Published:Updated:

முந்தைய சாதனைகளை தகர்த்தெறிந்த `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' டிரெய்லர்!

ம.காசி விஸ்வநாதன்
முந்தைய சாதனைகளை தகர்த்தெறிந்த `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' டிரெய்லர்!
முந்தைய சாதனைகளை தகர்த்தெறிந்த `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' டிரெய்லர்!

முதல் 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற சாதனையை இதுவரை தக்கவைத்து வந்தது `அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படத்தின் டிரெய்லர். சமீபத்தில் வந்த `தி லயன் கிங்' படத்தின் டீஸர் மிக அருகில் வந்தாலும் இந்தச் சாதனையை முறியடிக்க முடியவில்லை. அதே அவெஞ்சர்ஸின் அடுத்த பாகமான `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' படத்தின் டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் சில தினங்களுக்கு முன் வெளியாகி இந்தச் சாதனையைத் தகர்த்தெறிந்துள்ளது. 

முதல் 24 மணிநேரத்தில் இந்த `எண்டு கேம்'  ட்ரெய்லர் யூடுயூப்பில் 43 மில்லியன் பேரும், ட்விட்டரில் 35 மில்லியன் பேரும், ஃபேஸ்புக்கில் 28 மில்லியன் பேரும் மொத்தமாக மற்ற அனைத்து தளங்களையும் சேர்த்து 289 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதற்கு முந்தைய பாகம் விட்டுச்சென்ற முடிவுதான் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. `அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படத்தின் டிரெய்லர் முதல் 24 மணிநேரத்தில் 230 மில்லியன் மக்கள் பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் டிஸ்னிக்குச் சொந்தமான 7 படங்கள் இந்த டாப் 10 லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளன.

முதல் 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரெய்லர்/டீஸர்:
1.அவெஞ்சர்ஸ் எண்டு கேம் - 289 மில்லியன்
2.அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்.- 230 மில்லியன் 
3. தி லயன் கிங் - 224 மில்லியன்
4. இட் -197 மில்லியன் 
5. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ட்ரெய்லர் 2 - 179 மில்லியன்
6.தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ் -139 மில்லியன்
7. தோர் ரக்னராக் - 136 மில்லியன்
8. பியூட்டி அண்ட் தி பீஸ்ட் - 127 மில்லியன் 
9. ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடாய்- 120 மில்லியன்
10.ஃபிப்டி ஷேட்ஸ் டார்க்கெர் - 114 மில்லியன்  

இந்தத் திரைப்படம் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.