Published:Updated:

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்!
நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்!

ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் (ஐஎஸ்பி) அனலிட்டிக்கல் ஃபைனான்ஸ் மையத்தின் நிர்வாக இயக்குநராகவும், உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை மத்திய அரசு நியமித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியை வகிப்பார். திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் இவர்.

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக தமிழர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்!

ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் (ஐஎஸ்பி) அனலிட்டிக்கல் ஃபைனான்ஸ் மையத்தின் நிர்வாக இயக்குநராகவும், உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், வங்கி, கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றுக்கான உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவராவார். 

கான்பூர் ஐஐடி மற்றும் கொல்கத்தா ஐஐஎம்-மின் முன்னாள் மற்றும் முதன்மை மாணவரான சுப்ரமணியன், சிகாகோவில் பி.ஹெச்டி பட்டம் பெற்றவர். செபி கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். பந்தன் வங்கி, தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம் மற்று ஆர்.பி.ஐ. அகாடமி ஆகியவற்றிலும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்.

வங்கி, சட்டம் மற்றும் நிதி, பொருளாதார வளர்ச்சி, கார்ப்பரேட் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இவர் நடத்திய ஆய்வுகள், உலகின் முன்னணி இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய பத்திரிகைகள் பலவற்றில் பொருளாதார கட்டுரைகளும் எழுதி வந்தார். இந்திய வங்கித் துறையை செதுக்கியதில் இவர் ஆற்றிய பங்கு சமூக தாக்கத்தைக் கொண்டதாக இருந்தது. 

முன்னதாக மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன், கடந்த ஜூன் 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2019-ம் ஆண்டு மே வரை இருந்தபோதும், ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக தமது பணியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து காலியாக இருந்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு பொருளாதாரத்துறை வல்லுநர்கள் சிலரது பெயரை மத்திய அரசு பரிசீலித்து வந்தது. உலக வங்கியில் இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக உள்ள பூனம் குப்தா மற்றும் ஹைதராபாத் இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஆகியோரது பெயர் முன்னிலையில் இருந்தது. 

இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு