Published:Updated:

ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்!

ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்!

ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்!

ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்!
ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்!

ன்றைய பிசினஸ் உலகம் பலவித மாற்றங்களைக் கண்டுவருகிறது. ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் (AI)என்று சொல்லப்படுகிற செயற்கை நுண்ணறிவினால் நம் சமூகத்தில் பலவிதமான மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எதிர்காலம் இன்னும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. பெரிய நிறுவனங்களை விட்டுவிட்டு, சிறிய நிறுவனங்களை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளன ஐ.டி நிறுவனங்கள். இவற்றைப் பற்றி நிபுணர்கள் பேசியதன் சுருக்கம் இனி...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்!

முதலில், ‘ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ் - வரப்பிரசாதமா அல்லது சாபமா’ என்கிற தலைப்பில் பேசினார் சென்னை வேல் டெக் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜாராம் வெங்கட்ராமன். அவர் பேசியதாவது:

‘‘கூகுளும், அமேசானும் செயற்கை நுண்ணறிவினை வைத்து நமக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்களை நம்மைவிட தெளிவாக உணர்ந்து வைத்துள்ளன. நாம் மறந்துபோன பல விஷயங்களை அமேசானின் அலெக்ஸா நமக்கு ஞாபகப்படுத்துகிறது. நெட்ஃப்ளிக்ஸ் நமக்குப் பிடித்த படங்களைப் பட்டியல் போட்டுத் தருகிறது. செயற்கை நுண்ணறிவினை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று, ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ்; இரண்டாவது, மெஷின் லேர்னிங்; மூன்றாவது, டீப் லேர்னிங். ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸின் பயன்பாடு சமீப காலத்தில் மிக அதிகமாக இருப்பதற்குக் காரணம், டேட்டா, வீடியோ, போட்டோக்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதுதான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக எடுத்த சில போட்டோக்களை கம்ப்யூட்டரின் உதவியுடன் யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் மாற்றிவிடுகிறார்கள். இதனால் பலவிதமான குழப்பங் களும், சர்ச்சைகளும் எழுகிறது. போட்டோவில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தை மனிதக் கண்களால் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால், செயற்கை நுண்ணறிவை வைத்து இந்த மாற்றத்தைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும்.

நம் அன்றாடப் பிரச்னை களுக்குப் பலவிதமான தீர்வுகளைத் தருகிறது. உதாரணமாக, விமான நிலையத்தில் ஒருவருடைய பாஸ்போர்ட்டை வைத்துத்தான் அவரைப் பற்றிய விவரங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், சீனாவில் கம்ப்யூட்டர் முன்பு முகத்தைக் காட்டினாலே போதும், அவர் தொடர்பான அத்தனை விவரங்களையும் தேடித் தந்துவிடும். இதுமட்டுமல்ல, மருத்துவத் துறை, கல்வித் துறை, நிதித் துறை என எல்லாத் துறை களிலும் செயற்கை நுண்ணறிவு பெரும் மாற்றங்களை உருவாக்கி வருகிறது. இந்த மாற்றங்களை வரப்பிரசாதமாக நாம் கருத வேண்டுமே தவிர, சாபமாகப் பார்க்கக் கூடாது’’ என்று பேசினார் அவர்.

ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்!

அடுத்து சென்னை ஐ.ஐ.டி-யின் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் பேராசிரியராக இருக்கும்    எ.தில்லை ராஜன், ‘இரண்டாம் நிலை நகரங்களில் ஐ.டி நிறுவனங் களுக்கான வாய்ப்புகள்’ என்பது பற்றிப் பேசியதாவது...

‘‘வருகிற 2022-க்குள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கு வதற்காக ரூ.10,000 கோடி செலவிடப்படவுள்ளது. நம் நாடு சுதந்திரமடைந்தபோது கனரகத் தொழில்கள் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்று நினைத்தோம். இனி, ஸ்டார்ட்அப் மூலம் புதிய பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பதே உண்மை.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப்பட்டு வரும் முதலீடு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 2005-07-ம் ஆண்டு களில் வெறும் ரூ.592 கோடியாக  மட்டுமே இருந்த முதலீடானது, இன்றைக்கு ரூ.7,224 கோடியாக உயர்ந்துள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்குவதில் நமது சென்னை நான்காம் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியான செய்திதான். என்றாலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிற ஏஞ்சல் நிறுவனங்கள் இந்தியாவில் 34% மும்பையிலும், 30% பெங்களூருவிலும், 19% டெல்லியிலும் உள்ளன. நம் சென்னையைப் பொறுத்தவரை, வெறும் 2% அளவுக்கு மட்டுமே ஏஞ்சல் நிறுவனங்கள் உள்ளன.

முன்பு பெரிய நகரங்களில் மட்டுமே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வந்தன. ஆனால், 2010 முதல் இந்தப் போக்கு மாறத் தொடங்கியிருக்கிறது. 2010-ல் இரண்டாம் நிலை நகரங்களில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெறும் 43-தான். அது 2015-ல் 875-ஆக உயர்ந்துள்ளது.  2010-ல் மூன்றாம் நிலை நகரங்களில் தொடங்கப் பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 5 மட்டுமே. இது      2015-ல் 130-ஆக உயர்ந்துள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரிய நகரங்களில் தொடங்கப்படும்போது சந்திக்கும் பிரச்னைகளைவிட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சந்திக்கும் பிரச்னை அதிகமாக இருக்கிறது. இதற்கான தீர்வினை நாங்கள் தந்து வருகிறோம்’’ என்று முடித்தார்.

ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்!

ஐ.டி நிறுவனங்கள் என்றாலே பெரிய நகரங்களில்தான் தொடங்கப் பட வேண்டும் என்பதில்லை. சிறிய நகரங்களில் ஐ.டி நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு குறித்துப் பேசினார் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இயக்குநராக இருக்கும் ராஜேந்திரன் தண்டபானி. அவர் பேசியதாவது...

‘‘பெரிய நகரங்களில் எல்லா பெரிய நிறுவனங்களும் குவிந்திருப்பதால், அவற்றில் வேலை பார்க்கும் நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லை. சிறிய அளவிலான அறைகள், போக்குவரத்து நெரிசல் எனப் பல பிரச்னைகளில் சிக்கி, வாழ்க்கையை அனுபவிக்க முடியாத நிலையில் பலர் இருக்கின்றனர். ஐ.டி நிறுவனங்கள் இனி சிறிய நகரங்களை நோக்கிச் செல்லும்பட்சத்தில், அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் இன்னும் மகிழ்ச்சியாக வேலை பார்க்க முடியும்.

இதற்கான முதல் முயற்சியை நாங்களே செய்திருக்கிறோம். தென்காசிக்குப் பக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் ஒரு கிளையை ஆரம்பித்திருக்கிறோம். சென்னையில் செய்கிற வேலையின் ஒருபகுதியை அங்கு செய்கிறோம். இப்போது அங்கு சில நூறு பேர் வேலை செய்கின்றனர். அடுத்துவரும் ஆண்டுகளில் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். இந்தப் போக்கினை எதிர்காலத்தில் எல்லா ஐ.டி நிறுவனங்களும் பின்தொடரவே வாய்ப்புகள் அதிகம்’’ என்றார்.

இந்த கான்க்ளேவ் நிகழ்ச்சியின் இறுதிப் பேச்சாக அமைந்தது ‘ரேஸ்’ பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான ‘ரேஸ்’ குமரன். அவர் பேசியதாவது...

ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்!

‘‘தஞ்சாவூர்தான் என்னுடைய சொந்த ஊர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் நான். பள்ளிப்படிப்பைக் கஷ்டப்பட்டு முடித்தேன். கல்லூரியில் சேர்ந்தபிறகு பலவிதமான பிரச்னைகள். ஒருவழியாகப் படிப்பினை முடித்துவிட்டு, நண்பர் தொடங்கிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வேலையில் நான் சந்தித்த அவமானம் என்னை தொழில் உலகுக்குத் தள்ளியது. சொந்தமாகத் தொழில் தொடங்கி, கடுமையாக உழைத்தேன். மருந்து உற்பத்தி செய்கிற நிறுவனத்தினைத் தொடங்கினேன். அதில் பெரும் வெற்றி கண்டேன். பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றுவந்த நான் இன்றைக்கு உலகின் சொகுசு கார்கள் அனைத்தையும் வைத்திருக்கிறேன். இதற்குக் காரணம், வெற்றி கண்டாக வேண்டும் என என்னிடத்தில் இருந்த வெறி. விடாமுயற்சி யுடனும், கடுமையாக உழைத்ததினாலும் எனக்கு இந்த வெற்றி நிஜமாகியிருக்கிறது. வெற்றியை நோக்கி நீங்களும் கடுமையாக உழைத்தால், உங்களாலும் வாழ்க்கையின் உச்சத்தை அடைய முடியும் என்பதில் சந்தேகமே இல்லை’’ என்று அவர் பேசி முடித்தவுடன், கான்க்ளேவுக்கு வந்திருந்த அனைவரும் அவரைக் கைதட்டிப் பாராட்டினர். லைஃப்டைம் பாசிட்டிவ் டாட்காம் மூலம் வெற்றி பெறும் கலையை எல்லோருக்கும் கற்றுத் தந்துவருகிறார் ‘ரேஸ்’ குமரன்.

ஆக, முதல் நாள் ஃபைனான்ஸ், இரண்டாம் நாள் பிசினஸ் என இரண்டு நாள்களும் கலகலவென முடிந்தது நாணயம் விகடன் கோவையில் நடத்திய கான்க்ளேவ்.

ஏ.ஆர்.குமார்

படங்கள்: க.தனசேகரன்