Published:Updated:

எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி

எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி
பிரீமியம் ஸ்டோரி
எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி

எனக்குள் நான்

எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி

எனக்குள் நான்

Published:Updated:
எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி
பிரீமியம் ஸ்டோரி
எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி
எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி

திரைப்பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்த நீங்கள், அதேபோல திரைப்பின்னணி உள்ள குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டபோது என்ன உணர்ந்தீர்கள்?

நானும் மணியும் வெஜிடேரியன். எனக்கும் அவருக்கும் ஸ்மோக்கிங்கும் டிரிங்கிங்கும் பிடிக்காது. வழிபாடு பற்றி எங்களுக்கு ஒரே மாதிரியான நம்பிக்கை. அதே மாதிரி சாதி, சமயம் போன்ற விஷயங்களிலும் ஒரே மாதிரியான சிந்தனை. திரைப்பின்னணி என்பது, ஒரு போனஸ்தான். இப்படி எல்லாமே ரொம்ப அழகா அமைஞ்சது. ரொம்ப சொன்னா கண்ணுபட்டுடப்போகுது. இந்த வருஷம் எங்களுக்கு 30-வது கல்யாண நாள்.

மணிரத்னத்தின் படங்களில் காதல் எப்போதும் ஹைலைட்டாக இருக்கும். உங்கள் இருவரின் நிஜக்காதலின் பிரதிபலிப்புதான் அது என எடுத்துக்கொள்ளலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி

எடுத்துக்கலாம். இல்லை, அவருடைய கற்பனைனும் சொல்லலாம்! காதல் உணர்வு என்பதை வாழ்க்கையில அனுபவிச்சிருந்தா மட்டும்தான் வரும்னு இல்லை. சுற்றியிருக்கிற தைப் பார்த்தாலும், கற்பனை இருந்தாலும் வரும்னு நினைக்கிறேன். நிறைய பேர் இதே விஷயத்தை என்கிட்ட கேட்பாங்க. சில குடும்ப ரகசியங்களைச் சொல்ல முடியாது. அதை நீங்களே புரிஞ்சுக்கோங்க!

படத்தயாரிப்பு என்பது, பரபரப்பான வேலையாக இருக்கும். ஆனால், மணிரத்னம் வேலைகள் மட்டும் சத்தமே இல்லாமல் நடப்பது எப்படி?

ஏன்னா, அவர் மனசுக்குள்ளேயும் ப்ளான் பண்ணிப்பார். பேப்பர்லேயும் ப்ளான் பண்ணிப்பார். லோகேஷன்லயும் ப்ளான் பண்ணுவாரு. ஷூட்டிங்கில் முதல் நாள் அவர் கத்த ஆரம்பிச்சார்னா ரெண்டாவது நாள் அவருக்குத் தொண்டையே போயிடும். அதனால ரொம்பப் பரபரப்பா வேலைபார்த்து, அப்புறம் காஃப் சிரப் கொடுக்கிறதுதான் என் வேலை. வீட்டுக்குள்ள மணி சார் ரொம்ப அமைதியானவர். அவர் உண்டு அவர் வேலை உண்டுனு இருப்பார். அவருடைய சத்தத்தை யாருமே கேட்க மாட்டாங்க. ஏன்னா, அவருடைய குரல் நான்தான். அவருக்கு என்ன வேணும்னாலும் என் குரல்தான் சத்தமா இருக்கும். அவருடைய ஆரவாரம் நான்தான். நான் மட்டும் இல்லை. அவருடைய ஆபீஸ்ல அவருடைய குரலா நிறைய பேர் இருக்காங்க.

எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி

அவர் படங்களில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு நிறையவே இருக்கிறது. இது திட்டமிட்டுச் செய்யப்படுவதா அல்லது  நீங்கள் இருப்பதால் நடக்கிறதா?

அவருக்குப் பெண்கள் மீதுள்ள மரியாதை, அவங்க திறமை மீதான நம்பிக்கை... இதெல்லாம்தான் அதுக்குக் காரணம். கண்ணுக்கு எதிரில் காஸ்ட்யூம் டிசைனராக இருக்கட்டும், உதவி இயக்குநராக இருக்கட்டும், அவருடைய புரொடக்‌ஷன் டிசைனராகட்டும்... எல்லோருமே பெண்களா இருக்கிறதை நீங்க பார்க்கிறீங்க. அதுமட்டுமல்ல, எங்க ஆபீஸும் அப்படித்தான். எங்க ஆபீஸை மெயினா நிர்வகிக்கிறது நித்யா. அக்கவுன்ட்ஸ் சீஃப் சுந்தரி. அதுக்கெல்லாம் நான் காரணம் இல்லை. மணி சார், பெண்கள்மீது வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும்தான்.

எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி

சினிமா வாடை துளியும் இல்லாமல் நந்தனை வளர்ப்பது எப்படிச் சாத்திய மானது? உங்களுக்கோ, அவருக்கோ மகனை சினிமாவுக்குள் கொண்டுவரும் ஆசை இருக்கிறதா?

குழந்தைகளை நம்ம இஷ்டத்துக்கு இந்தக் காலத்துல வளர்க்க முடியுமா? நம்முடைய நம்பிக்கைகளையும் மூடநம்பிக்கைகளையும் நிச்சயமா குழந்தைகள்மேல திணிக்கவே கூடாது.

எங்க மகன் சினிமாவுக்குத் தான் வரணும்னு நாங்க சொல்லவே முடியாது. நந்தனை நாங்க அப்படி

வளர்க்கவே இல்லை. உண்மையைச் சொல்ல ணும்னா அவரை சினிமா வுக்குள் கொண்டுவர எனக்கு நிறைய ஆசை இருக்கு. நடிகரா, இயக்குநரா, தயாரிப்பாளரா வரணும்னெல்லாம் ஆசை. முதல் ரெண்டையும் அவர் வேண்டாம்கிறார். ஒருவேளை  தயாரிப்பாளரா வரலாம். அது என்னுடைய அல்ப ஆசை.  அவர் லண்டன்ல படிச்சிட்டிருக்காரு. அங்கே ரெண்டு, மூணு வருஷங்கள் வேலை செய்த பிறகு, இங்கே வந்து தயாரிப்பாளர் ஆவார்னு எனக்குத் தோணுது. நான் நினைக்கிறது ஒருவேளை தப்பாகூட இருக்கலாம்.

எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி

சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவலுட னான உங்கள் பந்தம் பற்றி..?

2009-ம்  வருஷத்துலயிருந்து சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஒரு தொடர்பா இருக்கோம். அது  நல்லதோர் அமைப்பு. அந்த அமைப்பை யாருமே கண்டுக்காம, சென்னையில ரொம்பவே உதாசீனப்படுத்தினாங்க. அதனால நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஃபிலிம் ஃபெஸ்டிவலைப் பெருசாக்கினோம். அதை வளர்த்து விட்டாச்சு. இனிமே, அதை அடுத்த தலைமுறை இளைஞர்கள் எடுத்துச் செய்யவேண்டியதுதான். நாங்க பின்னாடி உட்கார்ந்து பார்க்கணும்.

ஒரு நல்ல திரைப்பட விழா அது. அதற்கு முக்கியமா தங்கராஜ் என்கிற அதன் தலைவர்தான் காரணம்.

70 வயதானாலும் இளைஞரைப் போல வேலைசெய்வார். இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ்ல இருந்தெல்லாம் நல்ல நல்ல படங்களைக் கொண்டுவருவார். அதற்கேற்றார்போல சினிமா ரசனையுள்ள இளம் சினிமாவை ரசிக்கும் ரசிகர்கள் இருக்காங்க. அது ரெண்டும்தான் என்னை அங்கே ஈர்த்துச்சு. நான் சொன்ன மாதிரி, இந்த வருஷத்துலயிருந்து இளைஞர்கள் இதை எப்படி எடுத்துட்டுப் போறாங்கன்னு பின்னாடி உட்கார்ந்து பார்க்கப் போறேன்.

* `இன்றைய ஹீரோக்கள் யாரும் ஹேண்ட்ஸம்மாக இல்லை' என்று ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருந்தீர்கள். இன்றும் அதே கருத்துடன் இருக்கிறீர்களா?

* கமல் ரஜினி இருவரில் நீங்கள் யார் பக்கம்?

* 57 இயர்ஸ் யங் சீக்ரெட்ஸ்...

* திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறை....

* நட்பு வட்டம்...

இன்னும் பல விஷயங்களைப் பற்றி அடுத்த இதழிலும் பேசுகிறார் சுஹாசினி...

எங்க ஆபீஸ்ல எல்லாருமே பெண்கள்தான்! - சுஹாசினி

பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஆலிவ் ஆயில், லாவண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் மூன்றையும் சம அளவில் கலந்து தலையில் தேய்த்து, இரவு முழுக்க ஊற வைக்கவும். மறுநாள் காலையில் ஷாம்பூ வாஷ் செய்யவும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால்  பொடுகுத் தொல்லைக்கு `டாடா’ சொல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism