Published:Updated:

வெள்ளைக்காரனின் விமான நிலையத்தை சிதைத்த ஊர்!

வெள்ளைக்காரனின் விமான நிலையத்தை சிதைத்த ஊர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வெள்ளைக்காரனின் விமான நிலையத்தை சிதைத்த ஊர்!

வனம் ஈர்க்கும் கல்வியாளர். 'புது மலர்’ பதிப்பகத்தின் நிறுவனர். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் என்று இவருக்கு பல முகங்கள். ஈழத் தமிழர்களின் அவலங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் முன்நிற்கும் மனிதர்களில், இவருக்கு முக்கிய இடம் உண்டு. தன்னுடைய சொந்த ஊரான கண்ணம்பாளையம் பற்றிப் பேசுகிறார் கண.குறிஞ்சி!

வெள்ளைக்காரனின் விமான நிலையத்தை சிதைத்த ஊர்!
##~##

''கோவை மாவட்டம், சூலூரோட தெற்குப் பகுதியில் இருக்கிற கண்ணம்பாளையம் விவசாய மும் வீரமும் நிறைஞ்ச பூமி. இது போராளிகள் பிறந்த மண்ணு. ஆனா, குறிப்பிட்டுப் பெயர் சொல்ற அளவுக்கு வரலாற்றில நிறைய விஷயங்கள் பதிவுசெய்ய வாய்ப்பு இல்லாமப் போனது இந்த ஊரின் துரதிருஷ்டம். இப்ப விகடன் மூலம் கிடைச்ச வாய்ப்பா அந்த வரலாற்றை நான் பதிவுபண்றேன்.

வெள்ளைக்காரனின் விமான நிலையத்தை சிதைத்த ஊர்!

சுதந்திரப் போராட்டம் நடந்த சமயத்தில் வெள்ளைக்காரன் கண்ணுல விரலைவிட்டு ஆட்டுனாங்க இந்த ஊர் இளைஞர்கள். இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் சூலூரில் ஆங்கிலேயர்கள் விமான படைத் தளத்தைக் கட்டி இருந்தாங்க. இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த சமயம். கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த கே.வி.ராமசாமி, ஸ்டாலின் சின்னய்யன், காம்ரேட் கூத்தண்ணன் உள்பட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போய் சூலூர் விமான நிலையத்தைச் சூறையாடித் தீயிட்டு, ஓடு தளத்தைச் சிதைச்சுப் போட்டாங்க! அதுக்குப் பதிலடியா, நிறையப் பேரைக் கைதுசெய்து கண்களை எல்லாம் பிடுங்கி சித்ரவதை செய்தார்கள் வெள்ளைக்காரர்கள்.

கண்ணம்பாளையத்தில் கம்யூனிச இயக்கத்தின் தாக்கம் அதிகம். அதனால், விலைவாசி உயர்வு உட்பட எந்தப் பொதுப் பிரச்னைனாலும் போராடத் தயாரா இருப்பாங்க எங்க ஊர் மக்கள். கரிசல் பூமியான எங்க ஊரில் அந்தக் காலத்தில் பருத்தி விவசாயம் கொடிகட்டிப் பறந் தது. நிறைய வீடுகளில் பெரிய யானை யாட்டம் பருத்திப்  பொதிகிடக்கும்.அது மேல ஏறிக் குதிச்சு ஆட்டம் போடுவோம். ஆனா, பெரியவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா, நாங்க மேல ஏறி குதிக்கணும்னுதான் அவங்க அப்படி கட் டிப் போட்டு இருப்பாங்க. அப்பத்தான் பருத்தி மிருதுவாகிப் பஞ்சா மாறும்!  

பருத்தி தவிர கேழ்வரகு, தட்டப் பயிர், கொள்ளு எல்லாம் விளைஞ்சுகெடக்கும். சாப்பாட்டிலேயும் தானியம்தான் நாட்டாமை பண்ணும். எங்க ஆயா காலையில் எழுந்திரிச்சு கலகலனு கேழ்வரகுக் களி கிண்டி, உருட்டிக் கொடுத்தாங்கன்னா  வாயில் குதப்பிக்கிட்டுத் திரிவோம்.  முருங்கைக் கீரைக் குழம்பும், கொள்ளு ரசமும் நாலு கவளம் சோத்தை வயித்துக்குச் சேர்த்து இழுத்துப் போடும்! ஆனா, இன்னிக்குத் தானியங்கள் எல்லாம் காணாமப்போயிடுச்சு. பாதி வீடுகள்ல நூடுல்ஸும், உடனடி உப்புமாவும்தான் சமைக்கிறாங்க. பருத்தி விளைஞ்ச பூமியில் இன்னிக்கு விசைத் தறி ஓடுது.

வெள்ளைக்காரனின் விமான நிலையத்தை சிதைத்த ஊர்!

எங்க ஊர் கோயில் திருவிழாக்கள் படு விசேஷமா இருக்கும். அம்மன் கோயில் நோன்பு வந்தா ஊர் முழுக்க வெள்ளை அடிச்சு, வீட்டு வாசலெல்லாம் சாணி தடவி பளிச்னு மாத்திப்போடுவோம். பொழப்புக்கு வெளியூர் போன உறவு சனம் எல்லாம் மனசு நிறைய சந்தோஷத்தோட நோம்பிக்கு வந்து இறங்குவாங்க. தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் பூப்பறிக்கிற நோம்பி. கூடையில் கரும்பு, சர்க்கரைப் பொங்கல், தின்பண்டம் கட்டிக்கிட்டு கும்மிப் பாட்டும், கோலாட்டமுமா வயசுப் பொண்ணுங்க பூப்பறிக்கப் போகிற காட்சி அவ்வளவு அழகா இருக்கும்!

வெள்ளைக்காரனின் விமான நிலையத்தை சிதைத்த ஊர்!

என்னோட இத்தனை வருஷ வாழ்க்கையில் ஏகப்பட்ட ஊர்களைப் பார்த்துட்டேனுங்க. ஆனாலும் போராளி பூமியான என் கண்ணம்பாளையம் போல வேறு இல்லைங்க!''

சந்திப்பு: எஸ்.ஷக்தி
படங்கள்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு