வெறுங்கையோடு நுழைந்தால் போதும்... 10 வகையான பொருள்களோடுதான் வெளியே வருவீர்கள் என்பதைக் குறிக்கத்தான் டெகத்லான் எனப் பெயர் வைத்திருப்பார்களோ..? 10 வகையான தடகள விளையாட்டுகளை உள்ளடக்கிய போட்டிக்குப் பெயர்தான் டெகத்லான். ஆனால், இந்த டெகத்லானில் 10 வகை அல்ல 1,000 வகையிலான ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. உள்ளே போனால் வெளியே வரும்போது ஒருகூடை பொருள்களோடுதான் வெளியே வர மனது வரும்!

1976-ம் ஆண்டு பிரான்ஸ்-பெல்ஜியத்தின் எல்லையில் ஒரு குட்டி நகரத்தில், குட்டி கடையாக ஆரம்பிக்க ப்பட்டதுதான் டெகத்லான். சிம்பிளாக விளையாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் விற்பனையகம். இந்த குட்டி விற்பனையகம் இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. 32 நாடுகளில் 1100 விற்பனையகங்களுக்கும் மேல் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 62 இடங்களில் டெகத்லான் விற்பனையகங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 6 விற்பனையகங்கள்.சென்னை, மதுரை, கோவையில் அமைந்திருக்கும் விற்பனையகங்களில் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் அமைந் திருக்கும் டெகத்லான்தான் மிகப்பெரியது. சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் டெகத்லான் அமைந்திருக்கிறது.

தேனாம்பேட்டையில் இருக்கும் டெகத்லான் ஸ்டோருக்கு ஒரு விசிட் அடித்தேன். இரண்டு ஃப்ளோர்கள் கொண்ட விற்பனையகம். முதல் தளம் ஆக்வா(நீச்சல்) ஸ்போர்ட்ஸ், வாக்கிங், ஃபுட்பால், ரன்னிங் என பிரித்துவைக்கப் பட்டிருந்தது. இரண்டாம் தளம் கிரிக்கெட், பேஸ்கெட்பால், வாலிபால், சைக்ளிங், பேட்மிட்டன், க்ராஸ் ட்ரெய்னிங் என பிரிக்கப்பட்டிருந்தது. அடிடாஸ், பூமா எல்லாம் புரொஃபஷனல்களுக்கு என்றால் டெகத்லான் புரொஃபஷனல் ஆகும் முனைப்பில் இருப்பவர்களுக்கு என கடைக்குள் நுழைந்ததுமே தெரிந்தது. எங்கு பார்த்தாலும் 49, 99, 199, 299, 499, 799 ரூபாய் என்ற போர்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. பெரும்பாலான பொருட்கள் 49 ரூபாய் முதல் 7999 எனும் ரூபாய் விலையில்தான் இருக்கின்றன.

சூப்பர் மார்க்கெட் போல விளையாட்டு வாரியாக பொருட்கள் பிரித்துவைக்கப்பட்டிருக்கின்றன. கடைக்குள் நுழைந்ததும் முதலில் இருப்பது நீச்சல் விளையாட்டு சம்பந்தப்பட்டவை. சர்ஃபிங், பாடி போர்டிங், ஸ்கூபா டைவிங் என தண்ணீரில் விளையாடும் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவையான பொருள்கள் மற்றும் உடைகள் அந்த இரண்டு அடுக்கிலேயே இருந்தன. கடைக்குள் போகப் போக ஹைக்கிங், ஃபிஷ்ஷிங், மவுன்ட்டனரிங், வைல்டு லைஃப் டிஸ்கவரி, ஹைப்ரிட் சைக்ளிங் என சென்னையில் இதுவரை எந்த ஸ்போர்ட்ஸ் கடையில் பார்த்திராத பொருள்களை எல்லாம் பார்க்கமுடிந்தது.

டெகத்லான் விற்பனையகத்தில் வேலைசெய்பவர்கள் எல்லாருமே இளைஞர்கள். ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு இளைஞர் இருக்கிறார். ``டெகத்லானில் வேலை செய்யனும்னா ஏதாவது ஸ்போர்ட்ஸ் நமக்கு தெரிஞ்சிருக்கனும்'' என்கிறார் ஹைக்கிங் பிரிவில் இருந்தவர். ``நீங்க ஹைக்கிங் போவீங்களா?'' என்று கேட்டதற்கு, ``இந்தியாவில இருக்க முக்கால்வாசி மலையில ஏறிட்டேன்’’ என்றபடி அசால்ட்டாக சொல்லிவிட்டு பொருள்களை அடுக்கிக்கொண்டிருந்தார்.

டெகத்லானுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. டென்ட் எப்படி இருக்கிறது என்று டென்ட்டுக்குள் போய் படுத்துப் பார்க்கலாம். ஆம், பொருள்களை சோதித்து பார்த்துவிட்டே வாங்கலாம். டேபிள் டென்னிஸ் போர்டு, ஃபுட்பால் பிட்ச், கிரிக்கெட் ட்ரெய்னிங் நெட், ஷட்டில் நெட் என ஒவ்வொரு பொருளையும் எடுத்து விளையாடி வாங்கவும் இடம் உண்டு. டி- ஷர்ட் முதல் ஃப்ரிஸ்பி டிஸ்க் வரை எல்லா பொருளுக்கும் கம்பேரிசன் போர்டு வைத்திருக்கிறார்கள். இந்த மாடலுக்கும் அந்த மாடலுக்கும் என்ன வித்தியாசம் என அவர்களே சொல்கிறார்கள்.

பொருள்கள் மட்டுமல்ல, சில விளையாட்டுகளுக்குப் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. அதற்கான இடமும் டெகத்லான் உள்ளேயே இருக்கிறது. சைக்ளிங், ட்ரெக்கிங், சர்ஃபிங் போன்றவற்றுக்கு டெகத்லான் மூலமாகவே ஈவென்ட்டுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

டெகத்லானில் விற்கப்படும் பொருள்கள் டெகத்லான் தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படுபவை. ‘கலென்ஜி’ என்றால் ரன்னிங், ‘கிப்ஸ்டா’ என்றால் கால்பந்து, ‘குவேச்சா’ என்றால் ஹைக்கிங், ‘சுபீ’ என்றால் ஆக்குவா ஸ்போர்ட்ஸ் என ஒவ்வொரு ஸ்போர்டுக்கான பொருட்களைச் செய்ய ஒவ்வொரு பிராண்டை வைத்துள்ளார்கள்.

பரபரப்பாகப் போகும் இந்த ஸ்மார்ட்போன் வாழ்க்கையில் விளையாட்டுக்குக் குறைவான நேரமே ஒதுக்குகிறோம். விளையாட நேரம் இருந்தாலும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருப்பவர்கள் டெகத்லானுக்கு வந்தால் என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்கிற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். விடையில்லை என்றாலும், ஏதாவது விளையாட வேண்டும் என்கிற ஆசை வந்துவிடும்.

விளையாடுங்க!