‘‘இன்னொரு கோப்பையை வென்று தந்து மட்டுமே அவர்களுக்கு நன்றி செலுத்த முடியும்’’- சென்னையின் எஃப்.சி ரசிகர்களைப் பற்றிக் கேட்டதற்கு, அணியின் பயிற்சியாளர் ஜான் கிரகரி சொன்ன நெகிழ்ச்சியான பதில் இது. வார்த்தைகளில் மட்டுமல்ல, கண்களும் அதைத்தான் சொல்கிறது. கால்பந்து ரத்தத்திலேயே ஊறிப்போன இங்கிலாந்து ரசிகர்களைப் பார்த்தவர், கிரிக்கெட் மதம் பிடித்திருக்கும் இந்நாட்டில் இப்படியொரு ஆதரவை எதிர்பார்த்திருக்கவில்லை. இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றபோதே ``இது ரசிகர்களுக்காக’’ என்று உணர்ச்சி வசப்பட்டவர், இன்னொரு கோப்பையை வென்றுதர இன்னும் தீவிரமாய் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். ப்ரீ - சீசன் பயிற்சிக்கு சென்னை அணி மலேசியா புறப்படும் முன் ஜான் கிரகரியைச் சந்தித்தேன்.

``ஐ.எஸ்.எல் சீசன் முடிந்ததும் என்ன செய்தீர்கள்?’’

"என் ஊரில் ரிலாக்ஸ்டாக விடுமுறையைக் கழித்தேன்ன். ஃபிஃபா உலகக் கோப்பை என் விடுமுறையை சிறப்பாக்கியது. அருமையான தொடர். ஒவ்வொரு போட்டியும் கொண்டாட்டம். டெக்னாலஜியின் வளர்ச்சி மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டதில் டபுள் சந்தோஷம்".

"இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் கேரத் சவுத்கேட் உங்கள் பயிற்சியின்கீழ் விளையாடியவர். அவரது உலகக்கோப்பை பர்ஃபாமென்ஸைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"சவுத்கேட் மிகச் சிறந்த வீரன். மிகச் சிறந்த மனிதனும் கூட. அந்த இளம் இங்கிலாந்து அணியை மிகவும் அருமையாக வடிவமைத்திருந்தார். தன் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். எந்த இடத்திலும் அவர் தன்னை முதன்மைப்படுத்தவே இல்லை. அதில் இருந்தே அவரின் வெற்றி தொடங்கியது. அவர் வீரராக இருந்தபோது செய்ய முடியாததை இப்போது செய்ய முற்பட்டுக்கொண்டிருக்கிறார். இங்கிலாந்து கால்பந்து அணிக்கு மிகச் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது"

"ப்ரீ சீசன் பயிற்சிக்காக மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?"

"எங்களைப் பொறுத்தவரை இந்தியாவைப் போன்ற சீதோஷ்ண நிலை கொண்ட ஓர் ஊரில் ப்ரீ சீசன் பயிற்சிகள் மேற்கொள்வதே சரியென்று தோன்றியது. ஏனெனில், அணியிலுள்ள வீரர்கள் சிலர் இந்தியாவின் கால நிலைக்குக் கொஞ்சமும் பழக்கப்படாதவர்கள். அணியில் செட் ஆவதற்கு முன்பு, அவர்கள் விளையாடும் இடத்தின் கால நிலைக்கு வீரர்கள் செட் ஆவது முக்கியம். அப்போதுதான் அவர்களால் தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்த முடியும். மலேசியாவின் கிளைமேட் இந்தியாவைப் போன்றதே. அதனால்தான் மலேசியாவைத் தேர்ந்தெடுத்தோம்."

"ப்ரீ சீசனில் எல்லா வீரர்களும் பங்கேற்கிறார்களா?"

"இல்லை. SAFF சாம்பியஸ்ன்ஷிப் முகாமில் பங்கேற்பதால் ஜெர்ரி, அனிருத் தாபா உள்ளிட்ட நான்கு வீரர்கள் எங்களுடன் பயணிக்கவில்லை. அவர்கள் தாமதமாக அணியுடன் இணைந்துகொள்வார்கள். அதேசமயம் வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக மலேசியாவில் இணைவார்கள். 'பி' டீம் வீரர்கள் ஆறு பேரும் எங்களோடு பயணிக்கிறார்கள். 25 பேர் கொண்ட இறுதி ஸ்குவாடில் பி டீம் வீரர்கள் இருவர் சேர்க்கப்படுவார்கள்".

"பால் குரோவ்ஸ் துணைப் பயிற்சியாளர் ஆகியுள்ளார். கோல்கீப்பிங் பயிற்சியாளராக கெவின் ஹிட்ச்காக். எதற்காக உங்கள் குழுவில் இப்படி அதிரடி மாற்றங்கள்?"

"கடந்த சீசனில் என்னுடைய பயிற்சியாளர் குழுவில் இருந்தவர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்களின் செயல்பாட்டில் முழு திருப்தி. ஆனால், அவர்களே இந்த முறையும் தொடரும்போது, அது வீரர்களுக்கு பழக்கப்பட்ட பயிற்சி முறையாக இருந்துவிடும். என்னைப் பொறுத்தவரை பயிற்சி முறைகளை வீரர்கள் ஈசியாக எடுத்துவிடக்கூடாது. ஒவ்வொன்றும் அவர்களுக்குப் புதிதாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் இந்த மாற்றம்.

பால் குரோவ்ஸ் பிரீமியர் லீக் தொடரில் பயிற்சியாளராக இருந்த அனுபவம் கொண்டவர். போர்ட்ஸ்மௌத், போர்ன்மௌத் போன்ற மிகப்பெரிய அணிகளில் பயிற்சியாளர் குழுவில் இருந்துள்ளார். அவரது அனுபவம் நிச்சயம் அணிக்குக் கைகொடுக்கும். ஹிட்ச்காக் - செல்சீ, வாட்ஃபோர்ட் போன்ற அணிகளில் ஆடியுள்ளார். இவர்கள் இருவருடனும் பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்".

"இந்த முறை ஆசியக் கோப்பை நடப்பதால் ஐ.எஸ்.எல் தொடரில் மிட்-சீசன் பிரேக் நடைமுறைக்கு வருவது பற்றி..?"

"கால்பந்தைப் பொறுத்தவரை ஒரு அணி தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும்போது எந்த விதமான பிரேக்கும் இருக்கக் கூடாது என்றுதான் நினைப்பார்கள். ஏனெனில் அது அவர்களின் வெற்றிப் பயணத்தை பாதிக்கக்கூடும். வேகத்தை, வெற்றிக்கான வேட்கையைக் குறைத்துவிடும். இவ்வளவு ஏன், ஆட்டத்துக்கு நடுவே நமது அணி முன்னிலையில் இருந்தால் 'half-time' பிரேக் இல்லாமல் இருந்தால் பரவாயில்லை என்றுகூடத் தோன்றும். ஏனெனில் அது எதிரணி மீண்டு வருவதற்கான வாய்ப்பாக அமைந்துவிடும். இவையெல்லாம் வெற்றி பெறும் அணியின் மனநிலை.

இதுவே ஒரு அணி தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு ஒரு பெரிய பிரேக் தேவைப்படும். அதிலிருந்து மனதளவில் மீண்டு வர, தவறுகளைச் சரிசெய்துகொள்ள, புதிய யுக்திகளை அமைக்க அவர்களுக்கு நேரம் தேவைப்படும். இந்த பிரேக்கும் அப்படித்தான். அதுவரை அணியின் செயல்பாடு எப்படி என்பதைப் பொறுத்துத்தான். அதைப் பற்றி இப்போதே யோசிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்".

"கடந்த சீசனில் சென்னையின் எஃப்.சி ரசிகர்களின் ஆதரவு எப்படி இருந்தது?"

"வாவ். நான் உண்மையிலேயே சிலிர்த்துவிட்டேன். லண்டனைப் போன்றே சென்னை ரசிகர்கள் அணியையும் வீரர்களையும் கொண்டாடினார்கள். இந்த விஷயத்தில் சென்னையும், லண்டனும் ஒன்றுதான். சென்னை போட்டி மட்டுமல்லாது, வெளியூர்களில் நடந்த போட்டிகளுக்கும் நூற்றுக்கணக்கில் வந்து ஆதரவு தெரித்தனர். அப்போதெல்லாம் சென்னையில் விளையாடியதைப் போன்றுதான் உணர்ந்தேன். அதுமட்டுமல்ல, கோவாவில் அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பிராக்டீஸ் செஷனைப் பார்க்கவே நிறைய ரசிகர்கள் வந்திருந்தனர். அந்த அளவுக்கு அணியோடு அவர்கள் ஒன்றியுள்ளனர். அவர்களின் ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கம். அதுதான் எங்களை வெற்றி பெற வைத்தது என்றே சொல்லலாம். இந்த முறையும் ரசிகர்களுக்கு கோப்பை வென்று கொடுத்துத்தான் நன்றி செலுத்த முடியும். அதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம்".