த ஸ்டெஃப்னி வீல், பின்னால் இருப்பது பாதுகாப்பா... ஸ்டைலா?

டஸ்ட்டர்: பார்த்துப் பழகிய டிசைன்தான் என்பதாலோ என்னவோ, பூரிப்பதற்குப் பெரிதாக இல்லை டஸ்ட்டரில்! ஆனால், டஸ்ட்டரின் டிசைனில் சொக்குபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். காருக்குக் கீழே ஃபுட்ரெஸ்ட் பக்கத்தில் `டஸ்ட்டர்’ எனும் பேட்ஜ், ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இதுபோக, டெயில்கேட்டில் இருக்கும் `X-Tronic’ எனும் ஸ்டிக்கர்தான் மேனுவல் டஸ்ட்டருக்கும் ஆட்டோமேட்டிக் டஸ்ட்டருக்கும் உள்ள வித்தியாசம்.

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

உள்ளே எப்படி?

நெக்ஸான்: இந்த விலைக்கு வேறு எந்த எஸ்யூவியிலோ, செடானிலோ இப்படி ஒரு ப்ரீமியம் கேபினைப் பார்த்ததாக நினைவில்லை. வெல்டன் பிரதாப் போஸ். இவர்தான் டாடா டிசைன் டீமின் தலைவர். எர்கானமிக்ஸ் கச்சிதம். பட்டன்களை உபயோகிப்பதற்கு நைஸ் ஃபீல் தருகிறது. பெரிய கார்களில் இருப்பதுபோல், செமி ஃபுளோட்டிங் டச் ஸ்க்ரீன் அருமை. அங்கங்கே க்ரோம் மற்றும் பிளாக் ஃபினிஷ், அற்புதமான ஐடியா. தரம் சூப்பர். சில இடங்களில், அதாவது கப் ஹோல்டர் நாப்ஸ், சென்டர் ஸ்டோரேஜ் பேனல் போன்ற இடங்களில் ஃபிட் அண்ட் ஃபினிஷும் பிளாஸ்டிக்ஸும் சுமார். முன்பக்க சீட்கள், நல்ல அகலமாக இருக்கின்றன. லாங் டிரைவுக்குப் பிரச்னை இல்லை.

எக்கோஸ்போர்ட்:
ஃபோர்டில் எல்லாமே ரிச் லுக். காலத்துக்கு ஏற்றபடி அப்டேட்டும் ஆகியிருக்கின்றன சில விஷயங்கள். குறிப்பாக, அந்த சென்டர் கன்ஸோல், டேஷ்போர்டிலேயே மவுன்ட் செய்யப்பட்ட அந்த டச் ஸ்க்ரீன், சட்டென பார்வையைக் கவர்கின்றன. டேஷுக்கான ஆம்பியன்ட் லைட்டிங் கலரை நாமே விரும்பும் வண்ணத்துக்குத் தேர்ந்தெடுக்கலாம். எல்லா கன்ட்ரோல்களும் கொண்ட ஸ்டீயரிங், செம ஸ்போர்ட்டி. மற்றபடி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் டிசைன், சிம்பிள். டிரைவருக்கான MID, இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம். நெக்ஸான் அளவுக்கு எக்கோஸ்போர்ட்டின் கேபின் விசாலமாக இல்லை. சீட்கள், கொஞ்சம் இறுக்கம். ஆனால், சப்போர்ட்டிவ்.

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

டஸ்ட்டர்: வெளிப்பக்கம் மாதிரிதான் உள்ளேயும் பார்த்துப் பழகிவிட்டது டஸ்ட்டரின் கேபின். ட்ரெண்டுக்கு ஏற்றபடி கொஞ்சம் க்ரோம் வேலைப்பாடுகளாவது கொடுத்திருக்கலாம்! போரடிக்கும் வகையில் இருக்கிறது இன்டீரியர். டச் ஸ்க்ரீனில்கூட எந்தப் புதுமையும் இல்லை. ஆனால், வெளிப்பக்கம் மாதிரியே உள்பக்கமும் செம ஸ்ட்ராங். அதாவது, பில்டு குவாலிட்டி நச்! முன்பக்க சீட்கள் ரொம்பப் பெருசு. சொகுசாகவும் இருந்தன. ஓவராலாக, கேபின் நல்ல விசாலமாக இருக்கிறது, அவ்வளவுதான்.

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

பின்னால்...

நெக்ஸான்:
கூபே டிசைன் என்பதால், `பின்பக்க சீட்டில் உட்கார்ந்தால் தலை கூரையில் இடிக்குமோ?’ - இப்படித்தான் கார் லாஞ்ச் ஆகும்போது எல்லோரும் பயந்தார்கள். ஆனால், அப்படியல்ல. நேர்த்தியான டிசைனால், ஹெட்ரூமில் எந்தச் சிக்கலும் இல்லை. 5 அடி 8 அங்குலம் உள்ளவர்கள் உட்கார்ந்தால்கூட லேசான இடைவெளி இருந்தது. இதுபோக மூன்று பேர் தாராளமாகவும் உட்கார முடிந்தது. பின்பக்கம் ஏ.சி வென்ட் உண்டு. இதன் பூட் ஸ்பேஸ், 350 லிட்டர். இந்த மூன்று கார்களிலேயே குறைவான இடவசதி கொண்டது நெக்ஸான்தான். லோடு ஏற்றவும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

எக்கோஸ்போர்ட்: குறுகலான டிசைன் கொண்டது எக்கோஸ்போர்ட். பின்பக்கம் ரொம்ப நெருக்கடியாகவும் ரொம்ப விசாலமாகவும் இல்லை. ஆனால், நெக்ஸான் அளவுக்கு இடவசதியை ஒப்பிட முடியாது. அதேநேரம், நெக்ஸானைவிட ஹெட்ரூம் சூப்பர்! நெக்ஸானைவிட 2 லிட்டர் பூட் ஸ்பேஸ் அதிகம். அதாவது, 352 லிட்டர். லோடு ஸ்பேஸ் தாழ்வாக இருப்பதால், பொருள்களை ஈஸியாக ஏற்றி இறக்கலாம். பின்பக்கம் ஏ.சி வென்ட், ஸாரி மக்கா! வெயில் காலத்தில் வெக்கைதான். 

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

டஸ்ட்டர்: டஸ்ட்டரின் மிகப்பெரிய அட்ராக்‌ஷனே இதன் பின்பக்க இடவசதி தான். லெக் ரூம், ஹெட் ரூம் எல்லாவற்றிலும் டிஸ்டிங்ஷன் வாங்குகிறது டஸ்ட்டர். சீட்களில் சொகுசாக உட்கார்ந்து நீண்ட தூரம் பயணிக்கலாம். பூட் ஸ்பேஸும் வாவ்! 475 லிட்டர் பூட் இடவசதி. எக்கோஸ்போர்ட் போலவே பொருள்களை எளிதாக ஏற்றி இறக்க முடிகிறது.

எது ஃபன் டு டிரைவ்?

நெக்ஸான்:
சாதாரண 6 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ்தான் நெக்ஸானில் இருக்கிறது. ஆனால், இதன் ரெஸ்பான்ஸ், டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ்போல் அவ்வளவு குயிக்காக இருக்கிறது. இதில் இருப்பது 1.2 லி பெட்ரோல் இன்ஜின், 110 bhp பவர், 17 kgm டார்க். டீசல் அளவுக்கு பெட்ரோலின் பவர் டெலிவரி அத்தனை லீனியராக இல்லை. 3 சிலிண்டர் என்றதும் ரொம்பவும் அதிருமோ என நினைத்தேன். ஆனால், இன்ஜின் ரிஃபைன்மென்ட் பக்கா! 

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

அதேநேரம் ஆக்ஸிலரேட்டர் மிதித்ததும், கியர்பாக்ஸ் அதிர்ந்தது. சில அவசரக் குடுக்கைகளுக்கு இந்த கியர்பாக்ஸ் ஆடியே பயத்தை ஏற்படுத்தும். கொஞ்சம் ஜென்டிலாக ஆக்ஸிலரேஷன் கொடுக்க வேண்டும். வழக்கம்போல் இதில் மூன்று மோடுகள். எக்கோ, சிட்டி, ஸ்போர்ட்ஸ். இதில் எனக்குப் பிடித்தது ஸ்போர்ட்ஸ் மோடுதான். கியரைப் போட்டுக் கிளம்பினால், இதன் ரெஸ்பான்ஸ் அம்சமாக இருக்கிறது. 0-100 கி.மீ-க்கு 15.18 விநாடி ஆனது. ஹெவி டிராஃபிக்குகளில் சிட்டி மற்றும் எக்கோ மோடுகளை ரெக்கமண்ட் செய்வேன். 

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

எக்கோஸ்போர்ட்: ஃபோர்டு என்றாலே அது ஃபன் டு டிரைவ்தானே? ஆம்! இந்த மூன்றில் எக்கோஸ்போர்ட்டை ஓட்டும்போது மட்டும் டிரைவர்களிடம் ஓர் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். வெறும் பவர்ஃபுல் இன்ஜின் மட்டும் இதற்குக் காரணமல்ல; இதன் ரிஃபைன்மென்ட்டும் அப்படி. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் 123 bhp பவர் நெடுஞ்சாலைகளில் தெறிக்கிறது. 1,700 rpm-ல் கிடைக்கும் பவர் 6,500 rpm வரை அப்படியே லீனியராகக் கிடைக்கிறது.

இதுவும் மூன்று சிலிண்டர்தான். ஆனால், நான்கு சிலிண்டர் மாதிரி அதிர்வுகளே இல்லை. கியர்பாக்ஸும் சூப்பர் ஸ்மூத். ஜெர்க்கே தெரியவில்லை. 0-100 கி.மீ-யை வெறும் 13.22 விநாடியில் கடக்கிறது ஃபோர்டு. நெக்ஸான்போலவே ஸ்போர்ட்ஸ் மோடும் உண்டு. நெடுஞ்சாலைகளில் இன்னும் வேகம் காட்டுகிறது எக்கோஸ்போர்ட். பேடில் ஷிஃப்டர்களும் இருந்தன. சிட்டி டிரைவிங்கில் காரை கன்ட்ரோலாக வைத்துக்கொள்ளலாம். டார்க் மட்டும் நெக்ஸானைவிடக் குறைவு. 15 kgmதான். ஆனால், இது பெரிய குறையாகத் தெரியவில்லை.

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

டஸ்ட்டர்: இங்கு இருப்பதிலேயே CVT டிரான்ஸ்மிஷன் கொண்ட கார் டஸ்ட்டர் மட்டும்தான். ஃபோர்டுபோலவே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான். பவர் நெக்ஸானைவிடவும் குறைவு. 106 bhp. டார்க், எக்கோஸ்போர்ட்டைவிடவும் குறைவு. 14.2 kgmதான். இங்கே நான்கு சிலிண்டர் இன்ஜின் கொண்ட காரும் டஸ்ட்டர்தான். சன்னி, ஸ்காலாவில் இருந்த அதே இன்ஜின். அதனால், சந்தேகமே இன்றி இந்த மூன்றில் டஸ்ட்டர்தான் ஸ்மூத் கார். 

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

ஆனால், நன்றாகவே தெரிந்தது - கியர்பாக்ஸ் கொஞ்சம் மந்தம்தான். சட்டென வேகம் பிடிக்க முடியவில்லை. ஆறஅமர பொறுமையாகக் கிளம்புகிறது. இதன் 0-100 கி.மீ வேகப்போட்டியில் இது தெரிந்துவிட்டது. டஸ்ட்டருக்கு 16.57 விநாடி ஆகிறது 100 கி.மீ-யைக் கடக்க. 20-80 கி.மீ, 40-100 கி.மீ வேகப் போட்டியிலும் இது பின்வாங்கத்தான் செய்தது. பொதுவாக, CVT கியர்பாக்ஸில் `ரப்பர்பேண்டு எஃபெக்ட்’ என்று ஒன்று உண்டு. அதிவேகங்களில் ஆக்ஸிலரேஷனில் தொய்வு இருப்பதுபோல் உணரப்படுவதுதான் Rubber Band Effect. இது குறை இல்லை; மைலேஜுக்காக உருவாக்கப்பட்ட விஷயம். இதுவும் ஓரளவு குறைவாகவே இருக்கிறது டஸ்ட்டரில். டஸ்ட்டரை ஜாலியாக ஓட்ட வேண்டுமென்றால், மேனுவல் மோடில் மாற்றிக்கொள்ளலாம். வழக்கம்போல் டிராஃபிக் டிரைவிங்குக்கு எக்கோ மோடுதான் பெஸ்ட்.

ஜாலி ஹேண்ட்லிங்

நெக்ஸான்:
ஹெவி டிராஃபிக்கில் சட் சட் எனப் புகுந்துப் புறப்பட, நெக்ஸான் ஜாலியாக இருக்கும். காரணம், இதன் லைட் வெயிட் ஸ்டீயரிங். ஓட்டுதல் தரமும் அருமை. இதன் டர்னிங் ரேடியஸ் எல்லாவற்றையும்விட குறைவு. 10.2 மீட்டர். இதன் 16 இன்ச் வீல்கள், பெரிய பள்ளங்களில் அசால்ட்டாக எகிறிக் குதித்து வருகிறது. இன்னொரு சிறப்பம்சம் - இதன் கிரவுண்டு க்ளியரன்ஸ். இங்கு இருப்பதிலேயே அதிக கிரவுண்டு கிளியரன்ஸ் கொண்டது நெக்ஸான்தான். 209 மிமீ. ஸ்பீடு பிரேக்கர் கவலையில்லை. ஹைவேஸிலும் இதன் ஸ்டெபிலிட்டி, வியக்கத்தக்க வகையில் இருக்கிறது.

எக்கோஸ்போர்ட்: ஃபோர்டின் ஹேண்ட்லிங்கையும் சும்மா சொல்லக் கூடாது. இத்தனைக்கும் இங்கு இருப்பதிலேயே டர்னிங் ரேடியஸ் அதிகம்கொண்ட கார் இதுதான். 10.6 மீட்டர். ஸ்டீயரிங் ஃபீட்பேக்தான் ஃபோர்டின் இன்னொரு பலம். ஆளே இல்லாத ஒரு சாலை இருக்கிறது. எக்கோஸ்போர்ட்டில் பறப்பதைப்போல் சுகம் வேறு எதிலும் கிடைக்காது. இதன் ஸ்டிஃப் சஸ்பென்ஷன் செட்-அப், பக்காவான ஹேண்ட்லிங்குக்கும் துணைபுரிகிறது. 16 இன்ச் வீல்கள், பெரிய பள்ளங்களை அசால்ட்டாகக் கடக்கிறது. 

டஸ்ட்டர்: ரெனோவின் எடை அதிகமான ஸ்டீயரிங் பற்றி ஆரம்பத்திலேயே ஒரு குறை இருந்து வருகிறது. ரெனோ, அதைக் களைந்தபாடில்லை. ஈஸியான சிட்டி டிரைவிங், பார்க்கிங், டைட் ஆன திருப்பங்களில் காரைக் கையாள்வதற்கு கொஞ்சம் பாடுபடத்தான் வேண்டும். மற்றபடி இதுவும் டிரைவர்களுக்கான கார்தான். கிரவுண்டு கிளியரன்ஸ் 205 என்பதால், பெரிய மேடுகளில் பிரச்னை இருக்காது. டஸ்ட்டர் உற்சாகம் தரும் இன்னோர் இடம் - நெடுஞ்சாலை. இந்த ஹெவி ஸ்டீயரிங் இங்கே ப்ளஸ் ஆக மாறுகிறது. ஸ்டெபிலிட்டியும் சூப்பர். லாங் டிரைவுக்கு டஸ்ட்டர் அற்புதமான சாய்ஸ்.

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

வசதிகள்

நெக்ஸான்:
XMA, XZA+ எனும் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது நெக்ஸான். டாப் வேரியன்ட்டில் புரொஜெக்டர் LED ஹெட்லாம்ப்ஸ், DRL உடன் உண்டு. 6.5 டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி இருக்கின்றன. பட்டன் ஸ்டார்ட், கீலெஸ் என்ட்ரி, கூல்டு க்ளோவ் பாக்ஸ், 8 ஸ்பீக்கர் ஹர்மான் ஆடியோ சிஸ்டம், 3 டிரைவ் மோடுகள், ரியர் ஏ.சி வென்ட்கள் என, டாடாவுக்குப் பெரிய லைக் பட்டன். டூயல் காற்றுப்பைகள், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா (சென்ஸார்களுடன்), ISOFix என ஜமாய்க்கிறது நெக்ஸான்.

எக்கோஸ்போர்ட்: Titanium+ தான் இதன் டாப் வேரியன்ட். ஆட்டோமேட்டிக் புரொஜெக்டர் லைட்ஸ், 17 இன்ச் அலாய் வீல்ஸ், 8 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆண்ட்ராய்டு - ஆப்பிள் கார் பிளே, டயர் பிரஷர் மானிட்டர், ரிவர்ஸ் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், 6 ஸ்பீக்கர் சிஸ்டம், பேடில் ஷிஃப்டர்ஸ், ரேக் அண்ட் ரீச் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட் எல்லாமே உண்டு. பாதுகாப்பில் வேற லெவல். 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் உடன் EBD, டிராக்‌ஷன் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், ISOFix. கொடுக்கும் காசுக்கு மேலேயே வசதிகள்.

டஸ்ட்டர்:
ரெனோ பின்தங்கும் இடம் இதுதான். RXS வேரியன்ட்டின் அதிகபட்ச வசதி எனப் பார்த்தால், 7 இன்ச் டச் ஸ்க்ரீன். ப்ளூடூத், USB, AUX உண்டு. அவ்வளவுதான். பாதுகாப்பில் இரண்டு காற்றுப்பைகள், ABS உடன் EBD, ESP என ஓகே ரகம். ரிவர்ஸ் கேமரா, ரியர் ஏ.சி வென்ட், ISOFix இதெல்லாம் மிஸ்ஸிங்.

தொகுப்பு: தமிழ்

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

ஸ்மூத் CVT டிரான்ஸ்மிஷன், ஜாலியான ஹைவே பயணம், சின்னச் சின்ன ஆஃப்ரோடிங் என டஃப் எஸ்யூவியாக இருக்கும் டஸ்ட்டர், வசதிகள் என்று வரும்போது கையை விரித்துவிடுகிறது. அப்கிரேடு ஆனாலும் போரடிக்கும் டிசைன், இன்னும் தேவைப்படும் பவர், ரிவர்ஸ் கேமரா... போன்ற அதிமுக்கிய வசதிகள் இல்லாதது என சில விஷயங்கள் டஸ்ட்டரைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன.

பெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்?

இங்கே காசுக்கேற்ற கார் என்றால், அது நெக்ஸான்தான். ஸ்டைலிஷ் ஆன டிசைன், தாராள இடவசதிகொண்ட கேபின், ஏ..யேகப்பட்ட வசதிகள் எல்லாவற்றுக்கும் நெக்ஸானுக்குப் பெரிய பூமாலை போடலாம். ஃபிட் அண்ட் ஃபினிஷ்கூட பெரிய குறையாகத் தெரியவில்லை. ஆனால், AMT கியர்பாக்ஸில் தெரியும் ஜெர்க், நம்மை லேசாக ஜெர்க் ஆக்குகிறது. ஜென்டில் பார்ட்டிகளுக்குத்தான் நெக்ஸான் சரியான சாய்ஸ்.

ஜாலி டிரைவிங், கட்டுமானத் தரம், ஸ்டெபிலிட்டியில் ஃபோர்டை அடித்துக்கொள்ள முடியவில்லை. நெடுஞ்சாலையில் ஹை ஸ்பீடில் ஆடாமல் அசையாமல் `விர்’ எனப் பறக்கும்போதே இதன் பில்டு குவாலிட்டி தெரிகிறது. பவர்ஃபுல் இன்ஜின், பக்கா ஹேண்ட்லிங், ஃபன் டு டிரைவ் இவற்றோடு வசதிகளும் சேர்ந்து எக்கோஸ்போர்ட்டை வெற்றியாளர் ஆக்குகின்றன. `எக்கோஸ்போர்ட் கொஞ்சம் காஸ்ட்லியாச்சே!’ என்பவர்கள், Trend+ ஆப்ஷனை வாங்கினால் 1.6 லட்சம் சேமிக்கலாம் என்பதும் ஃபோர்டுக்குப் பெரிய பலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism