Published:Updated:

வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!
பிரீமியம் ஸ்டோரி
News
வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

விழிப்பு உணர்வு

மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்பு உணர்வு சிறிய நகரங்களிலும்  உருவாகியிருக்கிறது என்பதை விழுப்புரம், கடலூரில் நாணயம் விகடனும், ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனமும் இணைந்து நடத்திய ‘மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்’ என்கிற நிகழ்ச்சியில் தெளிவாக உணர முடிந்தது.

வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

இந்த இரண்டு நகரங்களிலும் நடந்த கூட்டங்களில் ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவின் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி பேசினார். ‘‘நம் வாழ்க்கையில் நாம் அடைய நினைக்கும் ஆசைகளில் எது முக்கியமானது என முதலில் முடிவு செய்ய வேண்டும். அதனை அடைவதற்கு என்ன வழி என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு எந்த வகையான முதலீட்டின் மூலம் இந்த ஆசையை அடைய லாம் என்று தீர்மானிக்க வேண்டும். ஆனால், நாமோ முதலில் முதலீட்டைத் தேர்வு செய்கிறோம். திட்டத்துக்கேற்ற முதலீடுதான் சரியாக இருக்குமே தவிர, முதலீட்டுக்காகத் திட்டங்களைத் தேர்வு செய்யக்கூடாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

நம்மில் பலர் இன்னும்கூட அவசரகால நிதியை ஒதுக்கி வைக்காமலே இருக்கிறோம். கொஞ்சம் எமர்ஜென்ஸி ஃபண்ட், தேவையான அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் மெடிக்ளெய்ம் இன்ஷூரன்ஸ் என்பதைச் செய்துவிட்டு, மீதமுள்ள பணத்தை முதலீடு செய்ய ஒதுக்க வேண்டும். இப்படிச் செய்யும் முதலீடு பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தர வேண்டும். அரசுக்குச் செலுத்துகிற வரி போக லாபம் தருவதாக இருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் நிறைவேற்றுகிற ஒரு முதலீடு என்றால் அது மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே.

நம்மில் பலரும் முதலீடு என்று வரும்போது அதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்க மறுக்கிறார்கள். இன்று மரம் வைத்தால், நாளைக்கே பூ பூத்து, காய் காய்த்து, பழமாகப் பலன் கிடைத்துவிட வேண்டும் என்று நினைத்தால் நடக்குமா?

வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

எல்லாவற்றுக்கும் ஒரு கால அளவு இருப்பது போல, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கும் ஒரு கால அளவு உண்டு. எந்தக் காரணத்துக்காக முதலீடு செய்கிறோம் என்பதன் அடிப்படையில் என்ன வகையான திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்பதை முடிவெடுக்கலாம்” என மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் சாதகமான பல விஷயங்களை எடுத்துச் சொன்னார். 

அவருக்கு அடுத்தபடியாக பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன் பேசினார். ‘‘பங்குச் சந்தை யையும், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டையும் மிகவும் ரிஸ்க் வாய்ந்தது என்று சொல்லி நம் மக்கள் தவிர்க்கிறார்கள். நாம் தினமும் எட்டு மணி நேரம் ஏதோ ஒரு நிறுவனத்துக்கு வேலை செய்து சம்பாதிக்கிறோம்.ஆனால், காலை எழுந்தது தொடங்கி, இரவு தூங்கச் செல்கிற வரை பல நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களைப் பயன்படுத்தி, அந்த நிறுவனங்களுக்கு லாபம் சம்பாதித்துத் தருகிறோம். இந்த நிறுவனங்களின் பங்கை வாங்கினால், அவற்றுக்குக் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதி நமக்குக் கிடைக்கும். ஆனால், இந்த நிறுவனங்களின் பங்கை நாம் வாங்காமல் இருப்பதினால், நமக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை’’ என்று சொன்னதை முதலீட்டாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்பான விழிப்பு உணர்வுக் கூட்டங்கள் நடக்கும்போது, ஆண்கள் தங்கள் துணைவியுடன் வருவது ஆரோக்கியமான மாற்றம். இந்தக் கூட்டங்களுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

வேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

முக்கியமாக, கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியிருக்கின்றனர். கடலூரில் நடந்த விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் சி.கே காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரியில் படிக்கும் எம்.பி.ஏ மாணவர்கள் திரளாக வந்திருந்து முதலீட்டு நுட்பங்களை ஆர்வமுடன் கேட்டது குறிப்பிடத் தக்க விஷயம். இதுமாதிரி பிற கல்லூரி மாணவர் களும் செய்யலாமா?

- ஏ.ஆர்.குமார்

படங்கள்: தே.சிலம்பரசன், எஸ்.தேவராஜன்