Published:Updated:

ஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்! - பிரேமா

ஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்! - பிரேமா
பிரீமியம் ஸ்டோரி
ஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்! - பிரேமா

வாய்ப்புகள் ஆயிரம்

ஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்! - பிரேமா

வாய்ப்புகள் ஆயிரம்

Published:Updated:
ஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்! - பிரேமா
பிரீமியம் ஸ்டோரி
ஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்! - பிரேமா

ங்கிருந்தாலும் ஓவியங்கள் அழகு. உடை ஓவியங்கள் பேரழகு. அதிலும் நாமே நம் கைப்பட வரைந்த ஓவியங்கள்கொண்ட உடைகளை அணிவது ஆனந்தத்தின் எல்லை. ‘அதெல்லாம் சரிதான்... வரையத் தெரியணும்ல...’ என முணுமுணுப்பவர்களும் ஓவிய உடைகளுக்கு ஆசைப்படலாம். அதற்கு உத்தரவாதம் தருகிறார் சென்னை, ஆவடியைச் சேர்ந்த பிரேமா. ஃபேப்ரிக் பெயின்ட்டிங்கில் அசத்திக் கொண்டிருக்கும் பிரேமா, இதைப் பொழுதுபோக்காகவோ, பிசினஸாகவோ செய்ய நினைக்கிறவர்களுக்கு ஆலோசனைகளைத் தருகிறார்.

ஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்! - பிரேமா

``ப்ளஸ் ஒன் வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அதிகம் படிக்க முடியாத குறையைக் கைவினைக் கலைகள் செய்யறதுல தீர்த்துக்கிட்டேன். மேக்ரமி வயர் கலைப் பொருள்கள், வேஸ்ட் மெட்டீரியல்களில் கிராஃப்ட் அயிட்டம்னு நிறைய செய்யத் தெரியும். அதுல ஃபேப்ரிக் பெயின்ட்டிங் ரொம்ப ஸ்பெஷல். எந்தக் காலத்துலயும் மவுசு குறையாதது. கற்பனைக்கேற்றபடி நாம மனசுல நினைக்கிற எந்த உருவத்தையும்  உடையில கொண்டுவர முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிந்தெடிக், காட்டன், சணல் என எந்தத் துணியிலும் பெயின்ட் செய்யலாம். புடவை, சல்வார், குழந்தைகளின் ஃப்ராக், படுக்கை உறை, தலையணை உறை, ஹேண்ட் பேக்... இப்படி எதில் வேண்டுமானாலும் வரையலாம்’’ என ஃபேப்ரிக் பெயின்ட்டிங்கின் பெருமை களைப் பட்டியலிடுகிறார் பிரேமா.

என்னென்ன தேவை? எவ்வளவு முதலீடு?

ஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்! - பிரேமாஃபேப்ரிக் கலர்ஸ் - சிவப்பு, பிங்க், பச்சை, க்ரோம் மஞ்சள், வெள்ளை ஆகிய அடிப்படை நிறங்கள். கடவுளின் உருவங்கள் வரைய கோல்டு பெயின்ட், சில்வர் பெயின்ட் நிறங்கள். முகத்துக்கும் சருமத்துக்கும் ஸ்கின் கலர், தலைமுடிக்குக் கறுப்பு. இவை தவிர, ஃபிளாட் பிரஷ் மற்றும் ரவுண்டு பிரஷ், டிசைன் பேப்பர், கார்பன் பேப்பர் (நீல நிற கார்பன் கூடாது. மஞ்சள் கார்பன்தான் உபயோகிக்க வேண்டும்). பயிற்சிக்கும் பழகுவதற்கும் விலை மலிவான காட்டன் சேலையுடன் சேர்த்து மொத்த முதலீடே 500 ரூபாய்க்குள் அடங்கிவிடும்.

ஓவியப் பயிற்சி அவசியமா?

அவசியமே இல்லை. ஓவியம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாரும் செய்யலாம். ஓவியம் வரைந்தே பழகாதவர்களும்கூட சுலபமான முறையைக் கற்றுக்கொள்ளலாம். ஃப்ரீ ஹேண்ட் முறை, ட்ரேஸ் எடுத்து வரையும் முறை என இரண்டும் உண்டு. யாருக்கு எது சுலபமோ அந்த முறையில் செய்யலாம்.

ஒரு சேலைக்கு பெயின்ட் செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும்?


ஆடம்பரமான டிசைன் என்றால் ஒரு சேலைக்கு பெயின்ட் செய்து முடிக்க ஒரு வாரம் ஆகும். சிம்பிள் டிசைன் என்றால் இரண்டு நாள்கள் போதும். சல்வாரை ஒரே நாளில் முடிக்கலாம்.

ஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்! - பிரேமாவிற்பனை வாய்ப்பு? லாபம்?

அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள்தான் உங்கள் இலக்கு. அவர்களுடைய பழைய பிளெய்ன் புடவையில் சிம்பிள் டிசைன் வரைந்து கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். பொட்டிக்குகள், மொத்தமாகச் சேலைகள் வாங்கி விற்பவர்களிடமும் பேசி வியாபாரத்தைப் பெருக்கலாம். ஒரு புடவைக்கு ஆடம்பரமான டிசைன் வரைந்து கொடுக்க 1,500 ரூபாய் கட்டணம் வாங்கலாம். மெட்டீரியலோடு சேர்த்துக் கேட்பவர்களுக்கு அதற்கான தொகையையும் சேர்த்து வாங்கலாம். எப்படிப் பார்த்தாலும் 50 சதவிகித லாபம் நிச்சயம்.

கடன் உதவி?

ஆரம்பத்தில் வீட்டிலுள்ள பழைய துணிகளில் வரைந்து பழகலாம். பெயின்ட்டுக்கும் பிரஷ்ஷுக்கும் மட்டும்தான் செலவு. நீங்கள் வரைந்தவற்றையே சாம்பிளாகக் காட்டி ஆர்டர் பிடிக்கலாம்.  மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருப்பவர்கள் உள் கடன் வாங்கலாம்.

பயிற்சி?

1,000 ரூபாய் கட்டணத்தில், ஒரே நாள் பயிற்சியில் நீங்களும் ஃபேப்ரிக் பெயின்ட்டிங்கில் நிபுணராகலாம்.''

- சாஹா

படம் : தி.குமரகுருபரன்