Published:Updated:

நீலகிரி மலைகளைப் பாதுகாக்கத் தவறும் 2 காரணங்கள்! #InternationalMountainsDay

மலைகளின் அரசி என போற்றப்படும் நீலகிரி மாவட்டத்தில் மலைகள் பாதுகாக்கப்பட சர்வதேச மலைகள் தினமான இன்று உறுதி ஏற்போம்.

நீலகிரி மலைகளைப் பாதுகாக்கத் தவறும் 2 காரணங்கள்! #InternationalMountainsDay
நீலகிரி மலைகளைப் பாதுகாக்கத் தவறும் 2 காரணங்கள்! #InternationalMountainsDay

மலைகளின் முக்கியத்துவத்தையும், அது தாெடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாக்கவும் யுனொஸ்கோ அமைப்பு டிசம்பர் 11-ம் தேதியை சர்வதேச மலைகள் தினமாக கடந்த 2003-ம் ஆண்டு அறிவித்தது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தாெடரில், மலைகளின் அரசியாக போற்றப்படும் இயற்கை எழில் காெஞ்சும் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. மலைகள், அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட நீலகிரி மாவட்டம், தென்னகத்தின் நீர் தொட்டியாகவும் திகழ்கிறது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மலை மற்றும் வனப்பகுதிகளை அழித்து, சாெகுசு விடுதி, பங்களா என கட்டடங்கள் பெருகி வருகின்றன. இதன் எதிராெலியாக பருவ மழை குறித்த நேரத்தில் பெய்யாமல் போவதுடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மலைகள் பாதுகாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.  நீலகிரியில் மலைகளைப் பாதுகாப்பதில் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு சொல்லிக்காெள்ளும் அளவில் இல்லை என்றே சாெல்லலாம். இதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிட்டுச் சாெல்ல முடியும்.

முதலாவதாக நீலகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள். இரண்டாவதாக நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் ஊராட்சிக்குட்பட்ட தேவாலா மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பிரமாண்ட மலைத் தாெடர்கள். தங்கம் எடுப்பதற்காக சுரங்கங்கள் குடையப்படுவதைக் கூறலாம். இது சட்ட விரோதமாக செய்யப்படும் செயல். மலைப் பகுதியும், அதில் வாழும் உயிரினங்களும் பல்வேறு பாதிப்புக்குள்ளாகின்றன. மலைப் பகுதியில் உள்ள மரங்கள்தான் மழைப் பொழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. மலைகளில் உள்ள சோலைகள், மரங்கள் மழை பெய்யும் காலங்களில் நீர்களை சேகரித்து சிறிய நீரோடைகளாகவும், ஜீவ நதிகள் உருவாக காரணமாக உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தாெடரில், வன உயிரினங்கள் வாழும் சூழல் மண்டலமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. மேலும் தமிழகத்தின் உயர்ந்த சிகரமாக அழைக்கப்படுவது தொட்டபெட்டா மலை சிகரம். நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்கள் மலைகளை புனித ஸ்தலங்களாக பூஜித்து வந்துள்ளனர். குறிப்பாக மல்லேஸ்வரன் முடி தோடர்களின் புனித சிகரம், ரங்கசாமி முகடு இருளர்களின் புனிதமான மலையாக உள்ளது. மலைகளுக்கு மலை மாவட்டமான, நீலகிரி முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இங்கு மழை பெய்தால் தான் சமவெளி மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், நாமக்கல், பவானிசாகர், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நீர் பாசனம் செய்ய முடியும். இதன் மூலம் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இன்னும் சொல்லப் போனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்குகூட இங்கிருந்து நீர் சென்றடைகிறது. இத்தகைய நீலகிரியில் உள்ள மலைத் தாெடர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

நீலகிரி மலைத்தொடர் இமயமலைக்கு இணையான பழைமை வாய்ந்த மலைத்தொடர். இங்கு காணக்கூடிய அதிக வகை ஆர்கிட் மலர்கள், ரோடேரென்டரான், நீலகிரிதார் என்றழைக்கப்படும் வரையாடுகள் மிகவும் அபூர்வமானது. சமவெளி பகுதி பாறைகளைக் காட்டிலும், நீலகிரி மலையில் உள்ள பாறைகள் மிகவும் உறுதியானது. பருவமழைக்கு மலைகள்தான் முக்கிய காரணியாக உள்ளது. பருவமழை காலங்களில் வீசும் பலத்த காற்றைத் தடுத்து நிறுத்தும் அரணாகவும் மலைகள் உள்ளன. இந்த மலைகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மலைகள் குறித்த ஆய்வு, மலைகளின் நன்மைகள், மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் குறித்து அனைவரும் தெரிந்துகாெள்வதற்காகவே உலக மலைகள் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மலைத் தாெடரை பாதுகாக்கும் பணியை மத்திய, மாநில அரசாங்களும், பாெதுமக்களும், நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் முன்னெடுக்க வேண்டும்.