Published:Updated:

தனிமைக்குத் தீர்வு கண்டுபிடித்தேன்!

தனிமைக்குத் தீர்வு கண்டுபிடித்தேன்!
பிரீமியம் ஸ்டோரி
தனிமைக்குத் தீர்வு கண்டுபிடித்தேன்!

சீனியர் நலன்

தனிமைக்குத் தீர்வு கண்டுபிடித்தேன்!

சீனியர் நலன்

Published:Updated:
தனிமைக்குத் தீர்வு கண்டுபிடித்தேன்!
பிரீமியம் ஸ்டோரி
தனிமைக்குத் தீர்வு கண்டுபிடித்தேன்!

கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இன்றைய நிலையில், முதியோர் நலனும் கேள்விக்குறியாகிவருகிறது. இதை அனைவரும் பிரச்னையாகப் பார்க்க, நிதி சாவ்லாவுக்கோ ஒரு பாசிட்டிவ் சிந்தனை தோன்றியிருக்கிறது. முதியோர் நலனுக்கான சேவைகளுக்காக ஓர் இணையதளத்தை ஆரம்பித்த இவர், அதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்திருப்பதுடன் அதில் லட்சங்களில் வருமானமும் ஈட்டிவருகிறார். பெங்களூரில் செயல்படும் இவருடைய silvertalkies.com இணைய தளத்தின் அலுவலகம் பல பெண் தொழில் முனைவோருக்குப் புதுவழி காட்டியிருக்கிறது. அதன் இணை நிர்வாகி பொறுப்பில் பரபரப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிதி சாவ்லாவிடம் பேசினோம்.

தனிமைக்குத் தீர்வு கண்டுபிடித்தேன்!

‘`நான் டெல்லி பெண். என் கணவரின் சொந்த ஊர் சென்னை. இப்போது நாங்கள் பெங்களூரில் வசிக்கிறோம். என் பெற்றோர், வயதான காலத்தில் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைக் கையறு நிலையில் பார்த்துக்கொண்டிருந்தேன். வேலை, தொழில் நிமித்தம் பெற்றோர்களைப் பிரிந்திருக்கும் பிள்ளைகளின் பொதுத் துயரம் அது. தங்கள் வாழ்நாள் அனுபவங்களையும் சுக துக்கங்களையும் பகிர்ந்துகொள்ள யாருமற்ற தனிமை தரும் மனஅழுத்தமே, அவர்களை வாட்டும் முதல் நோய். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகுமே! அவர்களின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்து, தங்கள் வயதினருடன் உரையாட அவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் என உணர்ந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


2014-ம் ஆண்டு, புனேயில் வசிக்கும் என் தோழி ரேஷ்மி சக்ரவர்த்தியுடன் இணைந்து, பெற்றோருடனான எங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்கும் உதவும் வகையில் தொகுத்து, வலைப்பதிவில் பதிவிட ஆரம்பித்தோம். அதைப் படித்த பலரும் பயனுள்ளதாக இருந்ததென மனமாரப் பாராட்டியதுடன், சீனியர் சிட்டிசன்களின் நலன்குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படியும் கேட்டனர். அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க ஓர் இணையதளத்தைத் தொடங்கினோம். அதன்மூலம், தனிமையில் தவிக்கும் சீனியர்களை ஒன்றிணைத்து நண்பர்கள் குழுக்களை ஆரம்பித்தோம். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஓரிடத்தில்கூடி தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள, பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள வழிவகை செய்தோம். ரோட்டரி கிளப்புக்குச் சொந்தமான நூலகம், கணிப்பொறி மற்றும் விளையாட்டுச் சாதனங்களை சீனியர்கள் பயன்படுத்தவும் அனுமதி பெற்றோம். இப்படி, அவர்களின் தனிமைத் துயரத்தை விரட்டும் வழிகளைக் கண்டறிந்து செயல்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றோம். 

தனிமைக்குத் தீர்வு கண்டுபிடித்தேன்!

உயில் எழுதுதல், வருமானவரித் தாக்கல் முதல் உடல், மன உபாதைகள் வரை முதியோர்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கும் வகையில் கலந்துரையாடல்களை நடத்துகிறோம். அதில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் வழிகாட்டுகிறார்கள். இணையத்தில் முதியோர் நலன் சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிடுகிறோம். இமயம் முதல் குமரி வரை 8,000-க்கும் மேற்பட்டோர் இவற்றைப் படிக்கின்றனர். உறுப்பினர் சந்தாவாக வருடத்துக்கு 2,500 ரூபாய் வசூலிக்கிறோம். இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை இலவச சேவைகளுக்காக உபயோகிக்க முடிகிறது. சென்னை உள்பட பல நகரங்களில் எங்கள் அமைப்பை நிறுவ எண்ணியுள்ளோம். எங்கள் பாதையைப் பின்பற்றி, இப்போது பெண் தொழில்முனைவோர் பலர் முதியவர்களுக்கான சர்வீஸ்களைச் செய்யக் களமிறங்கியிருக்கிறார்கள். இது, எங்களுக்குக் கூடுதல் சந்தோஷம்’’ என்கிறார் நிதி சாவ்லா, ஒரு முன்னோடிக்கான மகிழ்வுடன்!

``முதுமையை மறந்து புத்துணர்வுடன் செயல்படுகிறேன்'' என்கிறார், இந்த அமைப்பின் மூலம் பயனடைந்த 78 வயதாகும் பங்கஜம் பாலசுந்தரம்.

- ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர் 

படம் :  மதன்சுந்தர்

தனித்து வசிக்கும் சீனியர்களுக்கு...

 *   சமச்சீர் உணவும் வயதுக்கேற்ற உடற்பயிற்சியும் அவசியம்.

 *  மருந்து சாப்பிடும் வேளைகள், மருத்துவமனை அப்பாயின்ட்மென்ட் தேதிகள் போன்றவற்றை மொபைல் போனில் இருக்கும் ரிமைண்டர் ஆப்ஷனைப் பயன்படுத்தி நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

 *   மெடிக்கல் ஹிஸ்டரி ஃபைல்கள், மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட்டுகள், மருந்துச் சீட்டுகள் ஆகியவற்றை கோப்பில் சீராகப் பராமரிக்க வேண்டும்.

 *   ஆபத்து மற்றும் அவசர காலங்களில் அணுகவேண்டியவர்களின் (உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர் மற்றும் மருத்துவமனை) மொபைல் எண்கள் எழுதிய நோட்டை, வீட்டில் பொதுவான ஓர் இடத்தில் கண்ணில் படும் வகையில் வைத்திருக்க வேண்டும்.

 *   பாத்ரூம் சுவர்களில் நீண்ட கைப்பிடிகளை அமைப்பதால், வழுக்கி விழுவது, நிலைதடுமாறுவது போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கும்.

 *   ஏதேனும் ஆபத்து என்றால் மொபைல் போனில் உள்ள எச்சரிக்கை மணியைப் (Alarm Facility) பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பலரது மொபைலில் மணி ஒலிக்கச் செய்து உதவி கோரலாம். இந்த வசதியுடைய மொபைல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

 *   இந்த எச்சரிக்கை மணியில், வீட்டுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தின் எண்ணை முக்கியமாகச் சேர்க்க வேண்டும்.

தனிமைக்குத் தீர்வு கண்டுபிடித்தேன்!

முழங்கை, முழங்காலில் உள்ள கருமையை நீக்க, ஜவ்வரிசி மாவைத் தண்ணீர்விட்டு கூழாகக் காய்ச்சிக் கொள்ளவும். இத்துடன் அன்னாசிப்பழச் சாறு - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து முழங்கை, முழங்காலில் `பேக்’ போட்டு, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை 10 நாள்கள் தொடர்ந்து செய்துவர, கருமை நீங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism