Published:Updated:

ஆண்ட்ராய்டு ’பை’

ஆண்ட்ராய்டு ’பை’
பிரீமியம் ஸ்டோரி
ஆண்ட்ராய்டு ’பை’

மது ஸ்ரீதரன்

ஆண்ட்ராய்டு ’பை’

மது ஸ்ரீதரன்

Published:Updated:
ஆண்ட்ராய்டு ’பை’
பிரீமியம் ஸ்டோரி
ஆண்ட்ராய்டு ’பை’

ண்ட்ராய்டின் அடுத்த பதிப்பை வெளியிடத் தயாராகிவிட்டது கூகுள். இந்த ஆண்ட்ராய்டின் பெயர் ஆண்ட்ராய்டு பை (Pie). நம்மூரில் பேக்கரிகளில் தில் பசந்த் என்ற ஒரு இனிப்பு வகை கிடைக்கும். பையும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஓர் உணவு வகைதான். இந்த உணவு ஆராய்ச்சியை விடுத்து அப்படியே டெக்னாலஜி பக்கம் திரும்பினால் அங்கேயும் நிறைய சுவாரஸ்யங்களை வைத்திருக்கிறது கூகுள். ஆப்பிளின் iOS-ஐ இதிலும் காப்பியடித்திருப்பதாக கூறுகின்றனர் சிலர். ஆண்ட்ராய்டிலேயே iOS டச்சை கொண்டுவந்திருப்பதாகக் கூறுகின்றனர் சிலர்; எது உண்மை என்றால் இரண்டுமே உண்மைதான்.

பயனாளர்களின் விருப்பமான வசதிகள் எங்கிருந்தாலும் அதை அப்படியே காப்பியடித்து தங்கள் புராடக்ட்களிலும் கொண்டுவருவதுதானே டெக் நிறுவனங்களின் ஸ்டைல்? அதற்கு கூகுள் மட்டும் விலக்கா என்ன? இதைத் தாண்டி வேறென்னவெல்லாம் பை-ல் ஸ்பெஷல்?

போன் டிஸ்ப்ளே அணைந்திருந்தாலும் இன்னும் எந்தளவுக்கு சார்ஜ் மிச்சம் இருக்கிறது என்று பார்க்க முடியும். நிறைய ப்ளூ-டூத் சாதனங்களை இணைத்துக்கொள்ள முடியும். காரில் சென்று கொண்டிருக்கும்போது கால்-கள் ஆட்டோமேட்டிக்-காக ப்ளூடூத் ஸ்பீக்கருக்கு அனுப்பப்படும்.

ஆண்ட்ராய்டு ’பை’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்க்ரீன் ஷாட் எடுக்க ஒரு 'சாஃப்ட்' பட்டன் உண்டு. அதன்மூலம் ஸ்க்ரீன்ஷாட்-களை உடனுக்குடன் திருத்த (edit) இயலும்.

Swipe up on home screen என்ற வசதி ஒரு 'சாஃப்ட் ஹோம்' பட்டனைத் தருகிறது. இதை அழுத்தி  App-களுக்கு இடையே தடையின்றி சுலபமாக  navigate செய்யலாம்.

போனின் Notification களில்  எழுத்து மட்டும் வராமல் முழு இமேஜும் வரும்.

திரைகளின் முனைகள் சற்றே வளைந்திருக்கும் (Rounded corners) தோற்றம்

Text ஐ காப்பி செய்ய  select செய்கையில் அது ஜூம் செய்து காட்டப்படும்.

ஆண்ட்ராய்டு ’பை’

போனில் நீங்கள் பாட்டு கேட்டுக்கொண்டிருக்கும் போது வால்யூம்-ஐ குறைக்க விரும்பினால் போனின் பக்கவாட்டில் இருக்கும் hard button களை இயக்குவீர்கள். இது போனின் ஒட்டுமொத்த சிஸ்டம் வால்யூமை குறைத்து விடும். ஆண்டிராய்டு பையில் திரையில் உள்ள வால்யூம் பட்டன் மூலம் மீடியா வால்யூமை மட்டுமே அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.

App களுக்கு ஏற்ப பேட்டரி உபயோகத்தை நெறிப்படுத்தும் அம்சம். பேட்டரி செயல்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை நௌகட்டில் இருந்தே தொடர்ந்து செய்துவருகிறது கூகுள். பையிலும் அது மிஸ் ஆகவில்லை.
Pie-ன் இன்னொரு சிறப்பம்சம் இதில் செயற்கை நுண்ணறிவு Machine learning போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளன. நம்முடைய volume தேர்வுகள், திரையின் brightness தேர்வுகள் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு அதன்படி நடக்கும். இதனால் ஆண்ட்ராய்டு ஆப்கள், கூகுள் அசிஸ்டன்ட் போன்றவை இன்னும் சிறப்பாக செயல்படும்.

Display யை தேவைப்பட்டால் வெட்டும் Notch வசதி

ஓரியோவில் இருந்து பைக்கு நடக்கும் இந்த அப்டேட்டை ஆண்ட்ராய்டின்  முக்கிய அப்டேட் என்கிறார்கள். ஆண்ட்ராய்டு பை தனது பீட்டா டெஸ்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டது. Sony Mobile, Xiaomi, HMD Global, Oppo, Vivo , OnePlus போன்ற மொபைல்களின் ஹை எண்டு மாடல்களுக்கு இந்த வருட இறுதிக்குள் பை அப்டேட் கிடைத்து விடும் என்று நம்பலாம்.