சிந்து, சாய்னா, போபண்ணா, ஹீனா சித்து என பலரும் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பட்டையைக் கிளப்பினர். இந்தியா எதிர்பாராத சில விளையாட்டுகளிலும் பதக்கம் வென்று அசத்தியது. பல புதிய நாயகர்கள் தங்களின் வருகையை இந்தத் தொடரின் மூலம் அறிவித்துள்ளனர். அவர்களில் ஒருசிலர் பற்றி மட்டும் இங்கே...

ஹீமா தாஸ்

இந்தியாவின் தடகள அரங்கில் ஹீமா எடுத்துள்ள விஸ்வரூபம் இன்னும் ஓயவே இல்லை. 20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஹீமா, ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அசத்தியுள்ளார். தகுதிச் சுற்றில் முன்பைவிட சிறப்பாக செயல்பட்டு தேசிய சாதனையோடு ஃபைனலுக்குள் நுழைந்தவர், இறுதிப் போட்டியில் அந்தச் சாதனையையும் தகர்த்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஜூலையில் தங்கம் வென்றபோது ஓடியதைவிட இப்போது 0.67 விநாடிகள் முன்பாகவே எல்லையைக் கடந்துள்ளது இந்த வேகப்புயல். 4X400 ஓட்டப்பந்தயத்தில் தங்கமும் வென்று அசத்தியிருக்கிறார் ஹீமா தாஸ். அதுமட்டுமல்லாமல் 4X400 மீட்டர் கலப்பு ஓட்டப் பந்தயத்திலும் இந்திய அணிக்கு வெள்ளி வென்று கொடுத்துள்ளார் ஹீமா!

ராஹி சர்னோபாத்

பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார், இந்தியாவின் ராஹி சர்னோபாத். கடைசிச் சுற்றின்போது 2 புள்ளிகள் பின்தங்கியிருந்தவர், 3 முறை (கடைசிச் சுற்று, 2 டை பிரேக்கர்) போராடி தங்கம் வென்றார். தகுதிச் சுற்றில் 580 புள்ளிகளுடன் ஏழாம் இடம் பிடித்து ஃபைனலுக்குள் நுழைந்தவர், ஃபைனலின் முதல் 2 சுற்றுகளிலும் 5 முறையுமே இலக்கை சரியாகக் குறிவைத்தார். ஒரு கட்டத்தில் இரண்டாம் இடத்திலிருந்த தாய்லாந்து வீராங்கனை யாங்பாய்பூனைவிட 3 புள்ளிகள் அதிகம் பெற்றிருந்த சர்னோபாத், 7-வது சுற்றுக்கு மேல் கொஞ்சம் சறுக்கினார். 9-வது சுற்றின் முடிவில் 34-32 எனப் பின்தங்கவும் நேரிட்டது.

கடைசிச் சுற்று... 5 வாய்ப்புகளில் எதிராளியைவிட 2 புள்ளிகளாவது அதிகம் பெறவேண்டும். ரொம்பவுமே கடினமான விஷயம்தான். ஆனால், எல்லாம் அவருக்குச் சாதகமாக நடந்தது. அந்தக் கடைசிச் சுற்றில், ராஹி சர்னோபாத் எடுத்ததோ 2 புள்ளிகள்தான். ஆனால், கடைசிச் சுற்றின் 5 வாய்ப்புகளையுமே வீணடித்தார் யாங்பாய்பூன். இப்போது 34-34. இன்னும் தங்கத்துக்கான வாய்ப்பு நீடிக்கிறது. டை பிரேக்கரில் வெற்றிபெற முடியும். முதல் டை பிரேக்கரும் சமமாய் முடிய, மீண்டும் டை பிரேக். இம்முறை கிடைத்த வாய்ப்பை சாதகமாக்கிக்கொண்டார், ராஹி. 3-2 என அந்த ஷூட் அவுட்டை வென்று தங்கத்தையும் கைப்பற்றினார்.

நீரஜ் சோப்ரா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மட்டுமல்ல, உலக தடகள அரங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. 20 வயதேயான இந்த ஹரியானா வீரரின் வளர்ச்சி உலக சாம்பியன்களையே பிரமிக்க வைத்துள்ளது. மே மாதம் நடந்த தோஹா டைமண்ட் லீக் தொடரில் 87.43 மீட்டர் தூரம் வீசி தன் தேசிய சாதனையை இவரே முறியடித்தபோது, ‘ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவின் முதல் தடகளப் பதக்கம் இவரால் கிடைக்கும்’ என்று ஆருடம் சொன்னர்கள். அந்தப் பந்தயத்தில் தங்கம் வென்ற உலக சாம்பியன் வெட்டர் கூட ‘நீரஜ் என்னைவிட மிகச் சிறப்பான இடத்தை அடைவார்’ என்று வியந்து சொன்னார்.

காமன்வெல்த் போட்டியில் கலக்க, இந்தத் தொடரின் தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏந்தும் கௌரவம் பெற்றார் இந்த இளைஞ. ஆம், இந்தியாவுக்கு இவர் மீது அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையை இப்போது இரட்டிப்பாக்கியுள்ளார் நீரஜ். ஆசிய போட்டியில் தங்கம் வாங்கியதுகூட இரண்டாம் பட்சம்தான். ஆனால், அவர் வீசிய தூரம்! 88.06 மீட்டர் வீசி தேசிய சாதனையை மீண்டும் புதிதாக்கியுள்ளார். 20 வயதிலேயே பட்டையைக் கிளப்பும் நீரஜ் நிச்சயம் 2020 டோக்கியோவில் பதக்கம் வெல்வார்!

டூட்டி சந்த்

மற்ற இந்தியர்களின் வெற்றியை விடவும் பெரிதாகக் கொண்டாடப்படவேண்டியது டூட்டி சந்த் பெற்ற வெற்றி. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு சில தினங்களுக்கு முன்பு ‘பாலின சோதனை’யில் தோற்றுவிட்டதாக போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டவர் இவர். தன் மீதான கலங்கத்தைத் துடைக்க அவருக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. ஆனால், அதைவிடக் கொடுமை - குற்றம் சுமத்தப்பட்டபோது அவருக்கு வயது 18. டூட்டியின் கால்கள் மீண்டும் டிராக்கில் ஓடத் தொடங்கின. அவர் மனதில் இருந்த வைராக்கியம் அவரது கால்களுக்கு இன்னும் வேகம் கொடுத்தன. கடந்த ஆண்டு புவனேஷ்வரில் நடந்த அசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம் என இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்றார். இப்போது, தான் நிராகரிக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கம். அதுவும் 100 மீட்டர், 200 மீட்டர் இரண்டிலும்!