Published:Updated:

``தமிழ்நாடு கண்டுக்கல... கனடாவில் அழைக்கிறாங்க.." `ஷூட்டிங்' சகோதரிகள் வேதனை

``தமிழ்நாடு கண்டுக்கல... கனடாவில் அழைக்கிறாங்க.." `ஷூட்டிங்' சகோதரிகள் வேதனை

``கர்நாடகா, பஞ்சாப், ஹரியானாவுல ரெண்டு பேரையும் கூப்பிட்டுட்டே இருக்காங்க. அங்கெல்லாம் கோல்டு மெடலிஸ்ட்டுக்கு 5 லட்சமும் சில்வருக்கு 3 லட்சமும் ஊக்கத் தொகையா கொடுக்கிறாங்க. டி.எஸ்.பி கிரேடுல போஸ்ட்டிங் கொடுத்து பயிற்சிக்கு அனுப்புறாங்க. ஆனா, தமிழ்நாட்டுல ஜெயிச்சிட்டு வந்தாக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க."

``தமிழ்நாடு கண்டுக்கல... கனடாவில் அழைக்கிறாங்க.." `ஷூட்டிங்' சகோதரிகள் வேதனை

``கர்நாடகா, பஞ்சாப், ஹரியானாவுல ரெண்டு பேரையும் கூப்பிட்டுட்டே இருக்காங்க. அங்கெல்லாம் கோல்டு மெடலிஸ்ட்டுக்கு 5 லட்சமும் சில்வருக்கு 3 லட்சமும் ஊக்கத் தொகையா கொடுக்கிறாங்க. டி.எஸ்.பி கிரேடுல போஸ்ட்டிங் கொடுத்து பயிற்சிக்கு அனுப்புறாங்க. ஆனா, தமிழ்நாட்டுல ஜெயிச்சிட்டு வந்தாக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க."

Published:Updated:
``தமிழ்நாடு கண்டுக்கல... கனடாவில் அழைக்கிறாங்க.." `ஷூட்டிங்' சகோதரிகள் வேதனை

ஸ்ரீநிதி அபிராமி, ஸ்ரீநிதி மாளவிகா இருவரும் தென்றல்போல அமைதியாக இருக்கிறார்கள். கையில் துப்பாக்கியை ஏந்தியதும் பூவையர் இருவரும் புயலாய்ச் சுழல்கிறார்கள். இவர்களின் துப்பாக்கி முனையிலிருந்து வெளிப்படும் தோட்டாக்கள் ஒவ்வொன்றும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பரிசாய்க் குவிக்கின்றன. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் சகோதரிகள் இருவருக்கும் ஜூடோ, கராத்தே, செஸ், குங்ஃபூ, சிலம்பம், வில்வித்தை, பேட்மின்டன், அத்தலெட்டிக்ஸ் என அனைத்துமே கை வந்த கலை. 

``பொம்பளைப் பிள்ளைங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறது ஒரு தலைமுறைக்கே போய்ச் சேரும்'ணு பெரியவங்க சொல்லுவாங்க. ரெண்டு பிள்ளைகளும் பொண்ணாப் பிறந்துடுச்சேன்னு என் வீட்டுக்காரரு ஒரு நாளும் கவலைப்பட்டதில்ல. நமக்குத் தங்க மகளுங்க பிறந்துருக்காங்க. இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கப் போற, இந்தியாவுக்காகத் தங்கம் வாங்கிக் குவிக்கப்போற தங்கப் பொக்கிஷங்கள் பிறந்துருக்காங்கன்னுதான் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. 

`அம்மா, நீங்க ரெண்டு பேரும் இந்தியாவுக்காக விளையாடணும்மா. ஒலிம்பிக்ல கலந்துக்கணும். கலந்துக்கிறதோட நிறுத்திடாம மெடல் அடிக்கணும்மா. எம்பொண்ணுங்க ரெண்டு பேரும் ஜெயிக்கிறதை என் கண்ணால பாக்கணும்மா'னு ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி வளத்துருக்காரு. அப்பாவோட வார்த்தைய வேத வாக்கா எடுத்துக்கிட்டு பிள்ளைங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு விளையாடிட்டு இருக்காங்க. 23 வருஷத்துக்குப் பிறகு ஜூடோல மாளவிகாதான் பர்ஸ்ட் மெடலிஸ்ட். ஸ்டேட் லெவல் ஷாட் கன் போட்டியில 8 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்னு ஷூட்டிங்லயும் முன்னேறிப் போயிட்டே இருக்கா. அபிராமி பிஸ்டல் ஷூட்டிங்ல நேஷனல், இன்டர்நேஷனல் லெவல் வரை அச்சீவ் பண்ணிட்டு இருக்கா. இப்போ ரெண்டு பேருமே 2020 ஒலிம்பிக்ல விளையாடுறதுக்காக தீவிரமா ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்காங்க” மகள்களைப் பற்றிப் பெருமையோடு பகிர்ந்துகொண்டிருந்தபோதே லதாவின் குரலில் ஒரு இறுக்கம் வெளிப்பட்டது. 

``எனக்கு எப்படிச் சொல்றதுணே தெரியலைங்க. எம்பொண்ணுங்களோட இந்த வளர்ச்சிக்குக் காரணம் என் வீட்டுக்காரர் வெங்கடேஷ்தான். ஒரு தூண் மாதிரி நின்னு குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருந்தவரு இப்போ இடிஞ்சு போய் உக்காந்திருக்காரு. ஆமாங்க, தூரத்துல இருந்து பார்க்கிறவங்களுக்கு வேணா இதெல்லாம் பெருமையாத் தெரியலாம். ஆனா, தினம் தினம் வலியையும் வேதனையையும் தாங்கித் தாங்கி மனசு இறுகிப் போயிடுச்சுங்க. தமிழ்நாட்டுல திறமையோட பிறந்தா குப்பைக்குச் சமமாதான் கிடக்க வேண்டியிருக்கு. இப்போ வரை எந்த ஸ்பான்ஸர்ஷிப்பும் இல்லாமதான் ரெண்டு பொண்ணுங்களும் ஆளாகியிருக்காங்க. ஆரம்பத்துல இருந்தே நாங்களும் எங்களுக்குன்னு இருந்த அத்தனை சொத்துக்களையும் வித்துதான் பிள்ளைகளை ஒவ்வொரு காம்படிஷனுக்கும் அனுப்பி வைக்கிறோம். ஆனா, இதுக்குமேல விக்கிறதுக்குகூட எங்ககிட்ட எதுவும் இல்ல. அரசாங்கமும் எங்க பொண்ணுங்களை திரும்பிப் பார்க்கலை. அடிப்படையான சில விஷயங்களைக்கூட தமிழக அரசு எங்களுக்குச் செய்து கொடுக்கலை. சாதாரணமான விளையாட்டா இருந்தா நாங்களே மேனேஜ் பண்ணிடுவோம். ஆனா, ஷூட்டிங் கேம்ங்கிறதுனால எதுவுமே செய்ய முடியாம தவிக்கிறோம்ங்க. 

கர்நாடகா, பஞ்சாப், ஹரியானாவுல ரெண்டு பேரையும் கூப்பிட்டுட்டே இருக்காங்க. அங்கெல்லாம் கோல்டு மெடலிஸ்ட்டுக்கு 5 லட்சமும் சில்வருக்கு 3 லட்சமும் ஊக்கத் தொகையா கொடுக்கிறாங்க. டி.எஸ்.பி கிரேடுல போஸ்ட்டிங் கொடுத்து பயிற்சிக்கு அனுப்புறாங்க. ஆனா, தமிழ்நாட்டுல ஜெயிச்சிட்டு வந்தாக்கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாங்க. இப்போக்கூட கனடாவுல சிட்டிஷன்ஷிப் வாங்கித்தர்றோம். ஃபுல் ஸ்பான்ஸர்ஷிப் பண்றோம். எங்க நாட்டுக்காக வந்து விளையாடுங்கன்னு வற்புறுத்திக் கூப்பிடுறாங்க. ஆனா, ஸ்ரீநிதியோட அப்பாதான் விளையாடினா இந்தியாவுக்காகதான் விளையாடணும்னு சொல்லிட்டாங்க. அவங்க மட்டும் ஓ.கே சொன்னா அடுத்த வாரமே கனடா கிளம்பிடுவோம்” என்கிறார் ஆதங்கத்தோடு. 

``நாம பிறந்த மண்ணை விட்டுட்டு ஏதோவொரு நாட்டுக்காக பிள்ளைங்கள எப்படிங்க போய் விளையாட அனுமதிக்க முடியும். அவங்க பிறந்ததுல இருந்தே இந்தியாவுக்காக தங்கம் வாங்கப் போற குழந்தைங்கன்னு சொல்லிச் சொல்லி வளத்துருக்கேன். என்ன ஒண்ணு அவங்களுக்குத் தேவையான சில விஷயங்களைப் பண்ணிக் கொடுக்க முடியாம இப்போ உடைஞ்சு போயி உக்காந்துருக்கேன். அதைப் பார்த்துட்டு அவங்களும் கவனத்தை திசை திருப்பிடுறாங்க. இது மைண்ட் சம்பந்தமான கேம் இல்லைங்களா. அதனாலதான் நானும் எதையும் வெளிக்காட்டிக்காம இருக்கிறேன். ஆனாலும், எனக்கு முழு நம்பிக்கை இருக்குதுங்க. எம்பொண்ணுங்களை எப்படியாச்சும் ஒலிம்பிக்ல விளையாட வெச்சிடுவேன். இப்போ ஒரு லேண்ட் இழுபறியில இருக்கு. அதை சீக்கிரமே வித்துட்டா பணம் கிடைச்சிடும்ங்க. அதுக்கப்பறம் நல்ல நியூட்ரிஷனிஸ்ட், ஷூட்டிங் கன், ஃபிட்னஸ் ட்ரெயினர், கோச்னு பாத்துப் பாத்துப் பண்ணிடலாம். என் பொண்ணுங்களுக்காகவும் இந்தியாவுக்காகவும் நான் எதை வேணும்னாலும் இழக்கத்தயாரா இருக்கேங்க. எனக்கு எம்பொண்ணுங்களோட திறமை மேல நம்பிக்கை இருக்கு. அதுக்கு மேல வேற என்ன வேணும். நான் எதை இழந்தாலும் பரவாயில்ல. எல்லாத்தையும் திரும்ப சம்பாதிச்சிடுவேன். இப்போதைக்கு எம்பொண்ணுங்க ஒலிம்பிக்ஸ்ல கலந்துக்கணும். ஜெயிக்கணும். அவ்ளோதாங்க” நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளில் ஒளிர்கிறார் வெங்கடேஷ். 

வரும் 2020 ஒலிம்பிக் போட்டியில் ஸ்ரீநிதி சகோதரிகளின் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும். வெற்றி தேவதை அவர்கள் இருவரையும் ஆரத்தழுவுவாள்.