Published:Updated:

டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!

டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!

போட்டி - ரேடியான் Vs ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் Vs CD110 ட்ரீம் DX Vs பிளாட்டினா 100E

டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!

போட்டி - ரேடியான் Vs ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் Vs CD110 ட்ரீம் DX Vs பிளாட்டினா 100E

Published:Updated:
டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!
டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!

டிவிஎஸ், புதிதாக ரேடியான் எனும் 110சிசி கம்யூட்டர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ``ஸ்போர்ட் மற்றும் ஸ்டார் சிட்டி ப்ளஸ் இடையே பொசிஷன் செய்யப்படும் இந்த பைக், கிராமப்புற இளைஞர்களைக் கவர்வதற்காக உருவாக்கப்பட்டது'' என்கிறது டிவிஎஸ். குறைந்த விலையில் அதிக வசதிகளை எதிர்பார்க்கும் கம்யூட்டர் விரும்பிகளுக்கு, தற்போது விற்பனையில் இருக்கும் ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், ஹோண்டா  CD110 ட்ரீம்  DX மற்றும் பஜாஜ் பிளாட்டினா  100 ES ஆகியவற்றுடன் ரேடியான் பைக்கை ஒப்பிட்டு பார்ப்போம்.

டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!

டிவிஎஸ் ரேடியான்

புதிதாக டிவிஎஸ் களமிறக்கியிருக்கும் ரேடியான், மார்க்கெட் லீடரான ஸ்ப்ளெண்டரின் விற்பனையில் கணிசமான பகுதியைத் தன் பக்கம் இழுக்கக் காத்திருக்கிறது. தற்போது 48,400 ரூபாய் எனும் விலையில் ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே விற்பனைக்கு வரவிருக்கிறது. இது பிளாட்டினாவைவிட 1,000 ரூபாய் மட்டுமே அதிகம். ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸைவிட 3,000 ரூபாயும், CD110விட 400 ரூபாயும் குறைவு. அலாய் வீல், செல்ஃப் ஸ்டார்ட், கிராப் ரெயில், கேரியர்,  LED DRL, டியூப்லெஸ் டயர் போன்ற வசதிகள் ஸ்டாண்டர்டாக வருகின்றன. முதல் முறையாக கம்யூட்டர் செக்மென்ட்டில் யூஎஸ்பி சார்ஜிங் மற்றும் சிங்க்ரோனைஸ் பிரேக் தொழில்நுட்பம் ரேடியானில்தான் வருகிறது. பிளாட்டினாவை ஒப்பிடும்போது கூடுதலாகச் செலவிடும் 1,000 ரூபாய்க்கு மதிப்பானதுதான் ரேடியான். 8.4bhp பவரையும் 0.87kgm டார்க்கையும் கொடுக்கும் 109.7சிசி இன்ஜின் இதில் உள்ளது.  WMTC டெஸ்ட்படி ரேடியான் ஒரு லிட்டருக்கு 69.3 மைலேஜ் தரும் என்று கூறியுள்ளார்கள். இந்த செக்மென்ட்டிலேயே நீளமான சீட் ரேடியானில்தான் உள்ளது. 

டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!
டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!

போட்டி 1

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்


பைக் பற்றித் தெரியாதவர் கள்கூட இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது என்றால் ஸ்ப்ளெண்டர் என்று தான் சொல்வார்கள். காரணம், பல ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் ஹீரோ ஸ்ப்ளெண்டர்தான். இதில் பல மாடல்கள் வந்தாலும், ஸ்டைல் மற்றும் விலையை வைத்துப்பார்க்கும்போது ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்தான் ரேடியானின் முதல் போட்டியாளர். 

டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!

மொத்தம் மூன்று வேரியன்ட்டுகளில் வருகிறது ஸ்ப்ளெண்டர் ப்ளஸ். ஸ்போக் வீல், கிக் ஸ்டார்ட், கிராப் ரெயில் உடன் மட்டுமே வரும் பேஸ் வேரியன்ட் 48,400 ரூபாய்க்கும், அலாய் வீல், கேரியர் உடன் வரும் மிட் வேரியன்ட் 49,400 ரூபாய்க்கும், செல்ஃப் ஸ்டார்ட் உடன் வரும் டாப் வேரியன்ட் 51,400 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. ஸ்ப்ளெண்டர் பைக்கில் சொல்லிக் கொள்ளும்படியான வசதிகள் எதுவும் கிடையாது. அனலாக் கன்சோல்தான். ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸில் 8.36bhp பவர் மற்றும் 0.8Kgm டார்க்கும் தரும் 97.2சிசி இன்ஜின் இருக்கிறது. 112 கிலோ எடைகொண்ட இந்த பைக், 60 kmpl மைலேஜ் தருகிறது. சர்வீஸ் செய்வதற்கு அதிக சிரமம் இல்லாத இன்ஜின் என்பதால், மெக்கானிக்குகளின் ‘பெட் பைக்’ இந்த ஸ்ப்ளெண்டர்.

இது, தனது விற்பனையை ஆக்டிவாவிடம் கொஞ்சம் பறிகொடுத்துவிட்டது. பார்த்துப் பார்த்துச் சலித்துபோன டிசைன் என்பதால், ஹீரோ விரைவில் புதிதாக ஒரு ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸைக் கொண்டுவந்தால் விட்ட சந்தையை மீண்டும் பிடிக்கலாம். ஸ்ப்ளெண்டரைவிட 2,000 ரூபாய் விலை குறைவாக இருப்பதால், ரேடியான் வருகையால் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸின் விற்பனை குறையாமல் ஹீரோ பார்த்துக் கொள்ள வேண்டும்.

டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!

போட்டி 2

ஹோண்டா  CD110 ட்ரீம்  DX


ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கும் அளவுக்கு, பைக் விற்பனையில் சந்தையைப் பிடிக்கவில்லை ஹோண்டா. ஸ்ப்ளெண்டரின் விற்பனையில் 10 சதவிகிதம் மட்டுமே விற்பனையாகிறது CD110 ட்ரீம்  DX. ஹோண்டா பைக்குகளிலேயே விலை குறைவானது  CD110. இரண்டு வேரியன்ட்டுகளாக வரும் CD110 பைக்கில், 48,641 ரூபாய் பேஸ் வேரியன்ட்டில் கிராப் ரெயில் மட்டுமே இருக்கும். 48,931 ரூபாய்க்குக் கிடைக்கும் டாப் வேரியன்ட்டில் கேரியர் கூடுதலாக வரும். இதைத் தவிர பெரிய வித்தியாசம் இல்லை. செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் டியூப்லெஸ் டயர்கள், இதில் ஸ்டாண்டர்டாக வரும் வசதி. 8.31bhp பவர் மற்றும் 0.91kgm டார்க் தரக்கூடிய 109.2சிசி இன்ஜின் இந்த பைக்கில் உள்ளது. லிட்டருக்குச் சுமார் 60 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது CD110. ஹோண்டாவின் இன்ஜினா எனக் கேட்கும் அளவுக்கு, இதில் இன்ஜின் வைப்ரேஷன் அதிகம். தரத்தைப் பற்றியும் சர்வீஸ் பற்றியும் கவலைப்படவே தேவையில்லை.

டிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்!

போட்டி 3

பஜாஜ் பிளாட்டினா 100 ES


‘தனது செக்மென்ட்டிலேயே அதிக மைலேஜ்’ என்றுதான் பிளாட்டினாவை விற்பனை செய்கிறது பஜாஜ். வசதிகள், குறைவான விலை, ஓட்டுதல் தரம் என எதை எடுத்தாலும் அதில் பிளாட்டினா கணிசமான லைக்குகளை வாங்கிவிடும். ஆல்ரவுண்டர் பைக்காக இருக்கும் பிளாட்டினா 47,405 ரூபாய் விலையில் ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டும் கிடைக்கிறது. இந்த செக்மென்டிலேயே விலை குறைவான பைக் பிளாட்டினாதான். LED DRL, அலாய் வீல், செல்ஃப் ஸ்டார்ட், டியூப்லெஸ் டயர்ஸ்,  DTS-i இன்ஜின், டபுள் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் என வசதிகள் ஏராள மாக இருந்தாலும், இன்ஜின் வைப்ரேஷன் இந்த பைக்கில் அதிகம். பிளாட்டினாவில் 8.2 bhp பவர் மற்றும் 0.86  kgm டார்க் தரக்கூடிய 102சிசி இன்ஜின் வருகிறது. இது 60-68 kmpl மைலேஜ் தருவதாகச் சொல்கிறார்கள்.

எது ஓகே?


மைலேஜ், விலை, சர்வீஸ் போன்றவற்றில் பஜாஜ் கவர்ந்திழுத்தாலும், பிளாட்டினாவின் இன்ஜின் வைப்ரேஷன் யோசிக்க வைக்கிறது.    மைலேஜ் விரும்பிகளுக்கு ப்ளாட்டினாதான் பெஸ்ட். CD110-ஐப் பொறுத்தவரை பஜாஜுக்கு இணையாக அதிர்கிறது இந்த ஹோண்டா. ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் - சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் ரீ-சேல் ஜாம்பவான். கவலையே இல்லை. ரேடியான் அதிக வசதிகள், ரெட்ரோ ஸ்டைல், ப்ரீமியம் குவாலிட்டியைக் கொடுக்கிறது. கம்ப்யூட்டர் செக்மென்ட்டில் தற்போது ரேடியான் கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்தான்.    வசதிகள் விரும்புபவர்கள் ரேடியானை டிக் அடிக்கலாம்.

ரஞ்சித் ரூஸோ 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism