எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதை உள்ளுக்குள் அடக்காமல், ஆட்டத்தின் மூலம் பதில் சொல்லும் வித்தகன் விராட். கோபக்காரன், ஆக்ரோஷக்காரன், சொதப்பல் கேப்டன் எனத் தன்னைச் சுற்றி எழும் நெகட்டிவ் வைப்ரேஷன்களை பேட் மூலம் தூள்தூளாக்குவது கோலியின் ஆல்டைம் அஜெண்டா. யார் என்ன சொன்னாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், வெற்றியை மட்டுமே மனதில் வைத்து, போராடும் தற்கால ஆட்டக்காரர்களில் கோலிக்கு நிகர் கோலியே. உள்ளூரிலும் சரி வெளிநாடுகளிலும் சரி, எதிரணியினரை வெச்சு செய்யும் கோலியின் மிரட்டல் சேஸிங்கில் 5 மட்டும் இங்கே!

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் விளையாடவந்தது இங்கிலாந்து அணி. அந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இது. ஏற்கெனவே டெஸ்ட் தொடரில் இந்தியாவிடம் 4-0 என்று தோற்றதால் ஒருநாள் போட்டியில் பதிலடி தர வேண்டும் என்று முனைப்புடன் ஆடியது இங்கிலாந்து. முதலில் ஆடியவர்கள் இந்தியாவுக்கு 350 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்தார்கள். டெஸ்ட் வெற்றி மிதப்பில் இருந்த இந்திய அணி சொதப்பல் ஆட்டம் ஆட ஆரம்பித்தது. தவான், யுவராஜ், தோனி என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, 63 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து இந்திய அணி. இங்கிலாந்து வெற்றிபெறும் என எல்லோரும் ஈஸியாகக் கணிக்க, இங்கிலாந்திடம் இருந்த வெற்றியை இந்தியா பக்கம் திருப்பினார் கேப்டன் கோலி. ஆட்டத்தின் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழுந்ததால் பொறுமை காத்து ஆடியவர் அதன்பின் அசுர வேகத்தில் அடிக்க ஆரம்பித்தார். 8 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என 105 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து, இந்திய அணியை வெற்றிபெற வைத்தார் கோலி. இவருக்குத் துணையாக கேதர் ஜாதவ், தன் பங்குக்கு 120 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உதவினார். டாப் ஆர்டர் முழுக்க காலியான பின்பும் `நான் சேஸ் மாஸ்டர்’ என்று நிரூபித்தார் கோலி!

ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பெரிய இலக்கை சேஸ் செய்வதற்குள் திணறிவிடுவார்கள். ஆனால், 321 ரன்கள் என்கி இலக்கை `ஜஸ்ட் லைக் தட்’ 37 ஓவருக்குள் முடித்து ‘செஞ்சிட்டோம்ல’ என சொன்னவர் கோலி. அதுவும் இந்திய மண்ணில் அல்ல, ஆஸ்திரேலியாவில். 2012 காமன்வெல்த் பேங்க் தொடரில் இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் போனஸ் புள்ளியுடன் வெற்றிபெற்றால் மட்டுமே இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளமுடியும் என்கிற நிலை. ஆனால், இந்திய அணிக்கு காத்திருந்ததோ அதிர்ச்சிகள் மட்டுமே. சங்ககரா மற்றும் தில்ஷனின் அதிரடி சதத்தால் 320 ரன்களைக் குவித்தது இலங்கை. வாழ்வா... சாவா போட்டியில் 320 ரன்கள் என்கிற அசாத்திய ஸ்கோரை அசட்டை செய்யவில்லை கோலியின் டீம். படைத்தளபதி கோலி ஆடிய ருத்ர தாண்டவத்தில் 36.4 ஓவர்களிலேயே சேஸ் செய்து இலங்கையின் கதையை முடித்தது. 86 பந்துகளில் 133 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார் கோலி. 76 பந்துகளிலேயே சதமடித்த கோலி பின்னர் பத்துப் பந்துகளில் 33 ரன்கள் குவித்து விரைவான வெற்றிக்கு வித்திட்டார். மேலும், அந்தத் தொடரில் கலக்கிய `டெத் ஓவர் கிங்’ மலிங்கா வீசிய 35-வது ஓவரில் 24 ரன்கள் அடித்து மலிங்காவை மட்டையாக மடக்கினார் கோலி.

2008-ல் சர்வதேசப் போட்டியில் கால் பதித்த கோலி, தான் இன்னும் ஒருநாள் போட்டிகளில் 150+ ஸ்கோரைத் தொடவில்லை என்பதை உணர்ந்து ஆடிய ஆட்டம் இது. 2012 ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடிய இந்திய அணி தன் இரண்டாவது போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றதும் சுதாரித்துக் கொண்டது. மூன்றாவது போட்டியில் தன் பரம்பரை எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. பாகிஸ்தான் ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றிபெற்று தில்லாக இருந்தது. இந்தியா நிச்சயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற சூழல். முதலில் ஆடிய பாகிஸ்தான் 329 ரன்களை குவித்தது. சேஸிங்கில், இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் கம்பீர். பின் களமிறங்கிய கோலி, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுடன் இணைந்து நாலாபுறமும் பந்தைச் சிதறடித்தார் 19.1 ஓவர்களில் இரண்டாவது விக்கெட்டுக்கு 133 ரன் பார்ட்னர்ஷிப் எடுத்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் வெளியேற, கோலி தனி ஒருவனாக மொத்த பாகிஸ்தான் பெளலர்களையும் பந்தாட, ஸ்கோர் உயர்ந்துகொண்டே போனது. 211 நிமிடங்கள் களத்தில் நின்று 148 பந்துகளில் 22 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட 183 ரன்களைக் குவித்து, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்களை சேஸ் செய்ய அடித்தளம் அமைத்தார் கோலி. கங்குலி, தோனி வரிசையில் தனது சிறந்த ஸ்கோராக 183 ரன்களைப் பதிவுசெய்தார். இந்த இன்னிங்ஸுக்குப் பின் `சேஸிங் மாஸ்டர்’ என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கோலியை பாராட்டத் தொடங்கியது!

2014 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது இந்தியா. உச்சகட்ட ஃபார்மில் இருந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான அந்தப் போட்டி மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு. ஓவருக்கு 8.5 ரன்கள் தேவை. ஆனால், ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், தாஹிர் என மிரட்டும் பெளலிங் அட்டாக்கை சமாளிக்கவேண்டும். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழவில்லை. ஆனால், ரன்ரேட் எகிறியது. கடைசி 10 ஓவர்களில், ஓவருக்கு 10 ரன்கள் வேண்டும். ஃபார்மில் இல்லாத யுவராஜ் ஒருபுறம் திணறுகிறார். ரன்ரேட் கூடிக்கொண்டே போக, விஸ்வரூபம் எடுத்தார் விராட். ஸ்டெய்ன் பந்துகளைக் கூட பாரபட்சமில்லாமல் சிதறடித்தார். 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் கோலி. கோலிக்கு பர்சனலாகப் பிடித்த இன்னிங்ஸ்களில் இது முக்கியமானது.

2016 உலகக் கோப்பையின் சூப்பர் 10 சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இரு அணிகளும் சம புள்ளிகளைப் பெற்றிருந்ததால், இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியில் நுழையமுடியும் என்ற நிர்பந்தத்துடன் ஆடின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 160 ரன்களில் ஆட்டமிழக்க, கொஞ்சம் கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஓப்பனிங் பிரமாதமாக அமையவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரெய்னா, யுவி இருவரும்கூட நிலைத்து நிற்கவில்லை. அவுட்டானவர்கள் அதிரடியாகவும் ஆடவில்லை. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வழக்கம்போல் அதகளப்படுத்தினார் விராட். 51 பந்துகளை எல்லாப் பக்கமும் சிதற விட்டு 82 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற வைத்தார்.