இதற்குப் பல ஆயிரம் ஆண்டு கால வரலாறு இருக்கிறது. சீனாவில் கிமு 200-ம் ஆண்டைச் சேர்ந்த சில குகை ஓவியங்களில் இது குறித்த ஓவியங்கள் இருக்கின்றன. புது இடங்களைத் தேடி, உணவைத் தேடி மனிதன் அலைந்துக் கொண்டிருந்தபோது அவன் பல நிலப்பரப்புகளைக் கடந்தான். பாதையற்ற பல மலைகளையும் கடந்தான். அந்த மலைகளைக் கடக்க அவன் பல பாறைகளில் ஏறினான். காலம் கடந்தன. தேடல் குறைந்தது. தேவை மறைந்தது. ஆனால், 19-ம் நூற்றாண்டில் ஆதிமனிதனின் அந்தத் தேடல் ஒரு பெரும் விளையாட்டாக உருவெடுத்தது. இன்று, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தப் போட்டி புதிதாக சேர்க்கப்படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. அது “ராக் க்ளைம்பிங்” (Rock Climbing).

ராக் க்ளைம்பிங்... மேல்நாட்டு விளையாட்டு. இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் மட்டும் தான் இருக்கும் என்ற எண்ணத்தில் தான் கூகுளில் தட்டினேன். ஆனால், ஆச்சர்யம் அது காட்டியது "சென்னை". செய்வது "ஃபிட் ராக் அரெனா" (Fitrock Arena).

சென்னை மந்தைவெளி, பள்ளிக்கரணை மற்றும் ஓஎம்ஆர் சாலையில் ஒன்று என மூன்று இடங்களில் இதன் கிளைகள் இருக்கின்றன. நகரத்தின் மத்தியில் எப்படி ராக் க்ளைம்பிங்? என்ன சுவாரஸ்யம் அதில் இருக்கிறது? என்பதைத் தெரிந்துகொள்ள ஃபிட்ராக் அரெனாவிற்கு ஒரு விசிட் அடித்தேன்.

மரக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததுமே அந்த உலகம் நம்மை அணைத்துக் கொள்கிறது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு என வண்ணமயமான சுவர். அதில் பல வண்ணங்களில் பிடிகள்...மொத்த இடத்திற்குமாக ஒரு பெரிய மெத்தை கீழே போடப்பட்டிருந்தது.

"கருண்...கோ ஃபார் ரெட்..." என்று அந்தப் பயிற்சியாளர் கீழிருந்து சொல்ல, 7 வயது கருண் நீல நிற பிடியிலிருந்து அப்படியே சிவப்பிற்குத் தாவுகிறான். அடுத்தடுத்து சிவப்புப் பிடிகளைக் கண்டுபிடித்து சுவர் ஏறுகிறான். முடித்ததும், பயிற்சியாளர் அவனை மெதுவாக கீழே இறங்கச் சொல்கிறார். இரண்டடிகள் இறங்கிவிட்டு, பின்னர் சட்டென்று மெத்தையில் குதித்து விடுகிறான். தான் தெரியாமல் கை நழுவி விழுந்துவிட்டதாக மெத்தையில் படுத்தபடி சொல்லி சிரிக்கிறான். கருணை தூக்கி எழுப்பிவிட்டு, சிரித்தபடியே நம்மோடு பேசத் தொடங்குகிறார் ஷ்யாம்...

'' ராக் க்ளைம்பிங் என்ன மாதிரியான ஒரு ஸ்போர்ட். ஃபிட்ராக் அரெனா என்ன மாதிரியான இடம்?''

" உலகின் மிக முக்கிய அட்வெஞ்சர் ஸ்போர்ட் வகைகளில் ஒன்று ராக் க்ளைம்பிங். இதில் முக்கியமாக மூன்று பிரிவுகள் இருக்கின்றன. பெளல்ட்ரிங் (Bouldering). இது 10லிருந்து 16 அடி வரையிலான சுவற்றில் ஏறுவது. அடுத்தது, "ஸ்போர்ட் க்ளைம்பிங்" (Sport Climbing). இது 30 அடி வரையிலான சுவற்றில் ஏறுவது. இறுதியாக, "ஸ்பீட் க்ளைம்பிங்" (Speed Climbing). இது 60 அடி வரையிலான சுவற்றில் ஏறுவது. இது மூன்றுமே "இன்டோர் ராக் க்ளைம்பிங்கில்" (Indoor Rock Climbing) செய்வது. நாங்கள் ஃபிட்ராக் அரெனாவில் இன்டோர் ராக் க்ளைம்பிங் செய்கிறோம். "

''இதற்கான ஐடியா எப்படி வந்தது?''

"நான் இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரத்தில் காலேஜ் படித்துக் கொண்டிருந்தேன். ஐரோப்பாவில் இது போன்ற இன்டோர் ராக் க்ளைம்பிங் ஜிம்கள் நிறைய இருக்கும். அதில் நேரம் செலவிடுவது எனக்கு ரொம்பவே பிடிக்கும். படித்து முடித்து சென்னை வந்ததும் ஒருநாள் என் நண்பன் சத்யநாரயணாவோடு இதுபற்றி பேசிக் கொண்டிருந்தேன். 'நாமே சென்னையில ஒன்னு ஆரம்பிக்கலாமே' என்று ஐடியா சொன்னான். அப்படித்தான் ஆரம்பித்தது. 2016ம் ஆண்டு மே 1ம் தேதி தொடங்கினோம் எங்கள் பயணத்தை."

''ஆரம்பித்தபோது வரவேற்பு எப்படி இருந்தது? இப்போது எப்படியிருக்கிறது?''

"தொடங்கிய காலத்தில் நிறைய பேருக்கு இது பற்றி தெரியாது. எங்கள் நண்பர்கள் நாலைந்து பேர் தான் மொத்தமே பயிற்சிக்கு வந்தார்கள். பின்னர், கொஞ்சம், கொஞ்சமாக தெரிய ஆரம்பித்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது சென்னையில் மட்டும் 3 கிளைகள் இருக்கின்றன. இப்போது, தினம் 100 பேர் வரும் அளவிற்கு வரவேற்பைப் பெற்றிருக்கிறது."

''இது முழுக்கவே இன்டோரில் மட்டும் தானா, இல்லை அவுட்டோர் பயிற்சிகளும் உண்டா?''

"பயிற்சிகள் முழுக்கவே இன்டோரில் தான் இருக்கும். நீண்டகாலம் பயிற்சிப் பெற்றவர்கள் அவுட்டோர் செல்வதும் உண்டு. சென்னைக்கு அருகில் என்றால் தாம்பரம் பகுதி, மகாபலிபுரம் போன்ற இடங்களில் பாறைகளில் ஏறுவோம். செஞ்சி, ஆந்திரா, கர்நாடகாவில் ஹம்பி, மணாலி எனப் பல இடங்களிலும் ராக் க்ளைம்பிங் செய்திருக்கிறோம்."

``இது எந்தளவிற்குப் பாதுகாப்பானது?''

"இன்டோர் முழுக்கவே மிகவும் பாதுகாப்பானதுதான். கீழே பெரிய மெத்தை இருக்கிறது. 30 அடி சுவற்றுக்கு, முழுக்கவே ரோப் கட்டி மிகவும் பாதுகாப்பான முறையில் தான் செய்கிறோம். அதனால், இன்டோரைப் பொருத்தவரைக்கும் 100 சதவீதம் பாதுகாப்பானது. அவுட்டோர் நல்ல பயிற்சிப் பெற்றவர்கள் மட்டுமே செய்யக் கூடியது. அதுவும் உரிய பாதுகாப்பு உபகரணங்களோடுதான் செய்கிறோம்."

``2020 டோக்கியோ ஒலிம்பிக் இதைப் புதிதாக சேர்த்திருக்கிறார்களே?''

"அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இது வெறும் அட்வெஞ்சர் ஸ்போர்ட் மட்டுமே கிடையாது. இதில் உடல் பலமும், மன பலமும் சரிசமமாகத் தேவைப்படும். இப்போது இந்தியாவில் நிறைய இடங்களில் ராக் க்ளைம்பிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாங்களும் கடந்த வருடம் நடத்தினோம். எங்கள் போட்டியில் வென்ற பரத் என்ற பெங்களூர் இளைஞர் இப்போது ஏசியன் கேம்ஸ் போயிருக்கிறார். இது ஒரு நல்ல தொடக்கம். இந்த விளையாட்டின் எதிர்காலம் வெகு சிறப்பாக இருக்கும். நம்மிலிருந்தும் இனி சர்வதேச வெற்றியாளர்கள் வருவார்கள். "

ஷியாமிடம் பேசி முடித்து வெளியே வரும் முன்னர் மஞ்சள் சுவற்றில், கருப்பு நிறத்தில் அந்த எழுத்துக்கள் கண்ணில்பட்டன.

“Winner is Coming”.

1. “மலை ஏற்றத்தில் உச்சியை அடைவது விஷயமில்லை. அதை எந்த வழியில் அடைகிறோம் என்பது தான் முக்கியம்.”

- ஜான் லாங் (John Long) - அமெரிக்க மலையேற்ற வீரர்.

2. “எந்த மலையின் உச்சியையும் அடையலாம். ஏறத் தொடங்கினால்...”

- பேரி ஃபின்லே (Barry Finlay) - எழுத்தாளர் மற்றும் மலையேற்ற வீரர்.

3. 18-ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “ராக் க்ளைம்பிங்” பிரபலமடைவதற்கு மூன்று முக்கிய இடங்கள் காரணமாக இருந்தன:

- எல்ப் சான்ட்ஸ்டோன் மலைகள், ஜெர்மனி. (Elbe Sandstone Mountains, Germany).

- லேக் டிஸ்ட்ரிக்ட், இங்கிலாந்து. (Lake District, England).

- டோலோமைட்ஸ், இத்தலி. (Dolomites, Italy).

4. இன்று இருக்கும் இதுபோன்ற “இன்டோர் ராக் க்ளைம்பிங்” சுவர்களை முதன்முதலாக உருவாக்கியவர் டான் ராபின்சன் (Don Robinson). இங்கிலாந்தின் லீட்ஸ் யூனிவர்சிட்டி பேராசிரியரான இவர் இந்த சுவர்களை 1964-ல் முதன்முதலாக நிறுவினார். இன்றும், உலகம் முழுக்க இவருடைய “DR Climbing Walls” தான் இன்டோர் ராக் க்ளைம்பிங் ஸ்போர்ட்டில் முன்னணியில் இருக்கிறது.