நீங்கள் சார்ந்துள்ள இயக்கம் பற்றி ஒருவர் குற்றச்சாட்டு வைக்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒன்று, அவருக்குப் பதில் சொல்வீர்கள்; இல்லையெனில் கடந்து செல்வீர்கள். ஆனால், தமிழக பி.ஜே.பி தலைவர்களிடம் ஒரு புதுப் பழக்கம் இருக்கிறது. பதிலும் சொல்லமாட்டார்கள்; உங்களைக் கடந்து செல்லவும் மாட்டார்கள். விளைவு, அந்தக் குற்றச்சாட்டை மாநிலமே சொல்ல ஆரம்பிக்கும். பாசிஸம் என்ற வார்த்தைதான் பிரச்னையா? அதற்கும், இன்னும் சில வார்த்தைகளுக்கும் என்னதான் அர்த்தம் சொல்லலாம். இதோ ஐடியாக்கள்...

பாசிஸம் (Facism):
ஜனநாயகத்துக்கு நேரெதிர் வார்த்தை இந்த பாசிஸம். தன் கருத்தை பொதுவெளியில் ஒருவர் பதிவு செய்தால், அதை தன் அதிகாரம் கொண்டு அடக்குவது; சமூக வலைதளங்களில் விமர்சனம் வைத்தால், கும்பலாகச் சேர்ந்து தாக்கி ‘தேசத் துரோகி’ என முத்திரை குத்துவது போன்றவை எல்லாம் பாசிஸத்தின் கீழ் வரும்.

நெப்போடிஸம் (Nepotism):
தன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நண்பர்களுக்காகவோ, உறவினர்களுக்காகவோ பயன்படுத்துவது நெப்போடிஸம். மகனின் பிசினஸுக்கு பல வகையில் உதவுவது, இன்னும் திறக்கவே திறக்காத நண்பரின் காலேஜுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுப்பது, அபத்தமாகப் பேசுபவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் நெப்போடிஸத்தின் கீழ் வரும்.

ரேசியலிஸம் (Racialism):
குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்மீது வெறுப்பைக் கக்குவது ரேசியலிஸம் எனப்படும். பெயரை வைத்தே தீவிரவாதி என முத்திரை குத்துவது, உணவுப் பழக்கத்தை வைத்து அவர்களைக் கீழ்மைப்படுத்துவது, பின்னர் வன்முறைக்கு உட்படுத்துவது போன்றவை எல்லாம் ரேசியலிஸத்தின் கீழ் வரும்.

டெஸ்போடிஸம் (Despotism):
தண்டனையைக் காட்டியோ, வன்முறையைக் காட்டியோ பயமுறுத்தி எதிர்க்கருத்தை இல்லாமல் செய்வது டெஸ்போடிஸம். எதிர்த்து கோஷம் போட்டால் கைது செய்வது, களத்தில் இறங்கினால் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி நூற்றுக்கணக்கான நாட்கள் உள்ளே வைப்பது, வழிக்குக் கொண்டுவர வருமானவரித் துறையை அனுப்பி வைப்பது போன்றவை டெஸ்போடிஸம் எனப்படும்.

டோட்டலிட்டேரியனிஸம் (Totalitarianism):
ஒரே இடத்தில் மொத்த அதிகாரத்தையும் குவித்துவைத்து மற்றவர்களைக் குரலில்லாமல் ஆக்குவதன் பெயர்தான் டோட்டலிட் டேரியனிஸம். மாநில அரசுகளின் கோரிக்கை களை கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவது, அவற்றின் உரிமைகளைப் பறித்துச் சுயாட்சியை கேள்விக்குள்ளாக்குவது போன்றவை இதன்கீழ் வரும்.

என்னாது, இதெல்லாமே பி.ஜே.பி-க்குப் பொருந்துதா? ஹலோ... நீங்களா ஏதாவது நினைச்சுக்கிட்டா அதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது! இதெல்லாம் அந்தந்த வார்த்தைகளுக்கான விளக்கம்தான்! நம்பலைன்னா டிக்ஷனரில பாருங்க!