தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை, தண்ணீர் சுரண்டல் போன்ற பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, புஷ்கர விழாச் சர்ச்சை தற்போது தீவிரமடைந்துவருகிறது. தாமிரபரணி ஆற்றில் அக்டோபர் 11 முதல் 23 வரை புஷ்கரம் விழா நடத்த முடிவுசெய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. ‘‘நாடு முழுவதுமிருந்து சாதுக்கள், சந்நியாசிகள், பக்தர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் என 50 லட்சம் முதல் ஒரு கோடி பேர் இந்த விழாவுக்கு வருவார்கள்’’ என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கணிக்கிறார்கள். அதனால், ‘இந்த விழாவுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்ய வேண்டும், அரசே முன்னின்று விழாவை நடத்திக்கொடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இன்னொருபுறம், ‘‘இந்த விழாவை நடத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது’’ என்கிற எதிர்ப்புக்குரலும் ஒலிக்கிறது.

புஷ்கரம் என்றால், ‘மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அந்தந்த ராசிகளுக்கு உரித்தான ஆறுகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பயப்பது’ என்று விளக்கம் சொல்கிறார்கள். 2017 செப்டம்பரில், மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் விழா நடைபெற்றது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று நீராடினார்கள். அதுபோல, இந்த ஆண்டு தாமிரபரணியில் புஷ்கரம் விழாவை நடத்த இருக்கிறார்கள். சிருங்கேரி மடத்தின் சார்பாக அக்டோபர் 11-ம் தேதி புஷ்கரம் விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, தாமிரபரணி சிலை செய்து அதனைப் பல்வேறு நகரங்களின் வழியாக எடுத்துவந்தனர். பாபநாசத்தில் அந்தச் சிலையை நிறுவ ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆனால், காஞ்சி சங்கர மடம் உள்ளிட்ட சில மடங்களின் மடாதிபதிகள் அக்டோபர் 12-ம் தேதி முதல் புஷ்கரம் கொண்டாடுகின்றனர். இதுதவிர தனித்தனிக் குழுக்களும் தாங்களாகவே புஷ்கரத்துக்கு ஏற்பாடு செய்துவருவதால் மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், தாமிரபரணியில் புஷ்கரம் விழா நடத்துவதற்கு சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அ.வியனரசு, ‘‘தமிழர்களின் நாகரிகம் தொடங்கிய பூமி, தாமிரபரணி நதிக்கரை. தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் தாமிரபரணியின் பெருமைகளைச் சீர்குலைக்கும் வகையில் இந்து அமைப்பினர் இந்த விழாவை முன்னெடுக்கிறார்கள். கங்கை நதியை ஆன்மிகவாதிகள் அசுத்தம் செய்ததுபோல, தாமிர பரணியையும் சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சந்தேகிக்கிறோம். 144 வருடங்களுக்குப் பிறகு இந்த விழா நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இதற்கு முன்பு இந்த விழா நடந்ததென்று ஆதாரம் உள்ளதா? தாமிரபரணியை நம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயிகள் உள்ளனர். பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைத் தாமிரபரணி பூர்த்திசெய்கிறது.

புஷ்கரம் என்கிற பெயரில் வட இந்திய விழாவைக் கொண்டுவந்து வலுக்கட்டாயமாகத் தமிழகத்தில் திணிக்கும் முயற்சி நடக்கிறது. தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு இதற்குத் துணைபோகிறது. நீராட வருபவர்கள் ஆற்றை அசுத்தம் செய்வார்கள்; துணியை ஆற்றிலேயே விட்டுவிடுவார்கள். குடிநீருக்கும் விவசாயத்துக்குப் பயன்படக்கூடிய தண்ணீர் மாசடையும்; ஆற்றின் சுகாதாரம் கெட்டுவிடும்.

தென் தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொள்ளும் கலாசாரத் திணிப்பு இது. தாமிரபரணி ஆறு புனிதமானது என்பது இப்போதுதான் இவர்களுக்குத் தெரியவந்ததா? இத்தனை நாள் இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? தாமிரபரணியில் மணல் கொள்ளை நடந்தபோது, இதன் புனிதம் இவர்களுக்குத் தெரியவில்லையா? இந்த விழாவுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. மணல் கொள்ளையடிக்கப் பட்டதால் ஆற்றில் ஆங்காங்கே குழிகள் உள்ளன. வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு இதனால் ஆபத்துகள் ஏற்படும். சர்ச்சைக்குரிய இந்த விழாவுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த எதிர்ப்புகளுக்கு இடையே, புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இது குறித்துத் தாமிரபரணி மஹா புஷ்கர விழாவின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான சுவாமி பக்தானந்தா மகாராஜிடம் பேசினோம்.

‘‘வற்றாத தாமிரபரணி நதியின் ராசி, விருச்சிகம். இந்த வருடம் அக்டோபர் 11-ம் தேதி, விருச்சிக ராசிக்கு குரு பகவான் வருவதால், 22-ம் தேதி வரை மஹா புஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது. 144 வருடங்களுக்குப் பின்னர், இந்த விழா நடக்கிறது. இதற்கு முன்னர் இந்த விழா நடந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. தாமிரபரணி மகாத்மியம் நூலில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. புஷ்கர நாள்களில், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நதியில் நீராடினால் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பாலாமடை கிராமத்தில் நீலகண்ட சாஸ்திரியின் சமாதி உள்ளது. அவர் முறப்பநாடு பகுதியில், அதிருத்ரம் என்கிற யாகம் செய்திருக்கிறார். அந்த இடத்தில் தாமிரபரணி ஆறு கைலாயத்தில் வருகிற திசையில் செல்லும். அதனால், அங்கு 36 யாக சாலைகள் அமைத்து வேதவிற்பன்னர்கள் மூலம் அதிருத்ர யாகம் நடத்தவுள்ளோம்.

பாபநாசம் முதல் புன்னக்காயல் வரையிலான 126 கி.மீ தூர நதியின் ஓட்டத்தில், 148 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அந்தந்த இடங்களில் நதிக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தூர்ந்துவிட்ட தீர்த்தக் கட்டங்களையும், படித்துறைகளை யும் சீர்செய்து வருகிறோம். காஞ்சி மடத்துக்குச் சென்று பெரியவரைச் சந்தித்துப் பேசினோம். சைவ மடாதிபதிகள், ஜீயர்கள் உதவியுடனேயே இந்தப் பணிகளைச் செய்துவருகிறோம்.

நாங்கள் அக்டோபர் 11-ம் தேதி இந்த விழாவைத் தொடங்குவதாகச் சொன்னபோது, ‘12-ம் தேதிதானே குருப்பெயர்ச்சி’ என்றார் காஞ்சி மடாதிபதிகள். பின்னர் அவர்களே, 11-ம் தேதியே ஏற்பாடுகளைத் தொடங்கலாம் என்று ஆசீர்வதித்தார்கள். இது எந்த ஒரு தனிப்பட்ட மதத்துக்கான விழாவும் கிடையாது. ஆறு என்பது எல்லோருக்கும் பொதுவானது. இதன் தண்ணீரை எல்லோரும் பயன்படுத்துகிறோம். சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் இந்த விழா நடக்கவிருக்கிறது.

இந்த விழாவுக்காக நிறைய இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் உதவி செய்துள்ளனர். அவர்களையும் கொண்ட குழுவை அமைத்தே பணிகளைச் செய்துவருகிறோம். ஆற்றில் துணிகளைப் போடக் கூடாது என்கிற விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டுவரக் கூடாது என்பதையும் வலியுறுத்திவருகிறோம். நமக்கு நல்லது செய்யும் ஆற்றுக்கு நன்றி செலுத்தும் வகையிலேயே எங்களின் செயல்பாடு இருக்கும். இந்த விழாவுக்கு அரசின் சார்பாக எந்த உதவியும் செய்யப்படவில்லை. ஆற்றில் குழிகள் இருக்கும் இடங்களில் அபாய எச்சரிக்கை போர்டுகளை வைக்கவுள்ளோம். நிரந்தரமாகத் தாமிரபரணியைச் சுத்தமாக வைத்திருக்கும் வகையில், கோவை ஈஷா மையத்தின் உதவியுடன் ஆற்றின் கரைகளில் மரங்களை நடப்போகிறோம். பொதுமக்களின் பங்களிப்புடன் விழா நடப்பதால், பக்தர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். உள்ளூர் மக்களைக் கொண்ட 165 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாமிரபரணியைப் பாதுகாக்கவும் சுத்தமாகப் பராமரிக்கவும் வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலேயே மஹாபுஷ்கரம் நடக்க உள்ளது’’ என்றார்.

- பி.ஆண்டனிராஜ், ச.முத்துகிருஷ்ணன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்