Published:Updated:

அந்த மோமோ யார்?

அந்த மோமோ யார்?
பிரீமியம் ஸ்டோரி
அந்த மோமோ யார்?

ஞா.சுதாகர்

அந்த மோமோ யார்?

ஞா.சுதாகர்

Published:Updated:
அந்த மோமோ யார்?
பிரீமியம் ஸ்டோரி
அந்த மோமோ யார்?

டந்த மாதத்தின் ட்ரெண்டி மெட்டீரியல் மோமோ சேலஞ்ச்தான். சிங்கிள்ஸில் இருந்து அங்கிள்ஸ் வரை எல்லோருமே மோமோவிடம் இருந்துவந்த மெசேஜ்களை ஸ்க்ரீன்ஷாட்களாக சோஷியல் மீடியாக்களில் சிதறவிட்டனர். சிலர் இதனை ஜாலியாக எடுத்துக்கொண்டு ரிப்ளை செய்தனர்; இன்னும் சிலர் சீரியஸாக எடுத்துக்கொண்டு அச்சப்பட்டனர். உண்மையில் மோமோதான் எல்லோருக்கும் மெசேஜ் செய்ததா? இல்லை.

அந்த மோமோ யார்?

நிஜத்தில் மோமோ என்பது ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ கிடையாது. இப்படி மறைமுகமாக பிறருக்கு மெசேஜ் அனுப்புபவர்கள், தங்களுக்கென வைத்துக்கொண்ட ஒரு பெயர்தான் மோமோ. அதற்காக வைத்துக்கொண்ட காமன் டிபிதான் அந்த கோர உருவம். இந்த கான்செப்ட் உலகம் முழுக்க பரவவே பலரும் மோமோ பெயரால், பிறருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினர். உங்கள் இன்பாக்ஸில் இருக்கும் மோமோ மெசேஜும் இப்படி வந்ததுதான். அனுப்பியது, உங்களுடைய நண்பர்களோ அல்லது உங்கள் மொபைல் எண் தெரிந்தவரோதான். இருந்தும் பலர் இதைக் கண்டு அச்சப்படக் காரணம் ஏதோ வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பிற்கு வந்த மெசேஜ்கள்தான். ஆனால், அந்த வெளிநாட்டு எண்ணை யார் வேண்டுமானாலும் மிக எளிதில் பெற்றுவிட முடியும். இலவசமாக வெளிநாட்டு எண்களிலிருந்து கால் செய்யவும், மெசேஜ் செய்யவும் நிறைய ஆப்கள் ப்ளே ஸ்டோரிலேயே இருக்கின்றன. இவற்றை இன்ஸ்டால் செய்து, வாட்ஸ்அப் இயங்குவதற்கு தேவையான ஒரே ஒரு OTP மட்டும் பெற்றுவிட்டால் போதும். டூப்ளிகேட் வாட்ஸ்அப் ரெடி. இந்த அக்கவுன்ட்டை சோதனை செய்வதற்காக, ஒரே ஒரு தற்காலிக மின்னஞ்சல் முகவரி தேவைப்படும். அதையும் இலவசமாக இணையத்தில் உருவாக்கிக்கொள்ளலாம். இனி அடுத்து டிபியில் மோமோ போட்டோ வைத்து, பெயரை மோமோ என மாற்றிவிட்டால், `ஒரு மோமோ அக்கவுன்ட்' ரெடி. இனி யாருக்கு மெசேஜ் அனுப்பினாலும், அனுப்புவது நாம்தான் என்பது யாருக்குமே தெரியாது. கிட்டத்தட்ட `சாரா' ஆப்பில் சாட் செய்வது போலத்தான். யார் என்பதை டிராக் செய்வதும் கடினம். சரி, மோமோ மூலம் மிரட்டல்கள் வரும், போன் ஹேக் ஆகும் எனச் சொல்வதெல்லாம்? வேறென்ன... சும்மா லுல்லுலாயிதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!