Published:Updated:

தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு! - சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு! - சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு! - சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணத்தை 50 ரூபாயிலிருந்து ஐந்து மடங்கு உயர்த்தி, 250 ரூபாயாக அறிவித்துள்ளார்கள்.

இந்த உயர்த்தப்பட்ட கட்டணமான 200 ரூபாய்க்குக் கூடுதல் டிக்கெட் வழங்கப்படும். பழைய கட்டணமான 50 ரூபாயை மட்டும் செலுத்துபவர்கள், தாஜ்மஹாலை வெளியிலிருந்தபடி சுற்றிப்பார்க்க மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மொத்தமாக 250 ரூபாய்க்கு டிக்கெட் எடுப்பவர்கள் மட்டுமே நினைவுச்சின்னத்தை முழுமையாகக் கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுவார்கள். வரலாற்றுச்சின்னமான தாஜ்மஹாலில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுவதால், நினைவுச்சின்னத்துக்கு ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பதற்காக இந்த கடுமையான கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் ரூ.1,300 ஆக உள்ளது. சார்க் கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டணம் 540 ரூபாயிலிருந்து 740 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான்  உயர்த்தப்பட்டிருந்தது. அப்போது, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக்கட்டணம், 40 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.