Published:Updated:

`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே!

`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே!
பிரீமியம் ஸ்டோரி
`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே!

குதூகலம்

துரை மாநகரில் நம் வாசகிகளுக்காக அவள் விகடன் நடத்திய ‘ஜாலி டே’ கொண்டாட்டத்தால் ஆகஸ்ட் 19 ‘சண்டே’, ‘பெண் டே’ ஆக மாறிப்போனது. வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் இணைந்து வழங்கிய அவள் விகடன் ‘ஜாலி டே’ பவர்டு பை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, எல்டியா ப்யூர் கோகனட் ஆயில், அசோசியேட் பார்ட்னர் உதயம் பருப்பு வகைகள், ஹாஸ்பிடாலிட்டி ரியோ கிராண்டே.

முதல் நாள் நடந்த முன் தேர்வுப் போட்டிகளில் நடிப்பு, மிமிக்ரி, மெஹந்தி, அடுப்பில்லா சமையல், கிராஃப்ட் வொர்க், டான்ஸ், பாட்டு, செல்ஃபி, டப்ஸ்மாஷ் என அனைத்துப் போட்டிகளிலும் அசர வைத்தனர் வாசகிகள்.

`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறுநாள் காலை முதலே 16 வயது லூட்டிகளிலிருந்து, 80 வயது பாட்டிகள் வரை, நிகழ்ச்சி நடைபெற்ற தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹால் அரங்கத்தில் குவியத் தொடங்கினர். நிகழ்ச்சியைச் சின்னத் திரை நட்சத்திரங்கள் ‘சுட்டி’ அரவிந்த் மற்றும் சித்ரா தொகுத்து வழங்கினர். நடனப் போட்டியில் கரகாட்டம், வெஸ்டர்ன், ராப் பாடல்கள் என ரகம் ரகமாக ரகளை செய்தனர் வாசகிகள். பாட்டுப் போட்டியில், ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடலை, ஆண் குரல், பெண் குரல் என இரண்டு குரல்களிலும் பாடித் தேர்வான இளம்பெண் மாஸா, மாஸ் காட்டினார். சின்னத்திரை ஸ்டார் வடிவேல் பாலாஜி, யூடியூப் ஸ்டார் டிஜே சாம், மிமிக்ரி ஸ்டார் திருச்சி சரவணக்குமார் என செலிபிரிட்டிகள் மேடையைக் கலகலப்பாக்க, வாசகிகள் செம ஹேப்பி அண்ணாச்சி!

கலர்ஸ் தமிழ் சேனலின் ‘பேரழகி’ தொடரின் நாயகி காயத்ரி மேடையில் தோன்ற, ‘ஹாய்ய்ய்ய்’ என்று நம் வாசகிகள் அவரை வரவேற்றனர். இந்த சேனலின் ‘சிவகாமி’ தொடர் லீட் ரோல் ஆர்ட்ஸ்டிஸ்ட்டுகள் நீனு மற்றும் வினோத், அரங்கம் அதிர மேடைக்கு வந்தனர். நீனு கைக்கு மைக் வர, “நான் கேரளா, வயநாட்டுப் பொண்ணு. இப்போ அங்கே வெள்ளத்தால் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. மொத்த மாநிலத்தையும் தண்ணி கழுவியிருக்கு. இப்போ அங்கே மதம் இல்லை, சாதி இல்லை. மனிதநேயம் ஒண்ணு மட்டும்தான் மக்களைக் காப்பாத்திட்டு இருக்கு. அதனால் எப்போதும் அன்போடு, சந்தோஷமா வாழ்வோம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே!

‘ஜாலி டே’யின் ஹைலைட், ‘மதுரையின் பேரழகி’ டைட்டிலுக்கான போட்டி. அதை வென்ற பாக்கியம் அக்காவிடம் பேசினோம். ‘`நான் சூப்பர் மார்க்கெட்ல வேலைபார்க்கிறேன். ரொம்ப சந்தோஷமாவும் கொண்டாட்டமாவும் இருக்கு நிகழ்ச்சி. வடிவேலு பாலாஜிகூட டான்ஸ் ஆடணும்னு ஆசைப்பட்டேன். பட், அவர் மிஸ் பண்ணிட்டார்’’ என்று கலகலப்பாகப் பேசியவர்,

‘` ‘மதுரையின் பேரழகி’... டைட்டில் சூப்பர்ல?! நான் எதிர்பார்க்கவே இல்ல... எனக்குக் கிடைக்கும்னு’’ என்றார் உற்சாகத்துடன்.

எல்டியா ப்யூர் கோகனட் ஆயில் சார்பாக `ஆன் தி ஸ்பாட்' போட்டிகள் நடத்தப்பட்டு கிஃப்ட் பேக்குகள் வழங்கப்பட்டன. அதன் ஓர் அங்கமாக, காதல் திருமணம் முடித்த பெண்களை மேடைக்கு அழைத்து வாழ்த்த, அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்ந்தது. நீளக்கூந்தல், நீள நகம், விசில், கேள்வி-பதில் எனப் போட்டிகளும் பரிசுகளும் அடைமழையாக அரங்கை நனைத்தன. மேலும், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளிலும் பரிசுகளைப் பெற்றனர் வாசகிகள்.

`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே!

ஜாக்பாட் பரிசுக்கான க்ளைமாக்ஸ் நேரம். ‘யாருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்டம்?’ என்று அனைவரும் நகம் கடித்தபடி இருக்க, மைக்கில் வெற்றியாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது. ‘வந்தாள் மகாலட்சுமியே’ பாடலை நம் ஆடியோ டீம் ஒலிக்கச் செய்து அவரை வரவேற்க, சர்ப்பரைஸ் துள்ளலுடன் மேடை நோக்கி ஓடிவந்து, முகம்கொள்ளா புன்னகையுடன் வந்து ஃப்ரிட்ஜை பரிசைப் பெற்றுக்கொண்டார் அந்த மகாலட்சுமி.

பகல், இரவாக மாறத்தொடங்கிய பொழுதிலும், அரங்கைப் பிரிய மனம் இல்லாமல் இருந்த தோழிகளை, ‘அடுத்த வருடம் இன்னும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம்’ என்று அன்போடு வழியனுப்பி வைத்தாள், ‘அவள்’!

`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே!

-அருண் சின்னதுரை, ச.பவித்ரா  மு.முத்துக்குமரன் , பூ.பவித்ரா ,

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்,   மா.ச.புவனேஷ்வர்