Published:Updated:

வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தக வங்கி!

வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தக வங்கி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

றுமையில் வாடும் கல்லூரி  மாணவர்களுக்கு அந்தந்த செமஸ்டர் தேர்வுகளுக்கு உரிய பாடப் புத்தகங்களை அவர்களுக்கு இலவசமாக வழங்கி, அவர்களின் கல்வி பாதிக்காமல் உதவுகிறது தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் இருக்கும் 'கோபால்ராஜன் -மங்களேஸ்வர் புத்தக வங்கி’!

வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தக வங்கி!
##~##

கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று ஏழை மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று, அவர்களுக்குத் தேவையான, முழுப் பாடத் திட்டமும் பொருந்திய புத்தகங்களை இலவசமாக வழங்குவது இந்த வங்கியின் சேவை! இந்தப் புத்தக வங்கியை நிறுவி, 16 ஆண்டுகளாக நடத்திவரும் பொன்னுச்சாமி தாத்தாவின் வயது 82.

''தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் என் ஊர்.  1947-ம் வருஷம் உப்பு வியாபாரம் செய்றதுக்காகக் குடும்பத்தைக் கூட்டிட்டு தூத்துக்குடிக்கு வந்தேன். தூத்துக்குடியில் வாழும் கீழ ஈரால் மக்களின் நலனுக்காக, 'கீழ ஈரால் மகமை அறக்கட்டளை’யை ஆரம்பிச்சேன். நல்லா ஞாபகம் இருக்கு. 1976-ம் வருஷம். ஒரு ஏழை மாணவர், கல்லூரியில் படிக்கப் புத்தகம் இல்லாமல் ரொம்பச் சிரமப்பட்டார். எங்கெங்கோ அலைந்து திரிந்து இருக்கார். கடைசியா எங்ககிட்ட வந்தார். நாங்க பணம் வசூலிச்சு அவருக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத் தோம். கையில் வாங்கியதும் புத்த கத்துக்குள்ள முகத்தைப் புதைச்சுக்கிட்டு ஓவென அழுதுவிட்டார். 'வறுமையால் கல்வி தடைபடுறது எவ்வளவு கொடுமை யான விஷயம்’னு புரிஞ்சுது.

ஏழை மாணவர்களைத் தேடிப் பிடிச்சு புத்தகம் கொடுக்கணும்னு அப்போதான் முடிவெடுத்தேன். கஷ்டப்படுறாங்கனு கேள்விப்பட்டா, தேடிப் போய் உதவு வேன். நடுவில் என் குழந்தைங்களுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்க, நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை. என் ஆறு குழந்தைகளும் நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வந்தாங்க. அப்புறம் 1996-ல் புத்தக வங்கி தொடங்கினோம்.  முதல் வருஷத்தில் ஏழு மாணவர்களுக்கு மட்டும் புத்தகம் வாங்கிக் கொடுத்தோம். இரண் டாவது வருஷத்தில் 18, மூன்றாவது வருஷத்தில் 44-னு எண்ணிக்கை அதிகமா கிட்டே வந்தது. ஒவ்வொரு வருஷமும் ஜூன் மாசம் எல்லா கலை அறிவியல் கல்லூரி களுக்கும் போய் விண்ணப்பங்களைக் கொடுத்துட்டு வருவேன். கல்லூரிமுதல்வரே தகுதியான மாணவர்களின் பெயர்களைப் பதிவுசெய்து தருவார். கல்வியாளர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள்,இலக்கிய வாதிகள், பேராசிரியர்கள் கையால்மாணவர் களுக்குப் புத்தகங்களை வழங்கச் சொல் வோம். புத்தகங்களை வாங்கிச் செல்லும் மாணவர்கள், அதில் பெயர் எழுதக்கூடாது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அதைத்திரும் பத் தந்துடணும். இது ரெண்டு மட்டும்தான் நிபந்தனைகள்.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தக வங்கி!

இதுவரை தூத்துக்குடியில் 3,000 மாணவ - மாணவிகள் இந்தப் புத்தக வங்கி மூலமா பயன் அடைஞ்சிருக்காங்க. அப்படிப் படிச்சவங்கள்ல பலர் மருத்துவர், பொறியாளர், பேராசிரியர் களா இருக்காங்க. நம்மளால நாலு பேர் நல்லா இருக்காங்கனு நினைச்சா, கிடைக்கிற சந் தோஷமே தனிதான். என் வாழ்நாள் வரை இந்தப் புத்தக வங்கியைச் சிறப்பா நடத்துவேன். அதன்பிறகும் தொடர்ந்து நடத்தவேண்டியது இளைஞர்கள் பொறுப்பு!'' நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் பொன்னுச்சாமி தாத்தா.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தக வங்கி!

- மு.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு