Published:Updated:

முதலில் குட்டி கமாண்டோ... அடுத்து கிரீன் கமாண்டோஸ்! - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி

முதலில் குட்டி கமாண்டோ... அடுத்து கிரீன் கமாண்டோஸ்! - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி
பிரீமியம் ஸ்டோரி
முதலில் குட்டி கமாண்டோ... அடுத்து கிரீன் கமாண்டோஸ்! - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி

நல்லாசிரியர், நற்பள்ளி, நல்ல ஊர்!இரா.குருபிரசாத் - படம் : தி.விஜய்

ருக்குள் பலர் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்க, குட்டி கமாண்டோ படையாகப் பறக்கிறார்கள் சிறுவர்கள். பேசுவதற்கே சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவன் அஜய், இப்போது தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக ரைம்ஸ் சொல்கிறான். தமிழ்ப் பேச்சுப் போட்டிக்காக காமராஜரின் வாழ்க்கையை மூச்சுவிடாமல் பொழிகிறான் வடஇந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த டோனக். இப்படி, கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திரும்பிய இடங்களிலெல்லாம் ஆச்சர்யங்கள் கொட்டிக்கிடக்கின்றன!

மெட்ரிக் பள்ளிகளில்கூட இல்லாத விஷயங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பதால்தான், மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார், இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸதி.

முதலில் குட்டி கமாண்டோ... அடுத்து கிரீன் கமாண்டோஸ்! - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி

“நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் கோவைதான். சின்ன வயசுலயிருந்து டீச்சர் ஆகணும்னு ஆசை.

2009-ம் ஆண்டு, போடிபாளையம் ஸ்கூல்ல ஹெச்.எம் புரமோஷன் கிடைச்சது. அப்புறம், இந்த ஸ்கூலுக்கு வந்தேன்.

நான் வந்த புதுசுல, எங்க ஸ்கூலை ஒரு டீம் விசிட் பண்ணினாங்க. அவங்க, பள்ளிக் கழிப்பறை மோசமான நிலையில் இருப்பதை போட்டோ எடுத்து சி.எம் செல்லுக்கு அனுப்பிட்டாங்க. உடனே அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கி, மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின்கீழ் ஒரு லட்ச ரூபாய் பெற்றோம். ஆனால், கழிப்பறைகளைச் சரி செய்ய அது போதவில்லை.

பக்கத்துல இருக்கிற எல் அண்டு டி கம்பெனியில் பேசினோம். அவர்கள் உதவியோடு  கழிப்பறைகளைக் கட்டினோம்.  அதோடு, தண்ணீர், ஆர்.ஓ வசதிகளையும் செய்துகொடுத்த அவங்க, ஒருகட்டத்தில் இந்தப் பள்ளியைத் தத்தெடுத்தாங்க. மார்பிள் தரை, மேக்னட் போர்டு, ஸ்மார்ட் க்ளாஸ் ரூம், ரெண்டு ஆசிரியர்கள் பணியமர்வுனு நாலு வருஷத்துல நிறைய வசதிகள் செய்து கொடுத்தாங்க. தவிர, விகேசி நிறுவனம் மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் காலணிகள், டை, ஐ.டி கார்டுகளை கொடுத்துட்டு வர்றாங்க’’ என்ற ஸதி, நம்மை ஸ்மார்ட் க்ளாஸ் ரூமுக்கு அழைத்துச் சென்றார்.

“இங்க 28 மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்குறாங்க. நான் வந்தப்போ, இந்தப் பள்ளியின் மாணவர்  எண்ணிக்கை 146. இந்த ஊரில் பெரியவர்கள், குழந்தைகள்னு பலரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால, பல்வேறு உபாதைகள் வந்து மாணவர்களின் வருகை குறைவாக இருந்துச்சு. தினமும் அதிகாலை, மாலைனு இரண்டு வேளைகளும், எங்க மாணவர் அணி விசில் அடிச்சபடி ரவுண்ட்ஸ் வருவாங்க. யாராவது, திறந்தவெளியில் மலம் கழித்தால், அது தொடர்பாக விழிப்பு உணர்வு ஏற்படுத்தும்விதமாகப் பேசுவது, அதையும் மீறி அதைச் செய்றவங்களை பஞ்சாயத்துச் செயலாளரிடம் சொல்வதுனு கருத்தா கண்காணிச்சாங்க. ஒருமுறை துணை கலெக்டர் இங்கு வந்திருந்தப்போ, இந்த டீமை பார்த்து ‘குட்டி கமாண்டோஸ்’னு பாராட்டினார்’’ என்கிறார் ஸதி முகம்கொள்ளா மகிழ்ச்சியுடன். இப்போது பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் குட்டி கமாண்டோ... அடுத்து கிரீன் கமாண்டோஸ்! - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி

‘`பல வடஇந்திய மாணவர்கள் பேருந்துகளே இல்லாத பகுதிகளிலிருந்து வர்றாங்க. கைக்காசைப் போட்டு அவங்களுக்குப் பயணச் செலவுக்கு உதவுறோம்; ஒரு சுகாதாரப் பணியாளரின் சம்பளத்தையும் நாங்க கொடுக்கிறோம். பள்ளிக்கு முதல் நாள் வரும் மாணவர்களை மாலை போட்டு வரவேற்போம். விவசாயம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துறதுக்காக, மாணவர்களின் பராமரிப்பில் ஒரு தோட்டம் அமைச்சிருக்கோம்’’ என்று சொல்லச் சொல்ல, நம் வியப்பு விரிந்துகொண்டே சென்றது.

‘`ஒவ்வொரு வகுப்பிலும் ஐந்து அம்மாக்கள் அடங்கிய அன்னையர் குழு அமைச்சிருக்கோம். மாணவர்களை நாளிதழ்கள், பத்திரிகைகள் படிக்கவைக்கிறோம். எளிதில் புரியவைக்கிறதுக்காக நாடகப் பாணியில் பாடம் நடத்தி, அதை யூடியூப்பில் அப்லோட் செய்வோம். அடுத்ததா, பிளாஸ்டிக்குக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவதற்்காக ‘கிரீன் கமாண்டோஸ்’ டீமை உருவாக்கப் போறோம்’’ என்று ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கை டானிக்கை தெளிக்கிறார் ஸதி.

காமராஜரின் வாழ்க்கையை மூச்சுவிடாமல் பேசி முடித்த ஒடிசாவைச் சேர்ந்த டோனக், “அப்பா கட்டட வேலை பார்க்குறாரு. நான் ஸ்கூலுக்கே போக மாட்டேன்னு நினைச்சேன். இப்ப, எல்லா சப்ஜெக்ட்லயும் 90 மார்க் வாங்குறேன். எங்க ஹெச்.எம் ரொம்ப நல்லவங்க. எல்லா டீச்சர்களும் அன்பா சொல்லிக் கொடுக்கறாங்க” என்றவனின் கண்களில் நம்பிக்கை ஒளி.