என்.எஸ்.கே.வை கலைவாணராக மாற்றிய நூலகம்!
அரசு நூலகங்களே பராமரிப்பு இன்றி இருக்கும் இன்றையச் சூழலில், கடந்த 66 ஆண்டுகளாக எந்தவிதமான உதவிகளோ, விளம்பரங்களோ இல்லாமல் அறக்கட்டளை ஒன்று ஒரு நூலகத்தைச் சிறப்பாக நடத்திவருகிறது. ராயப்பேட்டையில் இயங்கி வரும் 'ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலை’ தான் அது. 1945-ம் ஆண்டு முதல் இன்று வரை தொய்வே இல்லாமல் இயங்கிவரும் இந்த நூலகத்தின் செயலாளர் செல்வத்தைச் சந்தித்தேன்.

##~## |
வாசிப்புப் பழக்கத்தை வளர்த்ததைத் தாண்டி நிறைய நல்ல விஷயங்களையும் இந்த நூலகம் செய்து இருக்கு. இயல், இசை, நாடகம் வளர்த்த கலைஞர்களைக் கௌரவிக்கும்
விதமாக, இந்த நூலகம் அவங்களுக்கு விழா எடுத்து விருதுகள் வழங்கி இருக்கு. நகைச்சுவை மேதை என்.எஸ். கிருஷ்ணனுக்கு 'கலைவாணர்’னு பட்டம் கொடுத்ததும் இதே நூலகம்தான். 1947 ஜூலை 27-ம் தேதி இங்கே நடந்த விழாவில்தான் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ப.சம்பந்த முதலியார்
என்.எஸ்.கிருஷ்ணனுக்குக் கலைவாணர் பட்டம் வழங்கிக் கௌரவித்து இருக்கார். ஜெமினிகணேசன், ஆர்.எஸ்.மனோ கருக்குக் 'கலைமணி’ பட்டம்கொடுத்ததும் இந்த நூலகம்தான். அப்படி இருந்த இந்த நூலகம், இன்றைக்கு நிதிப் பற்றாக்குறையால் நல்ல விஷயங்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கு. ஆனாலும் நூலகத்தை மட்டும் தொடர்ந்து நல்லபடியா நடத்துறோம். இங்கே உறுப்பினர் ஆவதற்கு 100 ரூபா கட்டணம் வாங்குறோம். அதுகூட நூலகப் பராமரிப்புக்காகத்தான். 500 உறுப்பினர்களுக்கு மேல் இருக்காங்க.

தமிழில் தொன்மையான பல துறை சம்பந்தப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இங்கே கிடைக்கும். இதுக்காகவே பல பேர் இங்கே வர்றாங்க. பல வருஷங்களுக்கு முன்பு வந்த வாரப் பத்திரிகைகள், நாளிதழ்களைச் சேகரிச்சுவெச்சு இருக்கோம். இந்தப் பொக்கி ஷத்துக்குப் பெரிய வாசகர் வட்டமே இருக்கு. இந்த நூலகத்துக்கு எதிரில் ஸ்ரீநட ராஜா கல்யாண மண்டபம் இருக்கு. அது தான் இந்த நூலகம் நடத்துறதுக்கான
ஆதாரம். மண்டபத்தோட வருமானத்தில் தான் இந்த நூலகம் இயங்குது. இன்றைக்கும் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மாணவர்களுக்கு இலவசச் சீருடை, புத்தகங்கள் தருவதை வழக்கமா வெச்சி ருக்கோம். ஆகஸ்ட் 15, பொங்கல் பண்டிகைகள் சமயத்தில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் தர்றோம். அன்றைக்கு ஏகப்பட்ட பேரை வெளிச்சம் போட்டுக் காட்டின இந்த நூலகம், இன்றைக்கு வெளிச்சம் இல்லாம இருக்கிறதை நினைக்கிறபோது வேதனையா இருக்குங்க'' என்கிறார்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: பா.காயத்திரி அகல்யா