பார்த்தசாரதி சாமி சபாவின் தொடக்க விழா மேடையில் ஒரு பக்கம் சுதா ரகுநாதன், சௌம்யா, நித்யஸ்ரீ உட்கார்ந்து சிரித்துப் பேசி ஜாலி அரட்டையில் இருக்க, இன்னொரு பக்கம் உட்கார்ந்து இருந்த சீனியர் வயலினிஸ்ட் டி.என். கிருஷ்ணன் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். ''இன்றைய லேடி சூப்பர் ஸ்டார்களான சுதா, நித்யஸ்ரீ, சௌம்யா மூவரும் இப்படி ஒற்றுமையா சிரிச்சுப் பேசுவதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு... விதூஷிகளிடம் (பாடகிகளிடம்) தான் இந்த ஒற்றுமையைப் பார்க்க முடியும். வித்வான்களான எங்க ளிடம் இப்படி ஓர் ஒற்றுமை கிடையாது...'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் கிருஷ்ணன்!

நிஜமா?!

நாரத கான சபாவில் தொடக்க விழா சற்றே தாமதமாக முடிய, 7.45 மணிக்குத் தான் சாக்ஸபோன் கச்சேரிக்கு மேடை கொடுக்கப்பட்டது. கத்ரி கோபால்நாத் துக்கு வயலினில் துணை, ஏ.கன்யாகுமரி. ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேலின் தவிலுக்கு, பெங்களூரு அமிர்த்தின் கஞ்சிரா மற்றும் பெங்களூரு ராஜசேகர னின் மோர்சிங் துணைகள். (ராஜசேகர் மோர்சிங் வாசித்ததைவிட, தலை ஆட்டித் தாளம் போட்டுக்கொண்டு இருந்த நேரம் தான் அதிகம்!)

பகுதாரி, ஆரபி ஆரம்பத்தில். மூன்றாவ தாக கரகரப்ரியா. தியாகராஜரின் சக்கநி ராஜமார்கமுவை வாசித்துவிட்டு, மிஸ்ர சிவரஞ்சனியையும், கல்யாண வசந்தத்தை யும் கலந்துகட்டி ஸ்வரங்களையும் ஜெட் வேகத்தில் முடித்துவிட்டு, பழனிவேலின் 'தனி’க்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தார் கோபால்நாத்.

'ஐ.பி.எல். புகழ்’ கிரிஸ் கெய்ல் மாதிரி ஏ.கே.பி! முன்னவர் ரொம்ப மெனக்கெடாமல் சிக்ஸர்கள் அடிப் பதுபோல், பின்னவர் தவிலுக்கு வலிக் காமல் விரலில் சாகசங்கள் புரிவதில் கில்லாடி. ஆதி தாளம் இரட்டைக் களை. அதில், சதுஸ்ர, திஸ்ர, மிஸ்ர நடைகளில் தவழ்ந்து, நடந்து, தாவி ஓடி வெவ்வேறு வேகத்தில் பழனிவேல் தவிலில் சிலம்பாட்டம் ஆடுவதைக் கேட்கக் காதுகள் கோடி வேண்டும்!

நிற்க, நாரத கான சபாவில் கலைஞர்களுக்கு சன்மானம் உயர்த்தப்பட்டு இருக்கிறதாம். 65 முதல் 70 சதவிகிதம் வரை ஹைக்! ஹை!

கலாரசனாவுக்காக ராணி சீதை ஹாலில் தர்பாரில் சிறிது நேரத்துக்கு உலவிக்கொண்டு இருந்தார் இசை உலக இளவரசர் சஞ்சய் சுப்ரமணியன்.

கடந்த நவராத்திரியின்போது நடந்த ஒரு விழாவில், இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் தங்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டதும், ''சூப்பர் ஸ்டாரான சஞ்சய், கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம் உள்ளவர். இவரை சங்கீத உலகின் சச்சின் என்று அழைப்பதா அல்லது டிராவிட் என்று கூறுவதா என்று தெரியவில்லை!'' என்று அந்த விழாவில் மியூஸிக் அகாடமியின் தலைவர் என்.முரளி வியந்ததும் நினைவுக்கு வந்தது. சச்சின் பாதி, டிராவிட் பாதி கலந்த கலவைதான் சஞ்சய். முன்னவரின் ஜீனியஸ், பின்னவரின் கன்சிஸ்டென்ஸி இரண்டும் இவரிடம் உண்டு.

தர்பாரில் சக்கரவர்த்தித் திருமகனை, பாகவதர்களின் நேசனை, தியாகராஜரின் சார்பில் அழைத்தார் சஞ்சய்.

இரண்டு ராகங்களை விரிவாக்கம் செய்தார் அவர். ப்ரியதர்ஷினி, தோடி. எப்போதாவது கேட்கும் ராகம்தான் ப்ரியதர்ஷினி என்றாலும், பாடகர் படிப்படியாக அதை வளர்த்திச் சென்ற விதம், சங்கதிகளை அடுக்கடுக் காகப் பரவவிட்ட நேர்த்தி, சுருதியோடு இணைந்த கார்வைகள், மேல் ஸ்தாயியில் கொந்தளிப்பு இல்லாத பயணம்... ப்ரியதர்ஷினியுடன் கை குலுக்கச் செய்து, உச்சி முகரவைத்து, நட்பு மலரச் செய்துவிட்டார் சஞ்சய்!

தோடியை சஞ்சய் சூப்பராகப் பாடினார் என்று சொல்வது, சர்க்கரை இனிக்கும் என்று சொல்வது மாதிரி!

ராகம்-தானம்-பல்லவியில், சாரங்கா வைச் சாறுபிழிந்து தந்துவிட்டு, தானத்தை சஹானா, பைரவி, இந்தோளம் என்று ராகமாலிகையில் அவர் வழங்கியபோது ரசிகர்கள் உளம் மகிழ்ந்தது நிஜம்.

வயலின் எஸ்.வரதராஜன் மட்டும் 50, 60 வருடங்களுக்கு முன் வாசிக்க வந்திருந்தால், அன்றைய மேதைகளான அரியக்குடி, செம்மங்குடி, ஜி.என்.பி. போன்றவர்கள் லால்குடி, டி.என்.கிருஷ்ணன், எம்.எஸ்.ஜி. வரிசையில் வரதுவையும் சேர்த்துக்கொண்டு இருப்பார்கள்!

தஞ்சாவூர் ராமதாஸ் (மிருதங்கம்), திருப் பூனிதுரா ராதாகிருஷ்ணன் (கடம்) வாசித்த 'தனி’யைப் பாடகர் வெகுவாக ரசித்துப் பாராட்டிக்கொண்டு இருந்தார். வழிமொழி வோம்!

மெலடி ராணி பாம்பே ஜெயஸ்ரீ நளினகாந்தியில் 'நீவே கதி’ என்று முருகனிடம் சரண் அடைந்துவிட்டு (லால்குடி ஜெயராமனின் வர்ணம்), அடாணாவில் 'நீ இரங்கா எனில் புகல் ஏது?’ என்று பரிதவித்துவிட்டு (பாபநாசம் சிவன்) சீசனில் தன் முதல் கச்சேரியைத் தொடர்ந்தார். கலாரசனைக்காக.

சாக்பீஸ் எடுத்து ஒரு கோடு இழுப்பது போல், முதல் இழுப்பிலேயே வந்தார் ஐயா பிலஹரி. குழந்தைப் பருவத்து பிலஹரியை பெராம்புலேட்டரில் உட்கார வைத்து ஒரு ரவுண்ட் அழைத்து வந்தார் ஜெயஸ்ரீ. பிலஹரி வளர வளர, அதை ப்ரீ ஸ்கூலில் சேர்த்து, பின்னர் கே.ஜி-யில். ப்ளஸ் டூ போவதற்குள் புஷ்டியாக வளர்ந்துவிட, கல்லூரியில் சேர்த்துவிட்ட போது பிலஹரி முழு வளர்ச்சி அடைந்து இருந்தது. எதையும் அளவுக்கு மீறாமல் அமுதமாகவும் அழுத்தமாகவும் கொடுப் பது ஜெயஸ்ரீ ஸ்பெஷல்!

பிரதானமாக கரகரப்ரியா. புகுந்து புறப்பட. எக்கச்சக்க ஸ்கோப்கொண்ட ராகம். பாம்பே ஜெயஸ்ரீ இதைக் கையாண்ட விதம் வித்தியாசமாக இருந்தது. அதாவது, ராகத்தைப் படிப்படியாக வளர்த்திச் சென்று, முகேஷ் அம்பானி மாதிரி ஆர்ப்பாட்டமாக வானுயர அடுக்குமாடிக் கட்டடம் எழுப்பாமல், கட்டுக்கோப்பாக ஒரு 'வில்லா’ கட்டினார். சுற்றிலும் அழகான தோட்டம். அதில் பூத்துக் குலுங்கும் வாச மிகு மலர்கள். வாடாமல், வதங்காமல் ஜெயஸ்ரீ தோட்டத்துக் கரகரப்ரியா இன்னமும் மணம் பரப்பிக்கொண்டு இருக்கிறது. விசித்திரமான ரத்தினங்கள் இழைத்த பாம்பணையின் மீது ஸ்ரீராமனை அமர்த்தி, மெதுவாக ஆட்டும் லட்சுமணனின் பாக்கியமே பாக்கியம் என்று தியாகராஜர் பூரிக்கும் 'மித்ரி பாக்யமே பாக்யமு’ கீர்த்தனையை அனுபல்லவியில் ஆரம்பித்துப் பாடினார் ஜெயஸ்ரீ.

அதன் பிறகு, ஜி.என்.பி-யின் கண்டுபிடிப்பான சாரங்க தரங்கிணியில் (தர்மவதியின் ஜன்யம்) ராகம் - தானம் - பல்லவி யும் தானத்திலும் ஸ்வரங்களிலும் இணைந்துகொண்ட துர்காவும் லலிதாவும் வழங்கிய விதத்தில் குறை ஒன்றும் இல்லைதான் என்றாலும், ஜெயஸ்ரீயின் குரலில் ஒருவித அயர்ச்சி தெரிந்தது.

முல்லைப் பெரியாறு விவகாரம், அண்ணா ஹஜாரேயின் ஊழல் எதிர்ப்பு, லோக்பால் மசோதா, ஆவின்பால் விலை ஏற்றம்... இவை எதைப்பற்றியும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நாரத கான சபாவில் முழுக் கச்சேரியையும் ஜேசுதாஸ் முடித்தது ஆச்சர்யம்! பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இனி பாட்டு மேடையில் பேசப்போவது இல்லை என்று ஏதாவது சபதமோ?

அன்றைய மெயின் கோகிலப்ரியா ராகம். தியாகராஜர் பாடியிருக்கும் 'தாசரதே, தயாசரதே’ கீர்த்தனை. பதினோராவது மேள கர்த்தா ராகமாகிய கோகிலப்ரியாவைக் கையாள்வது கம்பி மீது நடப்பது மாதிரி. கொஞ்சம் அசந்தால் தோடி தலையை நீட்டும். ஜேசுதாஸ் பாடியபோது தோடி தலையை நீட்டியதோடு, எங்கிருந்தோ புன்னாகவராளி பாம்பாக ஊர்ந்து வந்து படம் எடுத்தது. வேறு வழி இல்லாமல், நாகை முரளிதரனும் வயலினில் மகுடி வாசிக்க வேண்டிதாயிற்று!

கடைசி முக்கால் மணி நேரம் ஜேசுதாஸ் பிராண்ட் துக்கடாக்கள். ஐயப்ப சாமி மீது பக்திப் பாடல்களைப் பாடும் சமயம் தன் ஒன்றரை வயதுப் பேத்தியை மேடைக்கு தூக்கி வரச் செய்து, செல்லமாக மடியில் உட்காரவைத்துக்கொண்டார் ஜேசுதாஸ். அந்த குட்டிக் குழந்தை, பக்கவாத்தியக் கலைஞர் களுக்கு சமர்த்தாக நமஸ்காரம் சொல்லிவிட்டு தாத்தாவின் மடியில் உட்கார்ந்தது... ச்சோ ஸ்வீட்!

வலது கை நடுவிரலில் நகச்சுத்தி கொடுத்த சுரீர் வலியைப் பொருட்படுத்தாமல் அபாரமாக மிருதங்கம் வாசித்த கே.வி.பிரசாத்துக்கு தனிப் பாராட்டு!

பாடகர் டாக்டர் ஆர்.கணேஷ், சமீப காலமாக பாகவதராக நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகளும் செய்துவருகிறார். உடையாளூர் கல்யாணராமன், முழு நேரமும் நாம சங்கீர்த்தனம். இவர்கள் இருவரையும் ஒரே சமயத்தில் மேடை ஏற்றியது முத்ரா. 'சங்கீதமும் சங்கீர்த்தனமும்’ என்று தலைப்பு. 'இரண்டும் வெவ்வேறு அல்ல; ஒன்றுதான்’ என்பதை ஆரம்பத்தில் நாமாவளி மாதிரி திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டு இருந்தார் கல்யாணராமன்.

சுலோகம் - கீர்த்தனை - நாமாவளி... என்ற வழக்கமான நாம சங்கீர்த்தன வரிசையில்தான் நிகழ்ச்சி பூராவும். அப்படி எனில், டாக்டர் கணேஷ§க்கு என்ன டியூட்டி? கல்யாணராம னுடன் சுலோகங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒரு சில கீர்த்தனைகளின்போது சத்தான சந்தானத்து சங்கதிகளுடன் ஆலாபனையும், ஓரிரு பாடல்களுக்கு நிரவலும், மோகனத்துக்கு ஸ்வரங்களும் பாடினார். மற்ற சமயம்கோரஸ்!

''நாங்க ராகங்கள வெறும் அஞ்சு நிமிஷத் துக்குப் பாடுவோம். அதுவே கணேஷ் மாதிரி வித்வான்கள் 50 நிமிஷத்துக்குப் பாடுவாங்க...'' என்றார் கல்யாணராமன்.

50 நிமிட ஆலாபனைக்குத்தான் வாலாயமான கச்சேரி இருக்கே? இந்த ஜுகல்பந்தி டைப் கூட்டணி எதுக்கு?

- டைரி புரளும்...