இவன் மில்லினியம் இளைஞன். சச்சினை நெருங்கித் தொடுபவன். டிராவிட்டின் ஸ்டைலிஷ் ஷாட்ஸை பிரதியெடுப்பவன். ஷேவாக்கைப் போல துணிச்சல் காட்டுபவன். அசாருதின் போல ஃப்ளிக் செய்பவன் என 2.0 யுகத்தின் கம்ப்ளீட் கிரிக்கெட்டர் இந்த விராட் கோலி.

‘‘இவன் ஓவாரா ரியாக்ட் பண்றான், பொறுமையே இல்லை, இந்தியன் கிரிக்கெட்டர்ஸ் இப்படி நடந்துக்கவே மாட்டாங்க... இவனைப் பார்த்தாலே எரிச்சல்தான் வருது...'' - 10 ஆண்டுகளுக்கு முன் இப்படி பழிக்கப்பட்டவர், வெறுக்கப்பட்டவர்தான் விராட் கோலி. இளைஞர்களுக்கே உரிய துணிச்சலுடனும், துணுக்குடனும் இருந்தார். உண்மையிலேயே மைதானங்களில் தேவையில்லாமல் எல்லாவற்றுக்கும் ரியாக்ட்டும் செய்தார். ஆனால், தன்னை நோக்கி வந்த விமர்சனங்களை சரியாக எடுத்துக்கொண்டார். ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். நெகட்டிவ்களை பாசிட்டிவாக மாற்றினார். இன்று உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உயர்ந்து நிற்கிறார்.

விராட் கோலி இன்றைய தலைமுறையின் அடையாளம். சச்சினுக்குப் பிறகு யார் என்கிற கேள்விகள் எழுந்தபோது அதற்கான பதில் யாரிடமும் இல்லை. சச்சினுக்கு பதில் மாற்று ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடவந்து இன்று சச்சினின் சாதனைகளையே மிஞ்சக்கூடியவராய் நிற்கிறார் விராட் கோலி.

விராட் கோலியின் பத்தாண்டு கிரிக்கெட் கொண்டாட்டம்தான் இந்த இதழின் ஹைலைட். விராட்டின் பர்சனல் தொடங்கி அவரின் மிரட்டல் சேஸிங்ஸ் வரை கோலியைப் பற்றிய 360 டிகிரி கவரேஜை இந்த இதழில் தர முயற்சி செய்திருக்கிறோம். கோலியின் ஸ்பெஷல் பக்கங்கள் குறித்த உங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறோம்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் பிரமாண்டமாக நடந்திருக்கிறது. ஆசியப் போட்டிகளின் பளிச் மொமன்ட்ஸும் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. கிரிக்கெட், கால்பந்தை தாண்டி ஃபார்முலா-1, மோட்டோ ஜீபி, கேரம், கபடி என பல்வகை விளையாட்டுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஸ்போர்ட்ஸ் விகடனில் தொடர்ந்து வரும். ஸ்போர்ட்ஸ் விகடன் குறித்த உங்கள் கருத்துகளை sports@vikatan.com-க்கு இ-மெயில் அனுப்புங்கள்.

நீங்கள் தரப்போகும் ஆதரவு எங்களை மேலும் உற்சாகப்படுத்தும்... வாருங்கள் இணைந்து விளையாடுவோம்!

லவ் ஆல்!

அன்புடன்
ஆசிரியர்