Published:Updated:

நம்மை எதற்காக ஃபாலோ செய்கிறது கூகுள்?!

நம்மை எதற்காக ஃபாலோ செய்கிறது கூகுள்?!
பிரீமியம் ஸ்டோரி
நம்மை எதற்காக ஃபாலோ செய்கிறது கூகுள்?!

ஞா.சுதாகர்

நம்மை எதற்காக ஃபாலோ செய்கிறது கூகுள்?!

ஞா.சுதாகர்

Published:Updated:
நம்மை எதற்காக ஃபாலோ செய்கிறது கூகுள்?!
பிரீமியம் ஸ்டோரி
நம்மை எதற்காக ஃபாலோ செய்கிறது கூகுள்?!

ன்னும் சில மாதங்களில் 'சங்கமே அபாரதத்தில்தான்யா ஓடுது' என சுந்தர்பிச்சை ட்வீட்டினாலும் வியப்பில்லை; அந்தளவிற்கு வெவ்வேறு பஞ்சாயத்துகளில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது கூகுள்.

கூகுளின் சர்ச் இஞ்சினில் பயனாளர்கள் எதையாவது தேடும்போது, அதில் கூகுள் விளம்பர சேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து சர்ச் ரிசல்ட்களைக் காட்டிய குற்றத்திற்காக, ஐரோப்பிய யூனியன் அந்நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு 2.7 பில்லியன் டாலர்கள் அபராதமாக விதித்தது. இதுதவிர, இந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட இன்னொரு வழக்கிலும், கூகுள் 5 பில்லியன் டாலர்கள் அபராதம் கட்டவேண்டும் எனத் தீர்ப்பு வந்தது. இதுவரைக்கும் டெக் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபாரதம் இதுதான். இந்த சம்பவம் நடந்து ஓரிரு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே அடுத்த பிரைவசி பிரச்னையில் சிக்கியிருக்கிறது கூகுள். மொபைலில் லொக்கேஷன் செட்டிங்க்ஸை அணைத்து வைத்திருந்தாலும்கூட, கூகுள் நம்மை பின்தொடர்வதாகச் சொல்லி, சான்ஃபிராசிஸ்கோவில் புதிதாக வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சிக்கிய இரண்டு வழக்குகளுமே கூகுளின் பிசினஸ் மாடல் தொடர்பானது; அதனால் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்தமுறை சிக்கியிருப்பது மக்களின் பிரைவசி பிரச்னையில்; எனவேதான், இப்போது உலகெங்கும் இருந்து கூகுளாண்டவருக்கு 'அர்ச்சனைகள்' நடந்துகொண்டிருக்கின்றன.

நம்மை எதற்காக ஃபாலோ செய்கிறது கூகுள்?!

நம்முடைய இருப்பிடத்தைத் தெரிந்துகொள்வதற்காக, கூகுள் மேப்ஸ் ஆப் ஆனது மொபைலின் GPS சேவையைப் பயன்படுத்தும். இதை வைத்துதான் மற்ற ஆப்களும் நம்முடைய லொக்கேஷனைத் தெரிந்துகொள்ளும்; இதை நாம் விரும்பவில்லை என்றால் லொகேஷன் ஹிஸ்டரியை நிறுத்திவிடலாம். ஆனால், கூகுள் இதோடு நிற்பதில்லை. நாம் லொக்கேஷன் வசதியை நிறுத்திவைத்தாலும்கூட தொடர்ந்து நம் இருப்பிடத்தைக் கண்காணிக்கும். இதுதான் கூகுள் மீது தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு. இதனை ஆதாரபூர்வமாகவும் நிரூபித்துள்ளனர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.இது கோடிக்
கணக்கான ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல் என்கின்றனர் டெக்கீஸ். ஆனால்,கூகுள் இதற்கு தெளிவாக விளக்கமளித்திருக்கிறது. "லொக்கேஷன் ஹிஸ்டரியை ஆப் செய்துவைத்தால் டைம்லைன் மட்டுமே அப்டேட் ஆகாமல் இருக்கும். ஆனால், கூகுளின் மற்ற ஆப்கள் உங்கள் லொக்கேஷனை டிராக் செய்யும். அவை உங்களின் கூகுள் அக்கவுன்ட்டில் பதிவாகும். இதை நிறுத்த வேண்டுமென்றால் Web & App Activity என்ற ஆப்ஷனை நிறுத்திக்கொள்ளலாம்" என்றிருக்கிறது.

 கூகுள் இப்படி லொக்கேஷன் சார்ந்த விஷயங்களில் சிக்குவது முதல்முறையல்ல; மொபைலில் ஜி.பி.எஸ் வசதியை நிறுத்திவைத்திருந்தாலும்கூட கூகுளால் நம் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளமுடியும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்மை எதற்காக ஃபாலோ செய்கிறது கூகுள்?!

என்பதைக் கடந்த ஆண்டு தனியார் இணையதளம் ஒன்று வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அப்போது கூகுள், நம் மொபைல் போனின் டவர்களை வைத்து, நம்மை அடையாளம் கண்டுகொள்ளும் செல் ஐ.டி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. இந்த செல் ஐ.டி.யில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நம் மொபைலில் ஜி.பி.எஸ் செயல்படாதபோதுகூட நாம் எங்கிருக்கிறோம் என்பது கூகுளுக்கு தெரியும். மெரினாவுக்கோ, அண்ணா சமாதிக்கோ என்றால், அருகில்தான் எம்.ஜி.ஆர் சமாதி... பார்க்கலாமே எனப் பரிந்துரைக்கும். நாம் விரும்பாதபோது கூட இப்படி நம்மைப் பின்தொடர்வது எப்பேர்ப்பட்ட ஆபத்து? இதைக் கேட்டபோதுதான், "இந்த வசதியை கடந்த 11 மாதங்களாகத்தான் பயன்படுத்துகிறோம். உடனே நிறுத்திவிடுகிறோம்" என சமர்த்தாக பதில்சொன்னது கூகுள். எதற்காக செல்லுமிடமெல்லாம் நம்மை ஷெர்லக் ஹோம்ஸ் போல பின்தொடர்கிறது?

துல்லியமான விளம்பரம்; அதன்மூலம் வரும் வருமானம். இந்த இரண்டும்தான் முக்கியக்காரணம். இதற்காக நாம் எங்கே இருக்கிறோம், எங்கே செல்கிறோம் என்பது வரை நம்மைப் பற்றி துல்லியமாகத் தெரியவேண்டும். இதற்கு, எந்நேரமும் நம் கையிலேயே தவழ்ந்துகொண்டிருக்கும் மொபைலைவிட்டால் வேறு சிறந்தவழி என்ன? அதனால்தான் பிரைவசி குறித்த எந்தவொரு கவலையும் இல்லாமல், நம் மீது கண் வைக்கிறது கூகுள். சில ஆண்டுகள் முன்புவரைக்கும் இதுபோன்ற பிரைவசி பிரச்னைகள் வந்தால், பலவும் வெறும் சர்ச்சையுடன் ஓய்ந்துவிடவும், சில மட்டும்தான் நீதிமன்ற படியேறும்; ஆனால், இன்று ஐரோப்பிய யூனியன் மட்டுமின்றி, உலகம் முழுக்கவே பிரைவசி சார்ந்த விழிப்புஉணர்வு அதிகரித்துவிட்டதால், நிறுவனங்களுக்கு சிக்கல்களும் அதிகரித்துவிட்டன. கடுமையான அபாராதங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சுழலில் இப்போதைக்கு ஃபேஸ்புக்கும், கூகுளும் மட்டும்தான் சிக்கியிருக்கின்றன. வருங்காலத்தில் இந்தப்பட்டியல் இன்னும் நீளும்.