Published:Updated:

`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்!’ - நாதன் லயன் #AusvInd

`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்!’ - நாதன் லயன் #AusvInd
`நாளைதான் கிளைமாக்ஸ்; நம்பிக்கையுடன் இருக்கிறோம்!’ - நாதன் லயன் #AusvInd

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அடிலெய்டில் நடைபெறும் இந்தப்போட்டியில் இந்தியா அணி  இரண்டு இன்னிங்ஸிலும் முறையே 250, 307 ரன்களும் எடுத்ததுள்ளது. ஆஸ்திரேலிய அணி தனது  முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வரும் ஆஸ்திரேலியா நான்காம் நாள் ஆட்டநேர  முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. நாளை கடைசிநாள் ஆட்டம் எஞ்சியுள்ளது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்படுகிறது. 

நான்காம் நாள் ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன்,  “மைதானத்தின் தன்மை சற்று மாறி  இருக்கிறது வேகப்பந்துவீச்சாளர்களுக்குக் கடினமானதாக இருக்கும். பந்து நன்கு சுழலும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும். இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்து சுழற்பந்துவீச்சாளர்கள்  உள்ளனர். எங்கள் அணியில் உள்ள இடது கை பேட்ஸ்மேன்களுக்கு உண்மையில் சவாலானதாக இருக்கும்.   அக்டோபர் மாதம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி நாளில் உஸ்மான் கவாஜா 141 குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். அந்தப்போட்டியில் டிம் பெய்ன் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.  61 ரன்கள் குவித்து அணியை போட்டியில் வெற்றி பெற உதவினார். 

இந்தப்போட்டியிலும்  வெற்றிபெறுவோம் என நம்புகிறோம் உண்மையில் அது சிறப்பானதாக இருக்கும். நாளைய முதல் பந்து, முதல் ஓவர், முதல் மணிநேரம் எல்லாம் முக்கியமானது. நாங்கள் இளம்வீரர்களை கொண்ட அணியாக இருக்கிறோம். நாங்கள் பின் தங்கிய நிலையில் இருந்து ஒரு அணியாகக் கட்டியெழுப்புகிறோம் போராடுகிறோம். நாங்கள் உலகின் நம்பர் 1 அணியுடன் விளையாடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இதன்மூலம் நிறையவற்றை கற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவில் நான் ஆஃப் ஸ்பின் வீசுவதையே விரும்புகிறேன். அது இங்கு நன்கு வேலை செய்கிறது. சிறப்பாகப் பந்துவீச வேண்டும் என்று தான் எண்ணுவேன் அதனைத் தொடர்ந்து செயலாற்ற முயற்சி செய்து வருகிறேன் என்றார்.