Published:Updated:

"நான்... ஜலகுல ஜலேந்திர சாமியார்!"

"நான்... ஜலகுல ஜலேந்திர சாமியார்!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ருப்பூரைத் தாண்டி புதுநல்லாம்கவுண்டப்பட்டியை பைக் கில் கிராஸ் செய்தபோது ஏகத்துக்கும் கூட்டம்... மிரள வைக்கும் பெருத்த உருவம் கொண்ட சாமியார் உட்பட மூன்று பேரை போலீஸார் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள்! உற்றுப் பார்த்தால் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பது... அட, கொங்கு முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளர் ராஜா அம்மையப்பன். பதறிப்போய் அருகே சென்று பார்த்தோம்.

"நான்... ஜலகுல ஜலேந்திர சாமியார்!"
##~##

அடையாளம் கண்டுகொண்டவர், ''என்ன தம்பி பயந்துட்டீங்களா? இப்ப அரசியல் மட்டும் இல்ல... சினிமாவுலயும் குதிச்சிட்டோமுல்ல!'' என்று நம்மை ஜெர்க் அடையவைத்தார். தொடர்ந்து அவரே, ''போன எலெக்ஷன்ல எங்க கட்சி தோத்துடுச்சு. கட்சியை விட்டா நமக்குப் பொழப்பு ஏது? வெட்டியா வீட்ல இருந்தேன். அப்பதான், 'புதிய பயணம்’, 'திருமங்கலம் பேருந்து நிலையம்’ படங்களை இயக்கிய ஆஷிஸ் மெகரா என்னைப் பார்த்து, 'உங்களைக் கூட்டத்தில பார்த்து இருக்கேன்; பேப்பர்ல பார்த்து இருக்கேன்; ஏன் போட்டோவுலகூட பார்த்து இருக்கேன். ஆனா, நேர்ல இப்பத்தான் பார்க் கிறேன். அப்படியே போலி சாமியார் மாதிரியே இருக்கீங்க. உங்களுக்கே உங்களுக்குனு ஒரு கதை இருக்கு. நீங்கதான் நடிச்சுத் தரணும். படத்தோட பெயர், 'வெச்சிக்கவா உன்னை மட்டும்!’னு கேட்டார். நானும் தாராளமா வெச்சிக்கோங்கனுட்டேன்!

"நான்... ஜலகுல ஜலேந்திர சாமியார்!"

படத்தில் நான் ஜலகுல ஜலேந்திர சாமியார். ஊரை ஏமாத்துற போலி சாமியார் வேஷம். நிஜத்தில் அவங்க என்னென்ன அக்கிரமம் பண்றாங்களோ அத்தனையையும் படத்துக்காகச் செய்யவெச்சார் இயக்குநர். அரசியலில் இருக்கிறதால் நடிப்புக்கும் நமக் கும் ரொம்ப தூரம். சொல்றதைத்தான் செய் வோம்; செய்யறதைத்தான் சொல்வோம். அதனால், என்னை நடிக்கவைக்கிறதுக்குள்ள... இயக்குநர் தலைகீழா நின்னு தண்ணி குடிக்க வேண்டியதாப் போச்சு!

படத்தில் ஓப்பனிங் சீன் தொடங்கி க்ளைமாக்ஸ் வரைக்கும் செம வில்லத்தனம் பண்ணி இருக்கேன். சத்யராஜ் சார் எல்லாம் பார்த்தார்னா மிரண்டுபோயிடுவார் .

எனக்கு ஒரு பாட்டும் இருக்கு. ஆனா, ரேப் சீனுக்கு மட்டும் 'நோ’ சொல்லிட்டேன். ஏன்னா, நாளைக்கே கட்சி ஃபார்ம் ஆகி, எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகிட்டேன்னா இமேஜ் கெட்டுடக் கூடாது பாருங்க. அதனால், ஹீரோ யினை கிட்-நாப் பண்றதோட சரி... மத்ததை எல்லாம் என் சிஷ்யர்கள்கிட்ட விட்டுட்டேன்.

என்னோட ஸ்டில்ஸை ஃபேஸ்புக்கில் பார்த்துட்டு 'அஞ்சல் துறை’, 'பதினெட்டுப்பட்டிதிரு விழா’னு ரெண்டு படங்களுக்கு புக் பண்ணிட் டாங்க. நண்பர்கள் எல்லாம் ஷூட்டிங்கில் என்னைப் பார்த்துட்டு அப்படியே ஆந்திர சாமியார் மாதிரி இருக்கேனு சொல்றாங்க. எங்க கட்சியில் இருந்தும் பாராட்டுகள் குவி யுது. பெஸ்ட் ராமசாமி, ஈஸ்வரன் எல்லாம் பாராட்டினாங்க. அவங்க பாராட்டை ஊக்கு விக்கிற விதத்தில் அடுத்து நான் தயாரிக்கப் போகும் 'தீரன் சின்னமலை’ படத்தில் பெஸ்ட்டுக்கும், ஈஸ்வரனுக்கும் நல்ல கேரக்டர் கொடுக்குலாம்னு இருக்கேன்!''

"நான்... ஜலகுல ஜலேந்திர சாமியார்!"

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு