Published:Updated:

கலெக்டர்களின் பேராசிரியர்!

கலெக்டர்களின் பேராசிரியர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ன் கலெக்டர் கனவு கைநழுவிப் போன ஏக்கத்தில் இன்று இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி அளித்து, ஏராளமான ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை உருவாக்கிவருகிறார் கோவையைச் சேர்ந்த பேராசிரியர் கனகராஜ்!

கலெக்டர்களின் பேராசிரியர்!
##~##

வழக்கமான படிப்புகளைப் போல இப்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கான பயிற்சியும் காஸ்ட்லியான விஷயம் ஆகிவிட்டது. ஆனால், கனகராஜ் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பயிற்சி அளிப்பது வரவேற்கத்தக்க ஒன்று.

''பள்ளியில் படிக்கும்போதே கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவிலேயே படித்தேன். டெல்லியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு இரவு பகலாக ஐ.ஏ.எஸ்ஸுக்காகப் படித்தேன். ஆனால், இரண்டு முறை நேர்முகத் தேர்வு வரை சென்று நூலிழையில் வாய்ப்பை இழந்தேன். 90-களில் இப்போது இருப்பதுபோல அப்போது  தமிழகத்தில் பயிற்சி மையங்களோ, புத்தகங்களோ இல்லை.

வயது ஒரு பக்கம் ஏறிக்கொண்டே போக... குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், நான் கட்டாயம் சம்பாதிக்க வேண்டும் என்கிற  நிலைக்குத் தள்ளியது. பி.ஹெச்டி. முடித்துவிட்டு கல்லூரிப் பேராசிரியர் பணியில் சேர்ந்துவிட்டேன். இப்போது கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல், அறிவியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறேன். வாழ்க்கையில் நாம் மிகவும் ஆசைப்பட்டதை அடைய முடியாவிட்டால், காலம் முழுக்க அது உறுத்திக்கொண்டே இருக்கும். அதற்கான வடிகால் அமையும் வரை அந்த உறுத்தல் தொடர்ந்துகொண்டே இருக்கும். அப்படி எனக்கு வடிகாலாக அமைந்ததுதான் இந்தப் பயிற்சிப் பள்ளி. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கிற ஏழை மாணவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம். அதுவும் சமீப காலமாக இதற்கான புத்தகங்கள், பயிற்சிக் கட்டணம், பெருநகரங்களில் தங்கிப் படிக்கும் விடுதிச் செலவு என, நிறைய செலவு பிடிக்கும் விஷயமாகிவிட்டது ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான படிப்பு.

அதனால் 2003-ம் ஆண்டு 'லட்சியம்’ என்ற பெயரில் கோவை-காந்திபுரத்தில் இந்தப் பயிற்சி மையத்தைத் தொடங்கினேன். இலவசம் என்று சொன்னபோது, ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை. ஐந்தாறு பேர் மட்டும்தான் வந்தார்கள். சொந்தச் செலவில் இதற்கான புத்தகங்களை வாங்கியும் அரசு நூலகத்தின் உதவியோடும் வகுப்புகளை நடத்தினேன். அடுத்த ஆண்டே என்னுடைய முயற்சிக்குப் பலன் கிடைத்தது. 2004-ல் என் பயிற்சி மையத்தில் படித்த சதீஷ் பாலன் என்பவர் ஐ.பி.எஸ். பாஸ் செய்தார். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது. சதீஷ் இப்போது ஹரியானா மாநிலத்தில் எஸ்.பி-யாகப் பணிபுரிகிறார்.

அதன்பிறகு ஐ.ஆர்.எஸ். மற்றும் குரூப் 2 தேர்வுகளில் என்னிடம் படித்தவர்கள் கணிசமான பேர் தேர்வானார்கள். 2008-ம் ஆண்டு அருள்குமார் என்பவர் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்தார். பின்பு ஐ.பி.எஸ். படிக்க விரும்பி, தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இப்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் பணிபுரிகிறார். அவர் டி.ஜி.பி. ராமானுஜத்தின் மருமகன். அதே ஆண்டில் அஜிதா பேகம் என்பவர் தமிழக அளவில் ஐ.பி.எஸ். தேர்வில் முதலிடம் பிடித்தார். தற்போது ஜம்மு-காஷ்மீரில் பணியில் இருக்கும் இவர்தான் தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து ஐ.பி.எஸ். தேறிய முதல் பெண்மணி!

கடந்த 2009-ம் ஆண்டு தியாகராஜன், அரவிந்த் குமார் ஆகியோர் ஐ.ஏ.எஸ். தேர்வாகி இருக்கிறார்கள். இதுவரை 25 பேரைத் தேர்வுகளில் வெற்றி பெறச் செய்துள்ளேன். நான் கலெக்டர் ஆகி இருந்தால்கூட இப்போது கிடைக்கும் மன நிறைவு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. என்னுடைய ஒவ்வொரு மாணவரும் தேர்ச்சி அடையும்போதும் நானே தேர்வானதுபோல் பூரிப்பு ஏற்படுகிறது. இந்தப் பூரிப்பு போதும் என் வாழ்க்கை முழுமைக்கும்!'' - நிறைவாகப் பேசுகிறார் பேராசிரியர் கனகராஜ்!

கலெக்டர்களின் பேராசிரியர்!
கலெக்டர்களின் பேராசிரியர்!
கலெக்டர்களின் பேராசிரியர்!

- ம.முரளிதரன்
படங்கள்: செ.பாலநாக அபிஷேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு