துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அசாதாரண சாதனை நிகழ்த்தி தங்கம் வென்றிருக்கிறார் பதினாறு வயது சவ்ரப் சௌத்ரி. கரும்பு தோட்டங்கள் சூழ்ந்திருக்கும் உத்திர பிரதேச மாநிலத்தின் கலீனா என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர்தான் இந்த குட்டிப்பையன்.

டொமோயுகி மட்சுடா என்னும் 42 வயது ஜப்பானிய வீரர் 2017-ம் ஆண்டின் உலகின் சிறந்த வீரர் விருதை வென்றவர். ஜின் ஜோங்கோஹ் நான்கு முறை ஒலிம்பிக் சாம்பியன். கொரியா வீரர் லீ தேமேயுங் ஆசிய சாம்பியன்... இந்த ஜாம்பவான்கள் எல்லோரையும் வீழ்த்தித்தான் தங்கம் வென்றிருக்கிறார் சவ்ரப் செளத்ரி.

மூன்றுவருடங்களுக்கு முன்னர் 'ஜஸ்ட் லைக் தட்' பொழுதுபோக்கு விளையாட்டாக தொடங்கிய துப்பாக்கி சுடுதல்தான் இன்று சவுரப்பின் வாழ்க்கையாக மாறியிருக்கிறது. 2018 தொடக்கத்தில் டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் தங்கம். பின்னர் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம். அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் என 2018 முழுக்கவே தங்கவேட்டை நிகழ்த்தியிருக்கிறான் இந்த ஹைஸ்கூல் பையன்.

இந்தோனேஷியாவின் ஆசிய போட்டியில் சவுரப்பின் வெற்றி தகுதிச்சுற்றிலேயே உறுதியானது. குவாலிஃபையரில் 586 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தவர், இறுதிப் போட்டியில் 240.7 புள்ளிகளோடு தங்கம் வென்றார்.

சாம்பியன் மட்சுடாவை பொறுத்த வரை உக்ரைனின் பத்தொன்பது வயதான கோரோஸ் டைலோவ்தான் தனக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பார் என நினைத்திருந்தார். ஆனால், இந்த பதினாறு வயது சவ்ரப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்கவில்லை. சவ்ரப்பின் கடைசி ஷாட் எப்படி வேண்டுமானாலும் சென்று இருக்கலாம். இறுதி போட்டிக்கே உரித்தான பிரஷர், அனுபவமின்மை, வயது, கட்டுக்கடங்காத கூட்டம் என எண்ணற்ற புறக்காரணிகள் அவரை நிலை குலைய வைத்திருக்கலாம். ஆனால், எதன்பக்கமுமே அவர் கவனத்தை திருப்பாமல் கடைசி ஷாட்டில் துல்லியமாக சுட்டார். தங்கம் வென்றார்.

``2016-ல் இருந்துதான் முறையான பயிற்சிக்கு சென்றான் சவ்ரப். 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றான். பயிற்சி மையத்தில் எடுத்த பயிற்சி போதாதென்று பிளாஸ்டிக் குண்டுகளைக்கொண்டு வீட்டு சுவரில் சுடத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் வீட்டின் சுவர் முழுக்கவே குண்டுகளின் தடங்கள்தான் தெரிய ஆரம்பித்தன. அந்த தடங்களே அவனின் வெற்றித் தடம் என்பதை நாங்கள் இப்போது உணர்கிறோம்" என்கிறார் சவ்ரப்பின் அண்ணன் நிதின்.

``பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பயிற்சி கூடத்துக்கு செல்வது இங்குள்ள சிறுவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. அரசு நினைத்தால் ஒரு பயிற்சி கூடத்தை ஊருக்குள்ளயே அமைக்கலாம். அப்படி நடந்தால் இன்னும் பல சவ்ரப்கள் இந்தியாவுக்கு கிடைப்பார்கள்" என்பதே கலீனா கிராமத்தினரின் வேண்டுகோள்.

ஆமாம்... சவ்ரப்கள் நம் கிராமங்களிலும் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை இன்னும் அடையாளம் காணாமல் இருக்கிறோம்!