Published:Updated:

எனக்கு சோறுதான் எல்லாமே! - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி

எனக்கு சோறுதான் எல்லாமே! - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி
பிரீமியம் ஸ்டோரி
எனக்கு சோறுதான் எல்லாமே! - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள்கானப்பிரியா - படங்கள் : விகடன் போட்டோ டீம்

மிழகம் முழுவதிலுமிருந்து சிறந்த உணவு வகைகளை வழங்கி, மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருபவர்களைத் தேடிப் பிடித்து ‘யம்மி விருதுகள்’ அளித்து, தன் முதல் தடத்தைப் பதித்திருக்கிறது ‘அவள் விகடன் கிச்சன்’.

அழகிய மாலைப்பொழுதில், உற்சாகமாக அணிவகுத்து வந்த விருந்தினர்களுக்கு, பானகம், நெல்லிக்காய் மசாலா மோருடன் வரவேற்பு தந்தது யம்மி விழா. அந்தப் பதினைந்து விருதுகளில் ‘நம்ம ஃபேவரைட் ஹோட்டல் வருமா?’ என்பதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இன்சமாம் மற்றும் ஆனந்தின் ரேப் இசை, ஸ்டான்ட்அப் காமெடியன் பார்கவ்வின் நகைச்சுவைச் சரம், `அருண் தி மென்டலிஸ்ட் ஷோ' என வித்தியாச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விஜேவும் நடிகையுமான ரம்யா தொகுத்து வழங்க விருது விழா களைகட்டியது.

செட்டிநாடு சிக்கன் முதல் மதுரை ஜிகர்தண்டா வரை எண்ணிலடங்கா பிரத்யேக உணவு வகைகள் தமிழ்நாட்டில் உள்ளன. என்னதான் பீட்சா, பர்கர் என அப்டேட் ஆனாலும், நம்ம ஊரு பிரியாணி போல வருமா? அப்படி என்றைக்குமே பிரியாணி உலகில் தனித்து நிற்கும் திண்டுக்கல் வேணு பிரியாணிக்குத்தான், ‘சிறந்த பிரியாணி’ விருது அளித்துப் பெருமைப்பட்டது அவள் விகடன் கிச்சன்.

இந்த விருதைப் பெற்றுக்கொண்ட வேணு பிரியாணியின் நிறுவனர் வசந்தா, ``அறுபது வருஷமா இந்த ஹோட்டல் தொழிலை நடத்தி வருகிறோம். பல கஷ்டங்களை அனுபவிச்ச பிறகு இப்போ பல கிளைகள் தொடங்கியிருக்கிறோம்” என்று ஃப்ளாஷ் பேக் சொல்லி விழிநீருடன் வார்த்தைகள் வராமல் மகிழ்ச்சியில் உறைந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு சோறுதான் எல்லாமே! - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி

உணவு அடுக்கிய தட்டு எங்கு இருக்கிறது... அந்தத் தட்டில் என்ன இருக்கிறது போன்றவை எதுவும் தெரியாமல் கும்மிருட்டில் உணவு சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? இந்த இருள் த்ரில் அனுபவத்தை வழங்கும், ‘டயலாக் இன் தி டார்க்’ உணவகத்துக்குச் சிறந்த ‘தீம் ரெஸ்டாரன்ட்’ விருது அளிக்கப்பட்டது. “தமிழ்நாட்டில் இப்படி ஓர் அனுபவம் வேறு எங்குமே கிடைக்காது. இருட்டைப் பார்த்தா பயம்னு செல்லி வருவாங்க. ஆனா, வெளியே போறப்போ சந்தோஷமாதான் போறாங்க” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் இந்த உணவகத்தைச் சேர்ந்த ஜானகி. இங்கு வேலை செய்பவர்கள் பலரும் பார்வை குறைபாடு உடையவர்கள் என்பது கூடுதல் தகவல். இந்த விருதை வழங்குவதற்காக `கடைக்குட்டி சிங்கம்' தீபா மேடை ஏறியபோது, “எனக்கு சோறுதான் எல்லாமே. என் புருஷன்கிட்ட நகை கூட கேட்டதில்லை. சோறு போட்டா போதும்னுதான் சொல்லுவேன். என் ஹீரோவே இங்கதான் இருக்காரு” எனக்கூறி அங்கு அமர்ந்திருந்த செஃப் தாமுவைக் கைகாட்டினார். அதன்பிறகு அவர்களின் உரையாடல் மக்கள் அரங்கை சிரிப்பொலி அரங்காக மாற்றியது.

வெவ்வேறு உணவு வகைகளைத் தயாரிக்கும் உணவகத்துக்கு மட்டுமல்ல, எவ்வளவு உணவு எந்த நேரத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் எனப் பரிந்துரைக்கும், சிறந்த டயட்டீஷியனுக்கும் விருது வழங்கப்பட்டது. ``மதியம் பிரியாணி சாப்பிடணும்னா, காலையிலே பழங்களைச் சாப்பிடுங்க” என்கிற அட்வைஸுடன் ஆனந்தமாக விருதைப் பெற்றார் டாக்டர் தாரிணி கிருஷ்ணன். சுவையான உணவு வரலாற்று நூல்களுக்குச் சொந்தக்காரரான முகிலுக்கு `சிறந்த உணவு எழுத்தாளர்' விருதை வழங்கினார் ஓவியர் மணியம் செல்வன்.

என்னதான் சுவையாகச் சமைக்க முடிந்தாலும், அதை அழகுபடுத்துவது அவ்வளவு எளிதல்ல. ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்பதுபோல, ‘சுவை பாதி அலங்காரம் பாதி’ என உணவுக்கு அழகு சேர்த்துக்கொண்டிருக்கும் ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதாவுக்கு சிறந்த உணவு அலங்கார நிபுணர் விருதை ஓவியர் மருது மூலம் அளித்துக் கௌரவப்படுத்தியது அவள் விகடன் கிச்சன்.

`உலகத் தெருக்கடை உணவுகள்' என்கிற தீமில் அறுசுவை டின்னருடன் ‘யம்மி விருதுகள்’ ருசிகரமாக நிறைவடைந்தது!

எனக்கு சோறுதான் எல்லாமே! - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி