Published:Updated:

ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா

ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா
பிரீமியம் ஸ்டோரி
ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா

அழகை மெருகேற்றும் கலை

ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா

அழகை மெருகேற்றும் கலை

Published:Updated:
ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா
பிரீமியம் ஸ்டோரி
ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா

‘`திருமணத்தில் மணப்பெண்ணின் முக்கால்வாசி கவலை, மேக்கப் நன்றாக அமைய வேண்டுமே என்பதாகவே இருக்கும். ஸ்கின்டோனுக்குப் பொருத்தமான மேக்கப்பைத் தேர்வு செய்வதில்தான் இருக்கிறது அதன் உண்மையான வெற்றி’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா, இந்தத் துறைக்கு தான் வந்த கதையையும், மேக்கப்பைத் தேர்வு செய்யும் முறை பற்றிய தகவல்களையும் பகிர்கிறார்.

ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா

ஆர்வம் முதல் அடையாளம் வரை! 

இலங்கையில் பிறந்தேன். நான் சின்னப் பொண்ணா இருக்கும்போதே என் குடும்பம் சென்னைக்கு வந்து செட்டில் ஆகிடுச்சு. பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் அப்பாவின் வேலை காரணமா லண்டன் போயிட்டோம். எனக்குச் சின்ன வயசிலிருந்தே அழகியல் சார்ந்த விஷயங்கள் ரொம்பப் பிடிக்கும். என்னை அழகுபடுத்திக்கிறதுல ஆரம்பிச்ச ஆர்வம், இன்னிக்கு எனக்கான அடையாளமாக வளர்ந்திருக்கு.

லண்டனில் பயிற்சி

ஆரம்பத்தில் ஆடை வடிவமைப்பு செய்துட்டிருந்தேன். படிப்படியா மேக்கப்பிலும் ஆர்வம் அதிகரிச்சது. ஒரு கட்டத்தில், எனக்கான துறை இதுதான்னு முடிவுசெய்து லண்டனில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுக்கான சில கோர்ஸ்கள் படிச்சேன். அங்கே ஒரு விளம்பர நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைச்சது. என் குழந்தைகள் வளர வளர, அவங்களை நம் கலாசாரத்தோடு வளர்க்கணும்னு தோணுச்சு. சென்னையில் செட்டில் ஆகிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா

பார்லர், ஸ்டுடியோ... என்ன வித்தியாசம்?

சென்னைக்கு வந்ததும் ஒரு மேக்கப் ஸ்டுடியோவை ஆரம்பிச்சேன். ஆரம்பிச்ச புதிதில் பியூட்டி பார்லருக்கும் மேக்கப் ஸ்டுடியோவுக்குமான வித்தியாசத்தை மக்களுக்குப் புரியவைக்க நிறைய சிரமப்பட்டேன். பார்லர் என்பது நம் பிரச்னைகளைச் சரிசெய்யும் இடம்; மேக்கப் ஸ்டுடியோ என்பது அழகை மெருகேற்றும் இடம். இப்படி `மேக்கப் ஆர்ட்டிஸ்ட்' பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாததால், இதில் எனக்கான ஸ்கோப்பை வேறுவழிகளில் தேட முயன்றேன். மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பயிற்சி வகுப்புகள் எடுப்பது, விளம்பரங்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாகப் பணிபுரிவதுனு எனக்கான பாதைகளைப் போட்டுக் கிட்டேன்.

ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா

மக்களுக்குப் புரிஞ்சது... மதிப்பு அதிகரிச்சது!

நவீனத் திருமணங்களில் மெஹந்தி, சங்கீத், ரிசப்ஷன், முகூர்த்தம்னு நிறைய நிகழ்ச்சிகள், ஒவ்வொரு ஈவென்ட்டுக்கும் ஒரு காஸ்ட்யூம், மேக்கப்னு வழக்கம் வந்தது. இதன் பிறகுதான் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்கள் பற்றி மக்களுக்குப் புரிய ஆரம்பிச்சது. எங்களுக்கான தேவையும் மதிப்பும் அதிகரிக்கவும் செஞ்சது.

சவால்... சுவாரஸ்யம்! 


சின்ன விஷயத்தில் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த அழகும் கெட்டுடும் என்பதால், எந்த ஆடைக்கு எது பொருந்தும், நாம் செய்யும் மேக்கப் இந்த ஈவென்ட்டுக்கு பொருத்தமா இருக்குமா என்பதில் தெளிவும் கவனமும் இருக்கணும். நிறைய பெண்கள், ‘இந்த மேக்கப்தான் எனக்கு வேணும்’னு நிப்பாங்க. ஆனா, அது அவங்களோட ஸ்கின் டோனுக்குப் பொருந்தாது. அதைச் சொன்னாலும் ஏத்துக்கமாட்டாங்க. அவங்களுக்கு ட்ரயல் மேக்கப் செய்து, அவங்களுக்குப் பொருந்தும் மேக்கப்பை செய்துகாட்டி சம்மதிக்கவெச்சு திருப்திபடுத்துறது பெரிய சவால். சுவாரஸ்யமும் அதுதான்!

ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா

பட்ஜெட் மேக்கப்

இப்போ ஏர் பிரஷ் மேக்கப் மற்றும் ஹெச்.டி மேக்கப்தான் ட்ரெண்ட். இதுக்கான பட்ஜெட்டும் அதிகம். மேட் ஃபினிஷ் மேக்கப் மற்றும் ஜூயி மேக்கப் பட்ஜெட் ஃப்ரெண்ட்லியா இருக்கும். எந்த மேக்கப் தேர்வு செய்தாலும் ஹைலைட், கான்டோரிங் போன்றவற்றில் கவனமா இருந்தா சாதாரண மேக்கப்பி லும் மிளிரலாம்!

- சு.சூர்யா கோமதி

ஒரு சவால்... ஒரு சுவாரஸ்யம்! - மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா

குளிர்காலத்தில் உடலில் ஈரப்பதம் குறைந்து சருமம் வறண்டு போகிறதா? சோள மாவு - அரை டீஸ்பூன், கேரட் ஜூஸ் - 10 சொட்டுகள், பாதாம் எண்ணெய் - 10 டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் `பேக்’ போட்டு, அரைமணி நேரம் கழித்துக் கழுவவும். சரும வறட்சி நீங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism