“கல்லணையில் திறந்துவிடப்படும் தண்ணீர், ராஜாமடம் வாய்க்கால் வரை வருகிறது. அங்கிருந்து மொத்தத் தண்ணீரும், வைத்திலிங்கம் எம்.பி-யின் ஏரியாவுக்குப் போகிறது. வாய்க்கால்களை மராமத்து செய்ததாக 11 கோடி ரூபாய்க்குக் கணக்கு காட்டிக் காட்டியுள்ளனர். ஆனால், அப்படி எந்தப் பணியும் நடக்கவில்லை. 300 கன அடி தண்ணீர் திறந்துவிட்டால், கடைமடைவரை தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தும், புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எதிர்த்ததால், இப்படிப் பழிவாங்குகிறார்கள்” என்று கொந்தளிக்கிறார், பிச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதி கடைமடை விவசாயிகள், தங்களுக்குத் தண்ணீர் திறந்து விடக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. அதனால், நாகுடி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக ஆகஸ்ட் 22 முதல் காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். சுமார் 200 பேருடன் தொடங்கிய இந்தப் போராட்டத்துக்குப் பெண்கள், இளைஞர்கள் எனப் பல்லாயிரம் பேர் ஆதரவுக் கரங்களை நீட்டினர். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.க தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இடையாத்தூர் கிராம முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் யுவகைலாஷ், “ஆலங்குடி, அறந்தாங்கிக்கு உட்பட்ட மேற்பனைக்காடு, நாகுடி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 27,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, கல்லணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் ஒரே ஆதாரம். அப்படி வருகிற தண்ணீர், இங்குள்ள நாகுடி வாய்க்கால் மூலமாக சிறுமருதூர், திருவாபாடி, கலக்கமங்கலம் வழியாகச் சுமார் 110 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்குச் செல்லும். அதை நாங்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்துவோம். சில வருடங்களாகக் காவிரியில் தண்ணீர் வராததால், விவசாயம் நடக்கவில்லை. இப்போது, காவிரியில் தண்ணீர் வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரைச் சந்தித்து, எங்கள் பகுதிக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரினோம். தண்ணீர் வரும் என்று சொன்னார்கள். ஆனால், ஒரு மாதமாகியும் தண்ணீர் வரவில்லை. கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை எங்கள் பகுதிகளுக்குத் திறந்துவிட்டால், அவர்கள் குறைந்தா போய்விடுவார்கள்” என்றார் கோபமாக.

கண்டையன்கோட்டையைச் சேர்ந்த விவசாயி கண்ணன், “மூன்று போகம் விளைஞ்ச பூமி இது. காவிரியில் தண்ணீர் வராததால், அடுத்தடுத்து விளைச்சல் குறைந்து, மூன்று வருஷமாக எந்த விளைச்சலும் இல்லை. ஆகஸ்ட் 22-ம் தேதி அமைச்சர்கள் துரைக்கண்ணு, இரா.காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் ஆகியோர் கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டனர். கடைமடை விவசாயிகளான நாங்களும் அந்த விழாவுக்குப் போனோம். அடுத்த இரண்டு நாள்களில், கடைமடை பகுதியான மும்பாலைக்கு கொஞ்சம் தண்ணீர் வந்தது. அங்கு வந்த அதிகாரிகள் போட்டோ எடுத்துக்கொண்டு போனார்கள். பிறகு, தண்ணீரை நிறுத்திவிட்டார்கள். அமைச்சர் விஜயபாஸ்கரைச் சந்தித்து முறையிட்டோம். அவர், ஆகஸ்ட் 14-ம் தேதி அதிகாரிகளுடன் நாகுடிக்கு வந்தார். அப்போது, ‘கடைமடைக்கு 300 கன அடி தண்ணீர் கிடைக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விரைவில் முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’ என உறுதியளித்தார். எதுவும் நடக்காமல், ஆலமரத்தடியில் கிடந்து போராடு கிறோம். அமைச்சர் வந்தபோது மாலை, மரியாதை, மைக்செட் என விவசாயிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவானதுதான் மிச்சம்” என்றார் வெறுப்புடன்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் முருகேசனிடம் கேட்டோம். “நாகுடி பகுதிக்குத் தேவையான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். கரைகளில் சில இடங்களில் சரிசெய்துள்ளோம். இன்னும் சில தினங்களில் நாகுடி விவசாயிகளின் மொத்தப் பிரச்னையும் சரியாகும்” என்று உறுதியளித்தார்.

போராட்டம் நடத்திய விவசாயிகளு டன் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ‘250 கன அடி வீதம் பத்து நாள்களுக்குத் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனால், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் வாங்கப்பட்டது. வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால், இதைவிடத் தீவிரமாகப் போராடுவோம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்